பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி??

சென்னை: ஸ்மார்ட்டாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நிதி விவகாரங்கள் குறித்து அதீதமான அறிவு இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. எனினும், இவ்வாறு முதலீடு செய்ய வல்லுநர்கள் அளவிற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அறிவு முக்கியமானது தான், எனினும், முதலீடு செய்யத் துவங்குவதே அறிவுப் பூர்வமான செயல் தான்.

உங்களுடைய நிதி நிலைமை முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை என்று நீங்கள் கருதினாலும், ஒரு சிறிய தொகையையாவது மூதலீடுகளில் செலவிடுவது நல்லது, அது காலப்போக்கில் உங்களுக்கு கனிவான உதவிகளைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

வெற்றிகரமான முதலீட்டாளராக மாறுவதற்கென்று ஒற்றை வழிப்பாதை எதுவும் இல்லாத போது, இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு முதலீடு செய்வது எப்படி என்பதைப் பற்றிய அடிப்படை பாடங்களை கொடுக்க உள்ளது.

கடன்களை செலுத்தி விடுங்கள்

கடன்களை செலுத்தி விடுங்கள்

அதிகமான வட்டிகளைத் தாங்கி வரும் கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவை உங்களுடைய வருமானத்தை பெரிதும் சாப்பிட்டு விடும். எனவே, தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவற்றை அவ்வப்போது செலுத்தி விடுவது நலம். இல்லாவிடில், இரட்டை இலக்க வட்டியை செலுத்தியே, வருமானத்தின் பெரும்பகுதியை செலவழித்து விடுவீர்கள்.

சேமிப்பு மற்றும் முதலீடு

சேமிப்பு மற்றும் முதலீடு

இத்தகைய கடன்கள் இல்லாத போது, உங்கள் வருமானத்தில் சேமிக்கவும் மற்றும் முதலீடு செய்யவும் அதிகமான பணத்தை ஒதுக்க முடியும். இதன் மூலம் ஒரு உறுதியான முதலீட்டுக்கான வழிமுறையை, கடன் சுமை இல்லாமல் உங்களால் தேடிச் செல்ல முடியும்.

உதாரணம்

உதாரணம்

9 சதவீதம் வட்டியுடைய நிலையான வைப்புத் திட்டத்தை வாங்குவதற்கு மாற்றாக, 15 சதவீதம் வட்டி உடைய தனிநபர் கடனை முடித்து விடுவது நல்லது. இந்த வகையில் கணக்கிட்டு, வட்டி விகிதங்களுக்கு இடையிலான மதிப்பு வேறுபாடுகளை உணர்ந்து, இதில் நீங்கள் அடையும் வெற்றி/தோல்வி, இலாபம்/நஷ்டம் ஆகியவற்றை அறிந்து தெளிந்து முதலீடு செய்யும் வாய்ப்புகளைப் பற்றி யோசிக்கத் தொடங்குங்கள்.

முதலீட்டுக்கு முன் ஒர் திட்டம்!

முதலீட்டுக்கு முன் ஒர் திட்டம்!

முதலீடு பற்றி எண்ணும் போது, உங்கள் மூளையில் ஓடும் எண்ணங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். முதலீட்டுக்கான குறிக்கோள்களை நீங்கள் எழுதிக் கொள்வதன் மூலம், எங்கு மற்றும் எப்படி பணத்தை முதலீடு செய்யலாம் என்று தெளிவு பெற முடியும். முதலீட்டுக்கான இந்த திட்டத்தை வடிவமைக்கும் வேளையில், உங்களுக்கு இருக்கும் பண வரவு மற்றும் எதிர்கால குறிக்கோள்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நிதி நெருக்கடியை சமாளிப்பது

நிதி நெருக்கடியை சமாளிப்பது

ஆறு மாத செலவிற்கான தொகையை சேமிப்பு கணக்கில் நீங்கள் பராமரித்து வர வேண்டும் அல்லது நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு மாற்ற (நிலையான வைப்பு நிதி திட்டம் அதிக வட்டியைத் தரும்) முயற்சி செய்ய வேண்டும்.

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு

பின்னர், உங்களுக்கான இடர்பாடுகள், பண வரவு மற்றும் எதிர்கால குறிக்கோள்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கலவையான முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்யுங்கள் - அது நிலையான வருமானம் தரும் திட்டமாகவோ, ஈக்விட்டி, கம்மோடிட்டி, ரியல் எஸ்டேட் அல்லது இன்சூரன்ஸ் என எந்த துறையாகவும் இருக்கலாம். இன்சூரன்ஸில் முதலீடு செய்வதன் மூலம் இடர்பாடுகளை முன்கூட்டியே தவிர்த்து பாதுகாத்துக் கொள்ளலாம். பின் நாட்களில் முதலீட்டுக்கான வாய்ப்பாக கருத முடியும்.

எதிர்கால திட்டங்கள்

எதிர்கால திட்டங்கள்

உங்களுக்கு எதிர்கால திட்டங்கள் இருந்தால், உதாரணமாக ஓய்வு பெறும் திட்டம், குழந்தையின் படிப்புக்காக பணம் சேர்த்தல், உலகளவில் சுற்றுலா செல்லுதல் போன்ற செயல்களில் முதலீடு முதிர்வடையும் காலத்தை ஒரு காரணியாக கருத வேண்டும். குறுகிய கால திட்டமாக இருந்தால் முதலீடு செய்யும் திட்டங்களின் வாய்ப்புகளைப் பற்றி அறிய வேண்டும்.

புதிய முதலீட்டாளரின் எண்ணங்கள்

புதிய முதலீட்டாளரின் எண்ணங்கள்

புதிதாக முதலீடு செய்பவர்களில் பலரும், தாங்கள் முதலீடு செய்யும் திட்டத்தின் இடர்பாடுகளை குறைவாகவும் அல்லது பலன்களை மிகவும் அதிகமாகவும் மதிப்பிட்டு விடுகிறார்கள்.

ஈக்விட்டி சந்தைகள்

ஈக்விட்டி சந்தைகள்

உதாரணமாக, ஈக்விட்டி சந்தைகள் எப்பொழுதுமே இடர்பாடுகள் (Risk) நிறைந்தவையாக இருப்பதால், அதிகளவு பலன் தரும் நிலையில் சந்தைகள் சரிவடைந்தால் கூட பலன்கள் இல்லாமல் போய் விடுகின்றன. எனவே, முதலீடு செய்பவர்கள் தங்களுடைய மூலதனங்களை பல்வேறு வகையான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், தங்களுக்கான இடர்பாடுகளை பெருமளவு குறைத்திட முடியும். ஈக்விட்டி திட்டத்தில் அதிகளவு பலன் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதிக இடர்பாடுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நிலையான வைப்பு நிதி திட்டங்கள்

நிலையான வைப்பு நிதி திட்டங்கள்

நிலையான வைப்பு நிதி திட்டங்கள், PPF மற்றும் வரி இல்லாத பத்திரங்கள் ஆகியவை மிதமான அளவு பலன்களையும், குறைவான இடர்பாடுகளையும் தரக்கூடியவையாக உள்ளன. ஸ்மார்ட்டாக முதலீடு செய்ய விரும்புபவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், இது போன்ற கலவையான திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யும் போது வரியையும் கவனத்தில் கொண்டிருப்பது நல்லது.

முதலீடும் லாபமும்...

முதலீடும் லாபமும்...

உங்களுக்கான நிதித் தேவைகள் மாற்றம் பெறும் போது, முதலீடுகளுக்கான குறிக்கோள்களும் மாற்றம் பெறுகின்றன. எனவே, உண்மையில் கிடைக்கக் கூடிய பலன்களைக் கணக்கிடுவதும், முதலீடு பற்றி விபரங்களைப் பற்றி எளிமையான விபரங்களை பராமரிப்பதும் - திட்டத் தொகை, பலன்கள் கிடைக்கும் விகிதம், முதிர்வுத் தொகை - ஆகியவற்றைக் கொண்டு உங்களுக்கான முதலீட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+