சென்னை: ஒயிட் லேபிள் ஏ.டி.எம் (White Lable ATM - WLA) இந்தியாவில் உள்ள வங்கிகளல்லாத நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற வெள்ளை முத்திரை ஏ.டி.எம்-களில் இருந்து எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியும், ஆனால் இந்த சேவைகளுக்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஒயிட் லேபிள் ஏ.டி.எம் இயந்திரங்களில் எந்தவொரு வங்கியின் முத்திரையோ அல்லது விளம்பரங்களோ இருக்காது. மேலும் இவை வழக்கமாக ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடங்களில் இருக்காது.
இந்தியாவில் வங்கிகள் மட்டுமே ஏ.டி.எம்களை நிறுவ அனுமதிக்கப்படுகின்றன. எனினும், 3 மற்றும் 4-ம் அடுக்கு நகரங்களில் ஏ.டி.எம்-கள் அதிகளவு ஊடுருவவில்லை, அப்படி இருந்தாலும் அதன் செயல்பாடு நேரம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த ஒயிட் லேபிள் ஏ.டி.எம்-கள் கனடாவில் மிகவும் பிரபலமானதாக உள்ளன. 2006ஆம் ஆண்டிலிருந்து சில வங்கிகள், இந்தியாவில் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்-களை அறிமுகம் செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இப்போது இதற்கு ஒப்புதலும் கிடைத்தது. இந்தியாவில் ஒயிட் லேபிள் ஏ.டி.எம்களை அமைக்க 4 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சேவை விரிவாக்கம்
இத்தகைய நெருக்கடிகளை களைந்து, ஏ.டி.எம் சேவைகளை விரிவாக்க வேண்டிய தேவையை இந்திய ரிசர்வ் வங்கி உணர்ந்துள்ளது. இந்த முயற்சி தனியார் நிறுவனங்களின் உதவியுடன் செய்ய முடியும் என்றும் எண்ணி இந்த திட்டத்தை அனுமதித்தது ரிசர்வ் வங்கி.
வாடிக்கையாளர் சேவை
இந்த ஒயிட் லேபிள் ஏ.டி.எம் இயந்திரங்கள் வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு சாராருக்குமே பயனுள்ளதாக உள்ளன. ஏ.டி.எம் சேவைகள் அதிகரிப்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவிலான இடங்களில் பணத்தை தங்களுடைய வசதிக்கேற்ப எடுக்க முடியும் மற்றும் அந்த இடங்கள் அவர்களுடைய வீடு அல்லது பணியிடத்திற்கு அருகில் இருக்குமாறும் பயன்படுத்த முடியும்.
நிர்வாக செலவு குறைவு..
ஒயிட் லேபிள் ஏ.டி.எம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படுவதை வங்கிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஏனெனில் நிதி-பரிமாற்றத்திற்கு முந்தைய செலவினங்களை இது குறைக்கிறது மற்றும் இந்த பணம் வழங்கும் ஊடகத்தை பராமரிக்கவும், நிறுவவும் ஆகும் செலவும் குறைகிறது.
நிதி பரிமாற்றம் பிரச்சனை
ஒயிட் லேபிள் ஏ.டி.எம்களில் நடக்கும் தவறுகளைப் பற்றி வங்கிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. நிதி பரிமாற்றம் தோல்வியடையும் நேரங்களில் என்ன செய்வது என்பது தான் வாடிக்கையாளர்களின் முதல் மற்றும் மிகவும் முக்கியமான குறையாக உள்ளது.
லாபத்தை நோக்கி செயல்படு
இது போன்ற பிரச்னைகளை தீர்க்கும் அமைப்பில் மூன்று தரப்பினர் சம்மந்தப்பட்டிருப்பார்கள் - ஒயிட் லேபிள் ஏ.டி.எம்-ஐ செயல்படுத்துபவர்கள், நிதி வழங்கும் வங்கியினர் மற்றும் வாடிக்கையாளரின் வங்கி. வங்கிகள் அல்லாத நிறுவனங்களாக இருக்கும் ஒயிட் லேபிள் ஏ.டி.எம் செயல்பாட்டாளர்கள், லாபத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே செயல்பட்டு வருவார்கள். இதனால் பணம் திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆவதும் மற்றும் தோல்வியடைந்த பரிமாற்றத்தில் கணக்குகளை தவிர்ப்பதும் நடக்கும்.
சேவைக் கட்டணம்
ஒயிட் லேபிள் ஏ.டி.எம்களை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும் சேவைக் கட்டணம் மிகவும் அதிகமான செலவு வாடிக்கையாளரின் இரண்டாவது கவலையாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி
ரிச்ர்வ் வங்கியின் இந்த முடிவு மக்களுக்கு சாதகமா? பாதகமா? இல்லை சமானிய மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியா??


Click it and Unblock the Notifications