வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன??? சூப்பரான திட்டம் தான்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வீட்டுக் கடன்களில் இருந்து வீட்டை பாதுகாக்க காப்பீடை பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய காப்பீடு பெரும் பொழுது வீட்டுக்கடன் பெரிய தொகையாக இருக்கும் போது, அதை வாங்கியவர் இறந்தாலும் கூட கவலைப்பட தேவையில்லை. அப்படி கடன் வாங்கியவர் இறக்கையில் அவர் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அந்த கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. வீட்டுக்கடனும் முழுவதுமாக அடைபடாத நிலையில் கடனில் உள்ள வீட்டையும் வங்கி கையகப்படுத்தாது.

 

வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாடு???

வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாடு???

ஆயுட் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பொதுவான காப்பீடு நிறுவனங்களும் இந்த விசேஷ திட்டத்தை வழங்க முடியும். காப்பீட்டு தொகையை முழுவதுமாக கட்டியோ அல்லது ப்ரீமியம் முறையில் தொகையை பிரித்து கட்டியோ, உங்கள் வீட்டுக் கடனுக்காக இந்த காப்பீட்டை பெற முடியும். பொதுவாக வீட்டிற்காக எவ்வளவு கடன் வாங்கியிருக்கோமோ அதே தொகைக்கு தான் இந்த காப்பீட்டு தொகையும் அமையும்.

முடிவு உங்கள் கையில்..

முடிவு உங்கள் கையில்..

ஒரு வேளை கடன் வாங்கியவரின் கையில் போதுமான தொகை இல்லையென்றால், உங்கள் வீட்டுகடன் தொகையை காப்பீட்டு ப்ரீமியத்தோடு சேர்த்து விடும் படி பல நேரங்களில் வங்கியே அறிவுறுத்துகின்றனர்.

இத்திட்டத்தில் உள்ள குறைகள்
 

இத்திட்டத்தில் உள்ள குறைகள்

இந்த திட்டத்தில், மீதமிருக்கும் கடன் தொகைக்கு மட்டும் தான் ஒவ்வொரு வருடமும் ப்ரீமியம் தொகை கணக்கிடப்படும். இதுவே இந்த திட்டத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. அதனால் நீங்கள் கட்ட வேண்டிய கடன் தொகை குறைய குறைய உங்களின் ப்ரீமியம் தொகையும் குறையும்.

திட்டத்தின் பயன்கள்

திட்டத்தின் பயன்கள்

இந்த திட்டத்தின் படி, கடன் வாங்கியவர் இறந்து விட்டால், மீதமிருக்கும் வீட்டு கடனை அடைக்க காப்பீட்டு தொகை கொடுக்கப்படும். இருப்பினும் ப்ரீமியம் தொகை அதிகமாக இருக்கும் வேளையில், கடன் வாங்கியவர் தீவிர நோய்வாய் பட்டாலோ அல்லது நிரந்தரமாக ஊனமடைந்தாலோ கடனை அடிக்க அவர் காப்பீடு நிறுவனத்தை நாடி வீட்டு கடனை அடைத்து விடலாம்.

ஆன்லைன் டெர்ம் திட்டம்

ஆன்லைன் டெர்ம் திட்டம்

இருப்பினும் சிறந்த திட்டத்துக்காக ஒப்பிடுகையில் டெர்ம் திட்டம் தான் சிறந்தாதாக விளங்குகிறது. தங்கள் வீட்டு கடனுக்காக காப்பீடு எடுக்க விரும்புபவர்கள், உருமாறும் விசேஷ வீட்டு கடன் பாதுகாப்பு திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரே தவணையில் பிரீமியத்தை அளித்திடும் ஆன்லைன் டெர்ம் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

சிறந்தது தான்...

சிறந்தது தான்...

வருடாந்திர புதுபிக்கப்படும் பாலிசி வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தை விட அதிக விலை உயர்ந்ததாக இருக்கும். அதற்கு காரணம் உங்கள் பாலிசியின் தொகை அதிகமாக இருப்பதாலேயே. அதனால் ஒரே தவணையில் பிரீமியத்தை அளித்திடும் டெர்ம் திட்டமே பரிந்துரைக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home Loan Protection Plan: Cover against home loan liability?

Purchasing insurance cover for protecting yourself against the liability of home loan i.e. a high ticket size loan in case of unfortunate event of death of the borrower makes sense.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X