வீக்கெண்ட் ஸ்பெஷல்: குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ 8 வழிகள்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தலைப்பு ஆர்வமூட்டுவதாக உள்ளதா ஆச்சரியமூட்டுவதாக உள்ளதா உண்மையில் நம் எல்லோருடைய மனதிலும் வரும் எண்ணங்களில் ஒன்று தான் இந்த கட்டுரையின் தலைப்பு.

 

எனவே, இதுவரையிலும் செய்த தவறுகளை மறந்து விட்டு, வாழ்க்கையை மேலும் சிறப்பாக நடத்த தயாராகுங்கள். நீங்கள் பணத்தை சேமித்து வளமான எதிர்காலத்தை வாழ முயற்சி செய்யத் தொடங்கும் போது, இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவும். இவற்றின் மூலம் தினசரி செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க முடியும்.

வீட்டில் சமையல்...

வீட்டில் சமையல்...

இன்றைய நாட்களில் பணிபுரியும் அனைவரும் வெளியில் சாப்பிடுவதையே பார்க்கிறோம். இது நாம் அதிகபட்சமாக பணத்தை செலவு செய்யும் வழிகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒரு நாளைக்கு இவ்வளவு என்றும், ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்றும் நாம் கணக்கிடும் போது நம் வருமானத்தில் இது சற்றே பெரிய செலவாகவே இருக்கும். எனவே, வீட்டில் சமைப்பதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும், அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

 

 

ஷாப்பிங் செலவுகள்

ஷாப்பிங் செலவுகள்

பொழுதுபோக்குகளும், ஷாப்பிங் செய்வதும் முக்கியமானவை தான், ஆனால் இவையிரண்டும் நம் கைக்குள் அடங்க வேண்டும். மகிவும் தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைக்கத்தால் பெரும் அளவில் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

 

 

பொழுதுபோக்கு செலவுகள்..
 

பொழுதுபோக்கு செலவுகள்..

ஒரு மாதத்திற்கு 2-3 திரைப்படங்களை நீங்கள் பார்ப்பீர்கள் என்றாலும், வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில திரைப்படங்களை நீங்கள் வாங்கவோ அல்லது ஒரிஜினல் டி.வி.டிகளை கடனாக பெற முடியும். இதன் மூலம் ஒரு வருடத்தின் முடிவில் கிடைக்கும் பலன் கணிசமாக இருக்கும். நீங்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் போது ஒரு நபருக்கு 100 ரூபாய் வரையிலும் செலவு செய்து டிக்கெட் வாங்கினால், பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்களை வாங்கும் போது செலவு ரூ.200-ஐ தொட்டு விடும். ஆனால் ஒரு டி.வி.டி 150 ரூபாய்க்கு மேல் செலவு வைப்பதில்லை, குடும்பத்தில் அனைவரும் ஒன்று கூடி பார்க்களாம். இப்பொழுது வித்தியாசத்தை கவனித்துப் பாருங்கள் பலனை நன்றாக உணருவீர்கள்.

மொபைல்போன் தான் நம் எதிரி...

மொபைல்போன் தான் நம் எதிரி...

இன்றைய நாட்களில் ஸ்மார்ட் போன்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் நிறைய வசதிகள் இருப்பதால் மக்களும் முண்டியடித்துக் கொண்டு ஸ்மார்ட் போன்களை வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இவை மிகவும் விலை அதிகமானவையாகவும் மற்றும் வாங்கிய பின்னர் இண்டர் நெட் இணைப்புக்கு செலவு வைப்பதாகவும் இருக்கின்றன. இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டில் வித்தியாசங்களைக் காண முடியாது. ஜி.பி.எஸ், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான விஷயங்கள் கிடைப்பதால் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தவும், பதிவிறக்கம் செய்யவும் தூண்டுகின்றன. இவற்றையெல்லாம் பதிவிறக்கம் செய்யும் போது, அவற்றிற்காக தனியான கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உங்களுடைய ஸ்மார்ட் போன்களில் இது போன்ற வசதிகளை அதிகம் டவுன்லோடு செய்து பாக்கெட்டில் ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.

ஆரோக்கியமில்லாத பழக்கங்களை விட்டொழியுங்கள்

ஆரோக்கியமில்லாத பழக்கங்களை விட்டொழியுங்கள்

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் அல்லாத துறைகளில் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிபவர்கள் கணக்கில்லாமல் பணத்தை சம்பாதித்தாலும், அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் ஏராளமான மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றிற்கும் அடிமையாகின்றனர். இவ்வாறு நீங்கள் புகை மற்றும் மதுவிற்கு செலவு செய்யும் பணம் மிகவும் அதிகமான செலவாக இருக்கும்.

 

 

கிரெடிட் கார்டுகளை 'கட்' பண்ணுங்க

கிரெடிட் கார்டுகளை 'கட்' பண்ணுங்க

நாம் வெளியில் செல்லும் போது பணம் எடுத்துச் செல்லவில்லையெனில், அங்கெல்லாம் ஆபத்பாந்தவனாக இருந்து நம்மைக் காப்பாற்றும் கிரெடிட் கார்டுகளால் சில மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலானவர்கள் 'வாங்குவோம், தேய்ப்போம்' என்ற ரீதியில் உண்மையான தேவையை, செலவை உணராமல் செலவு செய்யத் தொடங்கி விடுகிறார்கள். மாதத்தின் முடிவில் கணக்குக்கான அறிக்கை வரும் போது தான் அவர்களுக்கு விழிப்பு வரும். அந்நேரத்தில் அவர்கள் செய்த தவறுகளுக்காக ஒரு பெரும் தொகையை கண்ணெதிரில் இழக்க நேரிடும். எனவே அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை கொண்டாட்டம்

ஒரு முகவரை தொடர்பு கொண்டு உங்களுடைய விடுமுறை திட்டங்களை விவாதித்து தீர்மானிப்பதை விட, இணைய வழியாக விடுமுறை திட்டங்களை விவாதிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இவ்வகையான பயண திட்டங்களையும், சுற்றுலா வசதிகளையும் செய்து தரும் இணைய தளங்கள் பலவும் உள்ளன. இவ்வகையான இணைய தளங்கள் நல்ல ஆஃபர்களை அப்போதைய சீசன்களுக்கு ஏற்ற வகையில் வழங்கி வருகின்றன. ஆனால், விமான டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை இணைய வழியில் பதிவு செய்வது இந்த காலத்தில் அதிகம் செலவு வைக்கும். எனவே நீங்கள் நேரடியாக விமான நிலையத்திற்கோ அல்லது இரயில் நிலையத்திற்கோ சென்று டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள்.

வாடகை வீடு..

வாடகை வீடு..

இன்றைய காலகட்டத்தில் தங்களுடைய வசதிக்கு மீறிய வீடுகளில் வாடகைக்கு சென்று விட்டு, கையைப் பிசைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஒரு திறந்தவெளி சமையலறை, ஒரு டைனிங் ஹால், ஒரு வரவேற்பறை ஆகியவை கொண்ட வீடு சற்றே செலவு வைக்கக் கூடியது தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் இரண்டு பேர் தங்கும் வீட்டுக்கு இத்தனை வசதிகளும் வேண்டும் என்றால் வாடகை இயற்கையாகவே எகிறி அடிக்கும். எனவே, தேவையான வசதிகளை மட்டும் கொண்டிருக்கும் சிறியதொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, திருப்தியாக வாழ முயற்சி செய்யுங்கள்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: money life salary holiday saving home
English summary

7 Ways To Spend Less in your life

Forget all your mistakes made in the past and be ready to move on. And if you are planning to save money for a prosperous future, then here is a list of tips that can be helpful to cut down on your expenses, as listed by Daily Finance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X