"மிஸ்டு கால் பேங்கிங்" இது புது வகையான வங்கிச் சேவை!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்டெர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற தொழில் நுட்ப ரீதியிலான புதுமையான சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்த வங்கிகள் தற்போது "மிஸ்டு கால் பேங்கிங்" என்ற புதிய சேவை தளத்தினை அறிமுகப்படுத்த இருக்கின்றன.

 

இதன் மூலம் வங்கி கணக்கினை கொண்ட ஒருவர் வங்கியின் குறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் வங்கியின் சேவைகளை பெற முடியும். மிஸ்டு கால் பேங்கிங் மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளும், விசாரணை தொடர்பானதாகவும் சேவைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும்.

உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் புதிய செக் பெறுவதற்கான கோரிக்கையை தெரிவிக்கலாம் அல்லது தனது வங்கி கணக்கில் இருப்பில் உள்ள தொகை மற்றும் வங்கி கணக்கின் அப்போதைய பரிவர்த்தனையை உள்ளடக்கிய மினி ஸ்டேட்மென்ட் என்று சொல்லப்படும் சிறு பரிமாற்ற அறிக்கை அல்லது அவரது வங்கி கணக்கின் அறிக்கை ஆகியவை தொடர்பான சேவைகளை அவர் மிஸ்டு கால் மூலம் பெற முடியும்.

யாருக்கு இந்த சேவை!!

யாருக்கு இந்த சேவை!!

வங்கி கணக்கினை கொண்ட இன்டெர்நெட் சேவையை பெற முடியாத வாடிக்கையாளர்களுக்கும், குறைவான சேவையை அளிக்கும் மொபைல் போன் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் இந்த மிஸ்டு கால் சேவையை வங்கிகள் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

சேவையை பெறுவது எப்படி??

சேவையை பெறுவது எப்படி??

இந்த புதுமையான நன்மைகள் நிறைந்த சேவையை பெற விரும்பும் ஒருவர் தனது மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து அந்த எண்ணை தனது வங்கி கணக்கு என்னுடன் இணைக்க வேண்டும். வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை ஒருமுறை இணைத்த பின், வங்கியினால் குறிப்பிடப்படுகிற கட்டணமில்லா எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் இந்த சேவையை எந்த வித செலவும் இல்லாமல் பெற முடியும்.

எஸ்எம்எஸ் பேங்கிங்
 

எஸ்எம்எஸ் பேங்கிங்

எஸ்எம்எஸ் பேங்கிங் செயல்பட்டு வரும் வழிமுறையையே மிஸ்டு கால் பேங்கிங் பின்பற்றும் "எஸ்எம்எஸ் பேங்கிங் சேவை வசதியில் ஒருவர் தந்து கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்ள மற்றும் சில சேவைகளுக்கான கோரிக்கைகளை முன் வைக்க குறிப்பிடப்பட்ட எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர்க்கான இந்த எஸ்எம்எஸ் சேவைக்காக வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கும். எனவே இந்த சேவை முற்றிலும் இலவச சேவை அல்ல.

பாதுகாப்பான சேவை

பாதுகாப்பான சேவை

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் மட்டுமே தகவல்களை வழங்கும் இந்த சேவை, எந்த விதமான அபாயத்திற்கோ, தவறான பயன்பாட்டிற்கோ, மோசடி குறித்த பயத்திற்கோ இடமளிப்பதில்லை.

மொபைல் போன்

மொபைல் போன்

இதனால் தனது வங்கி கணக்கு எண்ணுடன் வாடிக்கையாளர் மொபைல் எண்ணை இணைத்து வைத்திருக்கும் ஒருவர், சட்ட விரோத பயன்பாட்டை தவிர்க்க தனது மொபைல் போனை பத்திரமாக பாதுகாப்பாக கையாளுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வங்கிகள்

வங்கிகள்

வாடிக்கையாளருக்கு நட்பு ரீதியிலான சேவையை வழங்கவும் வங்கி சேவையை பெறுவதில் அவர்களுக்கு இருக்கும் தொந்தரவுகளை குறைக்கவும், பொது துறை வங்கிகளும் தனியார் துறை வங்கிகளும் சமீபத்தில் தான் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளன. இதில் சிண்டிகேட் வங்கி இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற வங்கிகள் இந்த சேவையினை தொடங்கியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Missed call banking: A novel way of banking

After internet banking and mobile banking, banks have come up with another platform that allows a bank account holder to avail banking services by just giving a missed call on the specified number of the banking entity. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X