கிரெடிட் கார்டை நாம் தவறாக பயன்படுத்தும் சில தருணங்கள்..

சென்னை: இந்த அவசர உலகத்தில், நமக்கு பணம் உடனடியாக தேவைப்படும் அவசர சூழ்நிலையில் நமது கடன் அட்டையை உபயோகித்து நாம் அவசர தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம். அப்படி வாங்கிய கடனை பின் நாளடைவில் திருப்பி செலுத்துகிறோம். கடன் அட்டைகள் நாம் வாழ்க்கை பாதுகாப்பாளர்கள்.

கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் "உபயோகியுங்கள் மற்றும் செலுத்துங்கள்" (Use and Pay) வசதி உண்மையில் ஒரு வரம். எனினும நமக்கு வரமான கடன் அட்டையை நாம் கவனத்துடன் பயன்படுத்தாவிட்டால் அதன் மறு பக்கம் நமக்கு தீங்கினை விளைவிக்கும். அடிக்கடி கடன் அட்டையை பயன்படுத்துவது நிதி நெருக்கடியான சூழ்நிலைக்கு நம்மை தள்ளிவிடும்.

இப்படிபட்ட அட்டையை நம் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தவறான முறையில் பயன்படுத்தினால் நம்முடையை நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிடம். இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?? குழப்பம் வேண்டாம் தொடர்ந்து படியுங்கள் விடை கிடைத்து விடும்.

தினசரி செலவுகளுக்கு கடன் அட்டை தேவையா?

தினசரி செலவுகளுக்கு கடன் அட்டை தேவையா?

மக்கள் தினசரி தேவையான பொருட்களை வாங்கவே பெரும்பாலான சூழ்நிலைகளில் கடன் அட்டையை பயன்படுத்துகின்றனர். தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையை பயன்படுத்துவதில் நிச்சயமாக தீங்கு ஒன்றும் இல்லை.

ஆனால் தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையை தொடர்ந்து பயன்படுத்துவதில் தான் பெரிய சிக்கல் உள்ளது. ஒரு வரவு-செலவ (BUDGET) திட்டத்தினை தயார் செய்து அந்த வரையறைக்குள் கடன் அட்டையை பயன்படுத்துவது சிறந்தது.

 

அதிகப்படியான வட்டி

அதிகப்படியான வட்டி

நமக்கு பணம் தேவைப்படும்போது, கடன் அட்டையை பயன்படுத்தி பணம் பெற்றுகொள்வது, நமது பண பற்றாக்குறையை சமாளிக்க சுலபமான வழி, ஆனால் இது முற்றிலும் தவறு. நமது கணக்கிலிருந்து மிக அதிக மாத வட்டியான 3.5% மட்டும் வசூல் செய்யப்படுவதில்லை. நாம் பணம் எடுத்த முதல் நாளிலிருந்தே நமது வட்டி தொகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்படும். மேலும் ஏடிஎம் மையத்திலிருந்து அவசர தேவைக்காக பணம் பெறும்போது, நாம் நமது பண பரிவர்த்தனை கட்டணமாக ஒரு முழு தொகையையும் செலுத்த வேண்டும், இது கடன் அட்டை உபயோகிப்பதை கடினமாகி விடுகிறது.

தாமதக் கட்டணம்

தாமதக் கட்டணம்

நிலையான பண வரத்து நம்மால் உறுதி கூற முடியாத நிலையில் கடன் அட்டை பயன்பாட்டினை நமது கட்டுக்குள் வைத்திருப்படு அவசியம். நமது கடன் தொகையை திருப்பிச் செலுத்த 20 முதல் 50 நாள் வரை கெடு வழங்கினாலும் கூட, நம்மால் கடன் தொகையை கடைசி கெடு நாளில் செலுத்த முடியாமல் போனால், தாமதத்திற்கான கட்டணமாக ஒரு பெரிய தொகையை நமது கடன் தொகையுடன் சேர்க்கப்படும். இதற்கும் 3.5% வரியிலான வட்டி மற்றும் தாமத கட்டணத்திற்காக சேர்க்கப்படுகின்ற கூடுதல் வரிகள் செலுத்த வேண்டியிருக்கும்.

நாணயப் பரிமாற்றம்

நாணயப் பரிமாற்றம்

நாம் நாட்டை விட்டு வெளி நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்ளும் போது பணத் தேவை குறித்த பாதுகாப்பினையும், நம்பிக்கையையும் நமக்கு கடன் அட்டைகள் வழங்குகின்றன. இதனால் நாம் நமது நிதி நிலை குறித்து உறுதியாகவும் பண பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்ற நிலையை அறியாமல் இருக்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் கடன் அட்டை பயன்படுத்தும்போது, பண பரிவர்த்தனைக்காக வெளிநாடுகளில் உள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதயும் அந்நாட்டு நாணயதை பெற மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைக்காக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதயும் மறக்க கூடாது. இத்தகைய பரிவரித்தனைகள் மிக பெரிய செலவை குறைக்கலாம்

வெகுமதி புள்ளிகள்

வெகுமதி புள்ளிகள்

கடன் அட்டை நிறுவனங்கள் தங்கள் வியாபார உத்தியாக ஒவ்வொரு முறை அட்டையை தேய்க்கும் போதும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிதமிஞ்சிய சலுகைகளை வழங்குகின்றன. இத்தகைய சலுகையில் வெகுமதி புள்ளிகளும் அடக்கம். வெகுமதி புள்ளிகளை கைப்பற்றும் நோக்கில் கடன் அட்டையை பயன்படுத்துதல் மதிக்கத் தக்கதல்ல. இந்த பழக்கத்தினால் நமது வெகுமதி புள்ளிகள் உயர்ந்திருந்தாலும் கூட, முடிவில் நாம் ஒரு உயர்ந்த தொகையினை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவோம். கடன் அட்டை பயன்படுத்த சிலர் இந்த நிலையை சந்தித்திருக்க வாய்ப்புண்டு.

பாதுகாப்பற்ற இணையதளம்

பாதுகாப்பற்ற இணையதளம்

பாதுகாப்பற்ற வலைத்தளங்களின் மூலம் பொருட்களை வாங்குவதென்பது எப்போதும் சிக்கல்களையும், குழப்பங்களையுமே விளைவிக்கும். மேலும் கூடுதலாக பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளும் தொடர்ந்து வரும். ரகசிய தகவல்களை நாம் வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முன் அந்த வலைத்தளங்களின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

தள்ளுபடி விற்பனை

தள்ளுபடி விற்பனை

தள்ளுபடி விற்பனை நமக்கு எப்போதும் ஆசை காட்டுவதாய் அமையும். கடன் அட்டையை பயன்படுத்தும் முன் நமது வரவு செலவு திட்டத்தின் எல்லையை நாம் நினைவினில் கொள்ள வேண்டும். நமக்கு மிகவும் அவசியமான தேவையான பொருட்களை மட்டும் வாங்கலாம். விலை உயர்ந்த பொருட்களுக்கான அதிக செலவுகளை தவிர்ப்பது நமது வருமான வரவு செலவு சமநிலையை இணையாக கொண்டு செல்ல உதவும். பெரும் அளவு எச்சரிக்கையுடன் இருப்பது நம்மை கடனில் விழாமல் காக்கும்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+