சென்னை: இன்றைய வாழ்கை முறையில் கிரெடிட் கார்ட் மிகவும் அவசியமானதாக உள்ளது. இதனை முறையாகவும், கட்டுப்பாடாக பயன்படுத்தினால் லாபத்தை பார்க்க முடியும். இல்லை என்றால் உங்களைது முழு பர்சஸையும் கிரேடிட் கார்டு பதம் பார்த்துவிடும்.
எனவே சரியான கிரேடிட் கார்டை தேர்ந்தெடுப்பது எப்படி என்ற குழப்பமா? கவலை வேண்டாம் தொடர்ந்து படியுங்கள்.
நாம் கவணிக்க வேண்டியவே
இதர கிரெடிட் சாதனங்களைப் போலவே, கிரெடிட் கார்டையும் பல வித யோசனைகள் பின்னரே தேர்வு செய்ய வேண்டும்.
உங்களுக்கான கிரெடிட் கார்டை தேர்வு செய்வதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
வருடாந்தர கட்டணம்
கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் போது வருடாந்தர கட்டணத்தை முக்கிய அளவுகோலாகக் கொள்ள வேண்டிய தேவையை உணரலாம். பொதுவாக, அதிகமான வருடாந்தர கட்டணத்தை உடைய கிரெடிட் கார்டு அதிகப்படியான சலுகைகளை அளிக்கும் என்றே கருதப்படுகிறது. எதுவாயினும், உங்களின் உபயோகத்துக்கு தகுந்தவாறு உங்களுக்கான கிரெடிட் கார்டை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். மேலும், ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டின் நியாயமான மதிப்பை அறிந்துக்கொள்ள விலைப்பயன் சார்ந்த ஆய்வு ஒன்றை மேற்கொள்வது நலம்.
வட்டி விகிதம்
இது, கிரெடிட் கார்டை முனைப்பாக உபயோகிக்கும் ஆர்வமுடையோர் கட்டாயம் கவனிக்க வேண்டியதொரு விஷயமாகும். ஏனெனில், நீங்கள் கடன் தொகையை கட்டாமல் விடும் பட்சத்தில், இந்த விகிதம் தான் நீங்கள் கடனாக பெற்ற தொகையின் விலையை நிர்ணயிக்கும். இந்தியாவின் வெவ்வேறு வங்கிகளும் நிர்ணயித்திருக்கும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஒரே அளவில் இருப்பதாகத் தோன்றினாலும், சில வங்கிகள், உதாரணமாக எஸ்பிஐ வங்கி போன்றவை எஸ்பிஐ அட்வான்டேஜ் பஸ் கார்டு போன்றவற்றின் மூலமாக கிரெடிட் கார்டு நிதி வசதியை மாதத்துக்கு 2.25%, அதாவது வருடத்துக்கு 27% என்ற விகிதத்தில் வழங்கி வருகின்றன. மேலும், குறைவான கிரெடிட் விலை என்ற சலுகையை பெற, கடன் பெறுபவர் வங்கியில் எஃப்டி அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். அதோடு, இந்த எஃப்டியின் மதிப்பில் அதிகபட்சமாக 85% என்ற அளவே இதற்கு உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, உங்கள் கார்டு பின்-எனேபில்ட் அல்லது இஎம்வி-சிப் பேஸ்ட் என்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளதா என்பதைப் பாருங்கள்.
ரிவார்ட் பாயின்ட்கள் மற்றும் கேஷ் பேக்
உங்கள் உபயோகத்துக்கான பரப்பளவும் உங்கள் கிரெடிட் கார்டை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட அளவு பயணச் செலவினங்களை நீங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு ரிவார்ட் பாயின்ட்களை அள்ளிக்கொடுக்கக்கூடியதான ட்ராவல் ரிவார்ட்ஸ் கார்டை நீங்கள் வைத்திருந்து, எப்போதோ ஒருமுறை மட்டுமே நீங்கள் பயணிக்க நேர்ந்தால், அந்த கார்டு உங்களுக்கு அளிக்கக்கூடிய நன்மைகள் பயனற்றதாகி விடும். உங்கள் ரிவார்டு பாயின்ட்கள் ஏன் பயனற்றதாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நற்பயன்கள்
ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டை வைத்திருப்பதனால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய நற்பயன்களையும் கார்டை தேர்வு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டும். சில கிரெடிட் கார்டுகள் எரிபொருள் வாங்கும் போது குறிப்பிட்ட அளவு தள்ளுபடியும், சில கார்டுகள், கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் கூட்டுறவு வைத்துள்ள கடைகளில் அக்கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பொருட்கள் வாங்கினால் குறிப்பிட்ட அளவு தள்ளுபடியும் வழங்குகின்றன.
ஸைன்-அப் போனஸ்
பல கிரெடிட் கார்டுகளுடன், ரிவார்ட் பாயின்ட்கள் மற்றும் கேஷ் பேக் ஆஃபர்கள் வடிவிலான ஸைன்-அப் போனஸ் வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர் சேவை
கிரெடிட் கார்டு வழங்கும் வங்கியின் நம்பகமான வாடிக்கையாளராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பான வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு கிட்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications