வேலை பறிபோனதா..? கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பா..?

சென்னை: 'பணம் பத்தும் செய்யும்' இந்த வாக்கியம் சரி தான். பணமும் அதை சம்பாதிக்க நாம் செய்யும் வேலையும் நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வேலை உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான செலவுகளை யாரிடமும் கேட்க தேவையில்லை. சுதந்திரமாக செலவு செய்ய முடியும். நிம்மதியாக வாழவும் முடியும். அது மட்டுமல்லாமல் அவர்களது வருங்கால திட்டங்களை கணித்து ஒரு நல்ல வருங்காலத்தை உருவாக்கலாம்.

ஒரு சில நேரங்களில் நாம் செய்யும் வேலைக்கான சம்பளம், நமது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வது இல்லை. இத்தகைய தருணங்களில் நம் தேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த கடன் நமது தேவையை தக்க சமையத்தில் பூர்த்தி செய்தாலும், நம் நிம்மதியை கெடுத்து விடும்.

வாழ்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் நம் இத்தகைய கடனை எப்படி சமாளிப்பது.

வேலை காலி...

வேலை காலி...

தீடிரென நம் வேலையை இழக்க நேரிட்டால் இத்தகைய கடன்கள் நமக்கு பெரும் சுமையாக மாறி விடுகின்றன. இ.எம்.ஐ. மற்றும் இதர கடன்களை இந்த சூழலில் சமாளிக்க முடிவதில்லை. இதனால் பல சட்டபூர்வ பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகின்றது. இது வாழ்கையின் மிகவும் மோசமான தருணம்.

ஐடி துறை யோ யோ காய்ஸ்...

ஐடி துறை யோ யோ காய்ஸ்...

மேலும் ஐடி துறையில் வேலை செய்போருக்கும் அதி மோசமான தருணம் அதுதான். ஏனெனில் இவர்களுக்கும் வேலை சேர்ந்த ஒரு வருடத்திலேயே மாத சம்பளம் சுமார் 30,000 ரூபாய் தொட்டுவிடும். இதனால் பல வங்கியில் இருந்த காலில் விழாத குறையாய் கிரேடிட் கார்டு இவரகளுக்கும் விற்கிறார்கள். இவர்களும் ஆசை வார்த்தைகளை கண்டு வாங்கி கடன் சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.

என்ன செய்யலாம்..

என்ன செய்யலாம்..

சிரி, இக்கட்டான சூழ்நிலையில் வேலை இழந்து போனால் கடன்களை சமாளிப்பது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மொத்த சொத்தை மதிப்பீடு செய்யுங்கள்

மொத்த சொத்தை மதிப்பீடு செய்யுங்கள்

எந்த ஒரு கடனை வாங்குவதற்கு முன் உங்களிடம் எவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது என்று கணக்கிட்டு வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். காப்பீடு, பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை நிதி ஆகியவற்றையும் சொத்து மதிப்பில் சோத்துக் கொள்ளலாம்.

கணக்கிடுதலின் பயன்

கணக்கிடுதலின் பயன்

சரியான முறையில் கணக்கிட்டு வைப்பது நாம் வங்கியிலிருந்து எவ்வளவு பணம் கடனாக வாங்க முடியும், அதை எவ்வாறு திருப்பி செலுத்த முடியும் என்ற கணிப்புக்களை நாம் மேற்கொள்ள முடியும். இப்படி மதிப்பீடு செய்வதன் மூலம் நீங்கள் வேலையை இழந்தாலும் இத்தகைய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும்.

கடன்களை வரிசைப்படுத்துங்கள்

கடன்களை வரிசைப்படுத்துங்கள்

ஒரே சமயத்தில் எல்லா கடன்களையும் அடைத்துவிட முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களது கடன்களில் எதை முதலில் செலுத்த வேண்டும் மற்றும் எதை நாம் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்று நாம் கணக்கிட்டு வைத்தல் மிகவும் உதவியாக இருக்கும். அதிகபடியான வட்டி விதிக்கப்படும் கடன்களை வரிசைப்படுத்தி அதை முதலில் செலுத்த வேண்டும்.

அபத்து நிறைந்த கடன்கள்

அபத்து நிறைந்த கடன்கள்

உதாரணமாக வீட்டின் மீது வாங்கிய கடன்களுக்கு அதிகப்படியான வட்டி விதிக்கப்படும். இதனால் நாம் முதலில் அதிகப்படியான வட்டி விதிக்கப்படும் கடன்களை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வது விரைவில் நமது வீட்டை மீட்டு தரும். ஏனெனில் ரியல் எஸ்டேட் விலைகள் எளிதில் சரிவதில்லை. வேறு ஏதேனும் காரியங்களில் செய்வதை விட இது சிறந்ததாகும்.

கடன்கள் மற்றும் இ.எம்.ஐ

கடன்கள் மற்றும் இ.எம்.ஐ

வேலையை இழப்பது ஒரு கொடூரமான சம்பவம். அதில் அடைக்கப்படாத கடன்கள் மற்றும் இ.எம்.ஐ ஆகியவற்றை சேர்த்தால் அவை வேலை இழப்பை மேலும் கொடூரப்படுத்தும்.

உபயோகப்படாத பொருட்களை விற்று விடுதல்

உபயோகப்படாத பொருட்களை விற்று விடுதல்

சில சமயங்களில் நமக்கு தேவையற்ற பொருட்களை வைத்திருப்போம். இத்தகைய பொருட்கள் நமது கடன்களை செலுத்த தடையாக இருக்கும், அதே சமயம், அவற்றை விற்றால் கடன்களை அடைக்கவும் முடியும். இவ்வாறு தேவையற்ற பொருட்களை விற்பது நமது கடன்களை திருப்பி செலுத்தவும் வங்கி கணக்கில் பணம் சேமிக்கவும் உதவும்.

வங்கிகளிடம் ஆலோசனை

வங்கிகளிடம் ஆலோசனை

எவ்வளவு கடினமான காரணமாயினும் வங்கிகளிடம் பேசுவது சிறந்ததாகும். நாம் இந்த சூழ்நிலையில் மிகவும் குழப்பத்தில் இருக்க நேரும். நாம் எடுக்கும் முடிவுகளும் சரியானதாக அமையாது. எனவே, வங்கிகளிடம் சென்று, அவர்களுடைய அறிவுரையை கேட்டறிந்தால் இத்தகைய சூழ்நிலைகளை வென்று விடலாம்.

நிதி ஆலோசகர்

நிதி ஆலோசகர்

நிதி ஆலோசகரிடம் உங்களின் நிலைமையை விளக்கி அதற்கு தீர்வை காணுங்கள். நிலைமை கைவிட்டு போகும் முன் இதை செய்வது நல்லது. நிதி ஆலோசகர்கள் பலருக்கு இத்தகைய நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்றும் அதை எவ்வாறு சரி கட்ட வேண்டும் என்றும் தெரிந்திருக்கும்.

வரும் முன் காப்போம்

வரும் முன் காப்போம்

கிரேடிட் கார்டு உள்ளது, வங்கி கடன் அளிக்க தயாராக உள்ளது என அனைத்தையும் உபயோகித்து செலவு செய்யக்கூடாது. தேவையான தருணத்தில் மட்டும் கடன்களை பெற்று, தகுந்த முறையில் திருப்பி செலுத்த வேண்டும் இதனால் நமது கிரேடிட் ஸ்கோர் சிறந்த முறையில் இருக்கும்.

பகட்டு வாழ்கை!!!

பகட்டு வாழ்கை!!!

பணம் கிடைக்கிறது என்று பகட்டு தன்மையாக வாழக்கூடாது. இதனால் பல முக்கிய தருணங்களில் நம்மிடம் பணம் இல்லாமல் சிக்கலில் சிக்கிக்கொள்வோம்.

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள் வாங்கி விற்பதை விட, நமது தேவையை உணர்ந்து சரியான பொருட்களை வாங்க வேண்டும். இதனால் இஎம்ஐ போன்ற சிக்கலில் இருந்து விடுபடலாம்.

சேமிப்பு!!!

சேமிப்பு!!!

நாம் வேலையில் இருக்கும் போதே சம்பளத்தில் அல்லது கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் சேமிக்க வேண்டும். இத்தகைய சேமிப்பினால் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையில் நம்மை காத்துக்கொள்ள முடியும். மேலும் 10- 15 சதவீதம் வரை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு அறிவை வளர்ப்பதற்காவும் இருக்கலாம் அல்லது அபத்து நிறைந்த மற்றும் அதிக லாபம் தரும் பங்கு சந்தையிலும் இருக்கலாம்.

பட்ஜெட் வாழ்க்கை..

பட்ஜெட் வாழ்க்கை..

இப்படி நாம் வாழ்க்கை முறைக்கு தகுந்த முறையில் வழிநடத்தினால் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+