டாப்-டவுன், பாட்டம்-அப் முதலீட்டு அணுகுமுறைகள் என்றால் என்ன?

சென்னை: பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பார்கள் அப்படி பட்ட பணத்தை தேடி தான் நாம் வாழ்கை நகர்கிறது. பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உள்ள போதிலும், சிலர் பங்கு சந்தையை சார்ந்த வியாபாரத்திலும், முதலீட்டிலும் ஈடுப்பட்டு அதிகப்படியான லாபத்தை அடைந்து வருகின்றனர். அனைத்து வியாபாரகளை போலவே பங்கு சந்தையிலும் லாபம், நஷ்டம் என அனைத்தும் உண்டு. நஷ்டத்தை மட்டும் கண்டு அஞ்ச வேண்டும்.

பங்கு சந்தையில் சரியான முறையில் முதலீடு செய்தால், கண்டிப்பாக லாபத்தை அடையலாம். பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்யவது என அனைவரும் பல்லை கடித்து கொண்டு இருக்கும் வேலையில் இந்த கட்டுரை பலருக்கும் பயன்படும்.

பங்கு சந்தை முதலீட்டு வல்லுனர்கள் பரிந்துரைக்கும் சில முதலீட்டு முறையை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம். இந்த இரண்டு முதலீட்டு வடிவங்களும் முதலீட்டாளர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் தங்களுடைய முதலீடுகளை பெரிய அளவில் பங்குகளில் முதலீடு செய்ய பயன்படுத்தும் அணுகுமுறைகளாகும்.

டாப்-டவுன் முதலீட்டு அணுகுமுறை :

சில பங்கு கணக்குகளை மட்டும் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை படம் பிடித்துக் காட்டும் வகையில் முதலீட்டாளர்கள் அணுகி தேர்வு செய்யும் ஒரு பரந்த அணுகுமுறை தான் டாப்-டவுன் அணுகுமுறை ஆகும். பங்குகளை தேர்வு செய்வதுடன் மட்டுமல்லாமல், முதலீட்டாளர் அல்லது நிதி மேலாளர் எந்த துறை அல்லது தொழில் மற்றவற்றை விட சிறப்பாக இருக்கும் என்றும் உறுதி செய்யவும் முடியும்.

டாப்-டவுன், பாட்டம்-அப் முதலீட்டு அணுகுமுறைகள் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட துறையின் சிறந்த பங்களிப்பை கணிப்பதன் மூலம், அந்த துறையைச் சேர்ந்த நிறுவனத்தை முதலீட்டாளர் தன்னுடைய துறைகளில் ஒன்றாக தேர்வு செய்து முதலீடு செய்வார்.

உதாரணமாக, முதலீட்டாளர் அல்லது நிதி மேலாளர் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை உணர்ந்தால், அந்த குறிப்பிட்ட துறையில் மற்ற பிரிவுகளை விட மிதமிஞ்சிய செயல் திறனை காட்டும் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வார். அதாவது, வட்டி விகிதங்கள் தெற்கு திசை நோக்கி சரிந்து வருவதாக உணர்ந்தால், நிதி மேலாளார் ரியல் எஸ்டேட் துறை சிறப்பாக இருக்கும் என்று கணித்து அதன் பங்குகளை தேர்வு செய்வார்.

மாறாக, முதலீட்டாளர் அல்லது நிதி மேலாளார் பலவீனமான பொருளாதார நிலை இருப்பதாக உணர்ந்தால், தன்னுடைய நிறுவனங்களில் சிலவற்றின் பங்குகளை விற்க முடிவு செய்வார். ஃபார்மா (Pharma) மற்றும் நுகர்வோர்களுக்கான நீண்டகால பங்குகள் போன்ற பாதூகாப்பான பங்குகளையும் கூட விற்க முனைவார்.

பாட்டம்-அப் அணுகுமுறை:

பரவலான பார்வையையும், நிறுவனம் உள்ள துறையையும் இந்த அணுகுமுறை கணக்கில் கொள்வதில்லை. மாறாக, அந்த நிறுவனத்தின் சில முக்கியமான குணங்களை அடிப்படையாக கொண்டே இந்த அணுகுமுறையில் பங்குகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எனவே, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வலிமையின் அடிப்படையிலேயே பங்குகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

டாப்-டவுன், பாட்டம்-அப் முதலீட்டு அணுகுமுறைகள் என்றால் என்ன?

மதிப்பு வாய்ந்த பங்குகளை எந்தெந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன என்பதை அறிய பல்வேறு வகையான செயல்திறன் அளவீடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில முதலீட்டாளர்கள் மற்றும் நிதி மேலாளார்கள் வருமானம் வரும் அளவுகளை மதிப்பிடுகின்றனர். வேறு சிலர் விலை வருமான விகிதங்களை வருமானத்தை அடிப்படையாக கொண்ட விலை என்ற விகிதத்திலும் மற்றும் மிகவும் குறைவான அளவு விலை வருமான விகிதங்களை கொணடவற்றை கவர்ச்சியான முதலீட்டு பங்குகளாகவும் கருதுகின்றனர். எனவே, சரியான வருமானத்தை தரக்கூடிய பங்குகள் எவை என்பதை தீர்மானிப்பதில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் அடிப்படையான நிலைமை பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், வியாபார சுழற்சி (Business Cycle) மற்றும் பெரும் பொருளாதார பார்வை (Macro-economic Outlook) ஆகியவை இந்த வகை அணுகுமுறைகளில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

நிறுவனங்களை மையமாக கொண்ட ஆய்வுகள் முதலீட்டாளர்கள் அல்லது நிதி மேலாளார்களுக்கு பலனளிக்கும் அம்சங்களாகவே உள்ளன. எனினும், சில நேரங்களில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் சந்தை குறைந்து வரும் வேளைகளில், அதன் பங்கு மதிப்புகளும் குறைந்து விடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+