சென்னை: எளிமையாகவும், பிரச்னையில்லாமலும் மற்றும் சிறு சிறு காரணங்களுக்காக சேவை வரி செலுத்தாமல் தவிர்ப்பதற்காகவும் வருமான வரித்துறையினர் மத்திய கலால் மற்றும் சேவை வரி தானியக்கப் பிரிவை (Automation of Central Excise and Service Tax) விரிவாக்கம் செய்துள்ளனர். சேவை வரியை செலுத்தத் தகுதியானவர்கள் அறிய வேண்டிய பல்வேறு விதிமுறைகள் மற்றும் இணக்கமான நெறிமுறைகளை தெளிவுபடுத்தும் வகையில் மிகவும் புதியதாக இல்லாத மற்றும் இணைய வழியாக ஒரே இடத்தில் சேவை வரியை செலுத்தும் வழிமுறைகளை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது.
சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவருமே சேவை வரியை செலுத்த வேண்டும். மேலும், சில நேரங்களில் சேவைகளை பெறுபவர்கள் சேவைகளை அளிப்பவர்களின் சார்பாக சேவை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
10 லட்சம் வரை..
எனவே, பட்டியலில் உள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் 10 லட்சத்திற்கும் அதிகமான சேவை மதிப்பை பெற்றிருந்தால் சேவை வரியை செலுத்த வேண்டும். இந்த பட்டியலில் தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF), நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு பங்கீடுகள் (LLP), மனிதர்களின் கூட்டமைப்பு (AOP), தனிநபர்களின் அமைப்பு (BOI), உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவர்கள் அடங்குவார்கள்.
சேவை வரி எண்
நீங்கள் சேவை வரி செலுத்துவதற்கான தகுதியை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், நீங்கள் அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்டு, சேவை வரி எண்ணைப் பெற வேண்டும். சேவை வரி செலுத்துவதற்காக செலவாகும் கட்டணத்தையும் சேவை வரி செலுத்தும் போதெல்லாம் குறிப்பிட்டு காட்ட வேண்டும்.
ACES-ல் பதிவு செய்தல்
சேவை வரி எண்ணைப் பெற்ற பின்னர் ACES-ன் இணைய தளமான https://www.aces.gov.in/-ல் உங்களை பதிவு செய்வதன் மூலம் சேவை வரியை இணைய வழியில் செலுத்த முடியும். இந்த இணைய தளம் ஒரு பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவுச் சொல்லை (Password) உருவாக்கி உங்களுடைய சேவை வரி கணக்கை பராமரிக்கும்.
ST-3 படிவம்
சேவை வரியை தாக்கல் செய்ய ST-3 என்ற படிவத்தை பயன்படுத்த வேண்டும். அரையாண்டுக்கு ஒரு முறை ST-3 என்று வடிவமைக்கப்பட்டுள்ள சேவை வரி படிவத்தை நிரப்பி சேவை வரியை செலுத்த வேண்டும். மேலும், இந்த படிவத்தை Ms-Excel-லிலும் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப முடியும். இந்த வசதியை நாம் பயன்படுத்தும் போது, தாக்கல் செய்யும் படிவம் சரிபார்க்கப்படவும் மற்றும் உறுதி செய்யப்படவும் வேண்டும். இணைய தளத்தில் இறுதியாக பதிவேற்றம் செய்யும் முன்னர், குறிப்பிட்டு காட்டப்படும் தவறுகள் அனைத்தும் திருத்தப்பட வேண்டும்.
பணத்தை திரும்ப பெறுவது எப்படி???
பணத்தை திரும்ப பெறுவதற்காக (Claiming Refund) ACES செய்துள்ளது. இதன் மூலம் ACES வசதியைப் பயன்படுத்தி சேவை வரி பணத்தை திரும்பப் பெறவும் (Refund) முடியும்.
மாற்றங்கள்
சேவை வரியை செலுத்திய பின்னர் ஏதாவது மாற்றங்கள் செய்ய விரும்பினால் அவற்றை 3 மாதங்கள் அல்லது 90 நாட்களுக்குள் செய்ய வேண்டும். இந்த காலகட்டத்திற்குப் பின்னர், உங்களுடைய கணக்கு மதிப்பீட்டிற்கு அனுப்பப்படும். எனினும், வரி செலுத்துபவரின் வசதிக்காக, மாறுதல் செய்யப்பட்ட வரியை செலுத்தும் வசதியும் உள்ளது.
வரி செலுத்துதல்
சேவை வரியை ACES கொடுத்துள்ள படிவம் (Challan) வழியாக தான் நிரப்பி செலுத்த வேண்டும். வரியை செலுத்த வசதியாக வங்கிகளும் கூட, இந்த வசதியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் அளிக்கின்றன.
உங்கள் வரி நாட்டை வளர்க்கும்
இந்திய அரசாங்கத்தின் சேவை வரிக்கான இந்த இணைய தளம் உங்களுடைய சேவை வரியை எளிதாக செலுத்த உதவுகிறது. வரி செலுத்துங்கள், நல்ல குடிமகனாக உயருங்கள்.


Click it and Unblock the Notifications