கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை களைவது எப்படி??

சென்னை: இன்றைய நவீன உலகத்தில் மக்களிடம் பண புழக்கத்தை விட கார்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இப்பொழுது வேலைக்கு செல்லும் அனைவரிடத்திலும் கிரெடிட் கார்டு உள்ளது, குறிப்பாக ஐடி துறை மற்றும் பண்நாட்டு நிறுவன பணியாளர்கள். பெரும்பாலும் எல்லோரும் சில வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கொடுக்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்திருப்பார்கள்.

ஷாப்பிங் செய்யவும், விடுமுறையை கொண்டாடவும் அல்லது பில்களை செலுத்துவதற்கும் பணத்தைக் கொண்டு சென்ற காலம் முடிந்துவிட்டது. கிரெடிட் கார்டை விற்பனை நிலையங்களில் அல்லது பில் செலுத்தும் இடத்தில் தேய்த்து உடனடியாக பணத்தை செலுத்திவிடலாம்.

இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டின் மூலம் கடன் மற்றும் செலவுகள் அதிகரிக்கிறது. இக்கடன்களை எப்படி சமாலிக்க சில வழிகளை நேற்று பார்த்தோம். அக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தை இப்போது பார்போம்.

பர்ஸில் இருக்கும் கார்டுகளை கணக்கெடுங்கள்

நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அனைத்து கிரெடிட் கார்டுகளையும் உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்களா? அப்படியானால் உங்களிடம் இருக்கும் கார்டுகளை பட்டியலிட்டு, எதை பயன்படுத்துவீர்களோ அதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள கார்டின் கணக்கை மூடித்துவிடுங்கள். நீங்கள் அதிகமாக ஷாப்பிங் செய்தால் வெகுமதி புள்ளிகள் அதிகமாக உள்ள கார்டுகளை அதற்கு பயன்படுத்துங்கள். அப்போது தான் வெகுமதி புள்ளிகள் அதிகரிக்கும். அதனை வைத்துக் கொண்டு உங்களுக்கு ஏற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் கார்டில் உள்ள வரம்பை வைத்து உங்களால் போதிய பொருட்களை வாங்க முடியவில்லை என்றால், புது கணக்கு ஒன்றை திறந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணக்கை புதிய கார்டிற்கு மாற்ற சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் கிரெடிட் புள்ளிகளுக்கு உதவிட அதே அளவிலனா கடன் அளவு கிடைக்கும்.

கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை களைவது எப்படி??

கடனின் உச்ச வரம்பில் கட்டுப்பாடு தேவை..

உங்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளின் உதவியோடு தான் உங்கள் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது பற்றியோ அல்லது குறைப்பது பற்றியோ உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம் முடிவு செய்யும். உங்களின் நாணய தகுதியுடைமை மாறுகிறதா என்பதை ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் அறிக்கையை வைத்து பார்ப்பார்கள். அதை பொறுத்து உச்ச வரம்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும். நீங்கள் பில் தொகையை காலதாமதமாக கட்டினாலும் உங்கள் உச்ச வரம்பு சீராய்வு செய்யப்படும். அதனால் உங்கள் தகுதியுடைமையை எப்போதுமே சரியாக வைத்திருக்க வேண்டும்.

உங்களின் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்றால், உங்கள் தடப்படிவு கடந்த ஒரு வருடத்திற்கு நல்லபடியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கிரெடிட் கார்டு நிறுவனத்தை அழைத்து அதனை உயர்த்த சொல்லுங்கள்.

கார் இன்ஷூரன்ஸ்

வாடகை கார் தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ, மோதலில் ஈடுபட்டாலோ அதனை ஈடு செய்யும் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் பல கிரெடிட் கார்ட்டுகள் வருகிறது. இந்த இன்ஷூரன்ஸ் பழுதுக்கான செலவுகள், மாற்று பாகங்களுக்கான செலவுகள் மற்றும் கார் தொலைந்த செலவு ஈடு செய்யப்படும். ஆனால் அவ்வகை பாலிசியில் சிறியதாக எழுதியுள்ள தகவல்கள் அனைத்தையும் நன்றாக படிக்க வேண்டும்.

பல பாலிசிகளில் சொகுசு கார்கள், வேன், லாரி, பாசென்ஜெர் வேன் அல்லது வெளிநாட்டில் வாடகைக்கு எடுக்கப்படும் கார்கள் பாலிசிக்கு உட்படாது. நீங்கள் நீண்ட நாட்களுக்கு வாகனத்தை வாடகைக்கு எடுக்கும் போது, இன்னும் சில பாலிசிகளில் வாடைகைக்கு எடுக்கப்படும் நேரத்திலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதே போல் உங்களால் ஏற்படும் சேதங்கள், காயங்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு கிரெடிட் கார்டு பொறுப்பேற்காது. அவ்வகையான கவரேஜ்களை எல்லாம் நீங்கள் காரை வாடைக்கு எடுக்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்களின் சொந்த வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி மூலமாக பார்த்துக் கொள்ளலாம்.

கூட்டு கணக்கு

உங்கள் குழந்தை அல்லது மனைவிக்கு கிரெடிட்டை வளர்க்க வேண்டுமா? அப்படியானால் அவர்களை கூட்டு கணக்கு உடைமையாளராக சேர்க்காமல், அங்கீகரிக்கப்பட்ட பயனாளியாக சேர்த்திடுங்கள். அதன் பின் அவர்கள் இந்த கார்டை பயன்படுத்தினால் அவர்களும் பயன் அடைவார்கள். அதற்கு காரணம் கணக்கின் வர்த்தகத்தோடு அவர்களின் கிரெடிட் அறிக்கையும் தயாராகி விடும்.

கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை களைவது எப்படி??

நிதி ரீதியான இவ்வகை உறவுமுறை உங்களுக்கு அதிக கட்டுப்பாட்டை அளிக்கும். கடனை செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களை மட்டுமே சார்ந்திருப்பதால் (அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்த உரிமை கிடையாது), நிதி பிரச்சனைகளை பற்றிய முடிவுகளை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் செலவு அதிகரிக்கும் போது அல்லது நீங்கள் உங்கள் மனைவியை விட்டு பிரியும் வேளைகளில் இது பெரிதும் உதவியாக இருக்கும்.

கிரெடிட் கார்டின் வணிகத்தின் பிரச்சனைகள்

நீங்கள் வாங்கிய பொருளில் உங்களுக்கு திருப்தி இல்லாத போதும் கடைக்காரர் உங்களுக்கு பணத்தை திருப்பி தர மறுக்கிறாரா? மத்திய சட்டத்தின் படி, நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கிய பொருளின் தரம் அல்லது சேவையில் உள்ள தரத்தின் குறைபாடு இருந்தால், கடைக்காரர் உங்கள் ஊரிலோ அல்லது உங்கள் முகவரியிலிருந்து 100 மைல் தொலைவில் இருந்தாலோ, அவருக்கு செல்லவிருக்கும் பணத்தை தடுத்து நிறுத்தி விடலாம்.

அதற்கு நீங்கள் வாங்கிய பொருளின் விலை ரூ.3000-க்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் இந்த பிரச்னையை தீர்க்க கடைக்காரர்ரிடம் அவர் போதிய முயற்சியை எடுத்திருக்க வேண்டும். கார்டை பயன்படுத்திய தொகை கடைக்காரருக்கு சென்றடையாமல் தடுக்க, ஒரு மடலுடன் இதர ஆவணங்களை கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கு தொலைபேசி அல்லது இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+