முதலீடுகளும், அதனை சுற்றிய அச்சங்களும்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: முதலீட்டுத் துறை உலகம் முழுவதும் பெரிதும் விரும்பப்படுபவை. முதலீட்டுச் சந்தைகளில் பெருகிவரும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை இதற்கு ஒரு நல்ல சான்று.

எனினும், இந்தத்துறை அனைத்து முதலீட்டாளர்களுக்கும் லாபகரமாக அமைவதில்லை. சிலர் இதில் சுலபமாக உச்சிக்குப் போயிவிட, பிறர் மற்றவர்களுடன் சேர்ந்து திணறுவதை நாம் பார்த்துள்ளோம். முதலீட்டுச் சந்தை நிபுணர் ஜெஃப் வூத்ரி பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஏன் முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர் அல்லது விலகுகின்றனர் என ஆராய்ந்து உண்மைகளை விளக்குகிறார்.

விரலுக்குக்த் தகுந்த வீக்கம்

விரலுக்குக்த் தகுந்த வீக்கம்

பெரும்பாலான முதலீட்டாளர்கள் எப்போதும் தங்கள் நஷ்டங்களை பெரும் அளவில் சிந்தித்துகொள்வர். இது நல்லதுதான், ஆனால் முதலீடுகளில் முன்னேற்றங்களைக் காண இது கண்டிப்பாக ஒரு தடையாக இருக்கும்.

இந்த முடலீட்டுத் துறையில், ஆபத்து நிறைந்த சில முயற்சி செய்யும் மனநிலை அவசியம். ஆபத்தைக் கண்டு பயந்து ஒதுங்குதல் வாய்ப்புகளை நழுவவிட வழிவகுக்கும்.

 

பழைய நடைமுறையை பின்பற்றுதல்

பழைய நடைமுறையை பின்பற்றுதல்

பெரும்பாலான முதலீட்டாளர்கள் பழைய முதலீட்டு வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். அவ்வாறு செய்வதால்,பெரும் வரவுகளை தவறவிட்டுவிட்டு சிறிய லாபமற்ற வருமானங்களை மட்டுமே பெறுகின்றனர். இறுதியில் முதலீட்டில் அவர்களின் பயணம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

சிறு குச்சியும் பல் குத்த உதவும்

சிறு குச்சியும் பல் குத்த உதவும்

பாரிஸ் நகரிலுள்ள ஈஃபிள் டவர் பார்க்க மிகப்பெரியதானாலும், சிறிய உலோகச் சட்டங்களை வைத்தே அது கட்டப்பட்டு இறுதியில் மிகப் பெரியதாக தோற்றமளிக்கிறது.

முதலீடுகளுக்குள் நுழைவதற்குமுன் சிலர் சிறிய நட்டங்களைப் பற்றி கவலைகொள்ள மாட்டார்கள். அவர்கள் திட்டமிடுதலிலும் இந்த சிறிய நட்டங்களைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.

 

உணர்ச்சிவசப்படும் முட்டாள்கள்

உணர்ச்சிவசப்படும் முட்டாள்கள்

மனிதர்கள் பொதுவாக உணர்ச்சிவசமானவர்கள். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், முதலீட்டுத்துறை இது போன்ற "ஃபீலிங்குகளுக்கு" இடமளிப்பதில்லை.

ஒரு கார் இனிமையான பயணத்தை மிகவும் கரடுமுரடாக ஆக்கினால், அதை விற்கவோ அல்லது தவிர்க்கவோ செய்வார்கள். அதில் எக்காரணம் கொண்டும் பயணத்தைத் தொடர விரும்ப மாட்டார்கள். சிலர் அந்த காரை சரி செய்வது சரியான முடிவாக இருக்கும் என நினைத்து எந்தவித முன்யோசனை அல்லது கணக்கிடுதல் இல்லாமல் அதை மெக்கானிக்கிடம் கொடுத்து இறுதியில் அந்தக் காருக்குச் சற்றும் பொருத்தமில்லாத ஒரு பெரும் தொகையை கப்பம் கட்டிவிட்டு வருவர்.

இந்நிலையில் சிறந்த முடிவை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்தல்

ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்தல்

ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க இயலாதவை ஆனால் அவை முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையாக இருக்க வேண்டியதில்லை. முதலீட்டு வரலாறும் அதிக ஆபத்துகள் அதிக லாபத்தைக் கொண்டிருப்பதையே காட்டுகின்றது.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வர்த்தகத்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து சற்று தள்ளியே வைக்க முயலுகின்றனர். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து வாய்ப்புகளையும் இழந்து பின்னர் போண்டியாகவோ அல்லது பிற இன்னல்களுக்கோ ஆளாகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 Reasons Why You Are Afraid Of Investments

Investment sector is one of the most desired sectors all over the world. This can be proved by upholding the increasing number of private companies and the crowds in the finance market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X