வேலை பார்த்து கொண்டே 'சைட் பிஸ்னஸ்' துவங்குவது எப்படி?

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்கள், அவர்களின் கனவை நனவாக்க முடிவதில்லை என்ற தவறான புரிதல் உள்ளது. இந்த தவறான புரிதல் பொய் மட்டுமல்லாது சிறிய வணிக சமுதாயத்திற்கு ஆபத்தாகவும் விளங்குகிறது.

ஒவ்வொரு தொழில்முனைவர்களும் பெரு நகரங்களில் ஒரு சிறிய அலுவலகத்தில் அமர்ந்து, விலை குறைவான உணவுகளை உட்கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து தன் தொழிலை பெரிதாக்குவதற்கு உழைத்துக் கொண்டிருப்பார்கள் என்பது உண்மை அல்ல.

தொழில் முனைவர்கள் பலரும் வறுமையில் வாடி, என்றைக்காவது ஒரு நாள் லட்சக்கணக்கான வணிகம் வந்தடையும் என்ற கனவில் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆனால் நம் கற்பனைக்கும் நிஜத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளது. சரி பகுதி நேர தொழிலை (சைட் பிஸ்னஸ்) துவங்குவது எப்படி? இதோ உங்களுக்காக சூப்பரான ஐடியாக்கள்.

வாய்ப்புகளை உற்று நோக்க வேண்டும்!!

வாய்ப்புகளை உற்று நோக்க வேண்டும்!!

உங்களுக்கு சமைக்க பிடிக்குமா? அப்படியானால் உங்கள் நேரத்தை முழுவதுமாக எதிர்ப்பார்க்கும் ஒரு உணவகத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். அதற்கு அதிகளவில் மூலதனமும் தேவைப்படும். அல்லது வார இறுதியில் செயல்படும் காடேரிங் நிறுவனத்தை தொடங்கலாம். அல்லது நடமாடும் வண்டியில் சிறிய உணவகத்தை கூட தொடங்கலாம். உங்களுக்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் துவங்கும் இவ்வகையான தொழில்கள் காலப்போக்கில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கலாம். அதனால் ஒரு தொழில் துவங்கும் முன் அதில் அடங்கியிருக்கும் அதிகப்படியான வாய்ப்புகளை பாருங்கள்.

முறையான மார்கெடிங்கை தேவை..

முறையான மார்கெடிங்கை தேவை..

உங்களின் வணிகம் அதிகரிக்க வேண்டும், ஆனால் அதற்குண்டான மார்கெடிங்கிற்கு அதிக அளவில் முதலீடு செய்தால் இரண்டு எதிர்மறையான விளைவுகள் உண்டாகும். ஒன்று - சிறிதளவே நடக்கும் வணிகத்திற்கு அதிகளவில் பணத்தை முதலீடு செய்தல், மற்றொன்று - வணிகத்தின் அளவு பெருமாரியாக அதிகரித்து விடும், ஆனால் அதை கையாள உங்களுக்கு நேரம் இருக்காது. அதனால் குறைந்த செலவில் முறையாக செய்யும் விளம்பரத்தை பயன்படுத்தி கடன் இல்லாமல் தொழிலை நடத்துங்கள்.

தொழில் வேறு, வேலை வேறு...
 

தொழில் வேறு, வேலை வேறு...

உங்கள் வேலை பகலில் என்றால் உங்கள் தொழிலையும் வேலையும் ஒரே நேரத்தில் செய்ய முற்படாதீர்கள். உங்கள் வாழ்வாதாரத்தை கவனித்து, உங்களுக்கு உடல்நலத்திற்கு முக்கியதுவம் அளித்து, ஓய்வூதிய சலுகைகள் அளிக்கும் வேலையில் தான் அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலுத்த வேண்டும். அதன் மீது நாட்டம் குறைந்தாலும் கூட அதில் தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின் உங்களின் தொழிலை கவனியுங்கள்.

முக்கியமான ஒன்று!!..

முக்கியமான ஒன்று!!..

உங்கள் பகுதி நேர தொழிலை துவங்கும் முன், உங்கள் எதிர்ப்பார்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த தொழிலை பகுதி நேரமாகத் தான் செய்யப் போகிறீர்கள் என்றால், முழு நேரமாக இத்தொழிலை செய்யும் உங்கள் போட்டியார்களை தொழில் ஆரம்பித்த சில வருடங்களிலேயே வீழ்த்துவது முடியாத காரியமாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் உங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறைவான வருமானம் கிடைத்தாலும் உங்கள் மனதுக்கு பிடித்த தொழிலை செய்யும் போது உங்கள் இலக்கு சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

கடைசியாக ஒன்று..

கடைசியாக ஒன்று..

உங்களுக்கு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தால், அதற்காக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்ற தவறான நம்பிக்கைக்கு ஆளாகாதீர்கள். மாறாக சிறிய அளவில் தொழிலை தொடங்கி அந்து உங்களை எங்கே எடுத்துச் செல்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

கவுஃப்மேன் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் சொந்த தொழில் துவங்குபவர்களின் சராசரியாக 45-54 வயது வரம்பிற்குள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.

இரண்டாம் பட்சம்

இரண்டாம் பட்சம்

இதில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் பார்க்கும் வேலையை தவிர தங்கள் தொழிலை இரண்டாம் பட்சமாக அவர்கள் துவங்கியுள்ளனர்.

சைட் பிஸ்னஸ்

சைட் பிஸ்னஸ்

சொல்லப்போனால் பல தொழில் அதிபர்களும் தங்களின் தொழிலை சைட் (பகுதி நேர) தொழிலாக தான் கவனிக்கிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை விடாமல், தங்களின் அறிவாற்றல் மற்றும் தகுதிகளை பயன்படுத்தி இவ்வாறான சைட் தொழில்களை துவங்குகின்றனர்.

விடா முயற்சி

விடா முயற்சி

இந்த தொழிலை நம்பி அவர்கள் வாழா விட்டாலும் கூட இந்த தொழிலின் முன்னேற்றத்திற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுவதில்லை.

ரிஸ்க் குறைவு..

ரிஸ்க் குறைவு..

முதலில் சிறிய அளவில் துவங்குவதால் செலவுகள் எல்லாம் குறைவாகவே ஏற்படும். ஒரு வேலை அந்த தொழில் தோல்வியில் போய் முடிந்தால் நஷ்டமும் குறைவாகவே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Start A Business While Working A Full-Time Job

There's a misconception that keeps those with dreams of owning their own business from following their dreams. It's a misconception that's not only false but dangerous to the small business community.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X