வங்கி வைப்பு நிதிகளில் அதிக லாபம் பெறுவது எப்படி?? ரொம்ப சிம்பிள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பாதுகாப்பான முதலீடு என்றால் நம் நினைவிற்கு வரும் ஒன்று வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதி தான். ஈக்விட்டிகள் மற்றும் தங்கத்தை போலன்றி, ஃபிக்ஸட் டெபாஸிட்கள் எப்போதும் முன்பே தீர்மானிக்கப்பட்ட ரிட்டர்ன்களை வழங்கக்கூடியவை ஆகும். ஆனாலும், அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்களை அதிகரிப்பதற்கென சில வழிமுறைகள் உள்ளன.

 

ஒரு குறிப்பிட்ட ஃபிக்ஸட் டெபாஸிட் திட்டம் அல்லது ஃபிக்ஸட் இன்ட்ரஸ்டை வழங்கக்கூடிய திட்டத்தைப் பற்றி தீர்மானிக்கும் முன் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.

வட்டி விகிதங்களை விட ஈட்டத்தைப் பார்ப்பதே முக்கியம்

வட்டி விகிதங்களை விட ஈட்டத்தைப் பார்ப்பதே முக்கியம்

வைப்பு நிதிகளுகக்கான ரிட்டர்ன்களை பொறுத்தவரையில், அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய ஈட்டங்கள் தான் முக்கியம், வட்டி விகிதம் இல்லை. நிறுவனம் ஒன்றைச் சார்ந்த ஃபிக்ஸட் டெபாஸிட்டானது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காம்பவுன்ட் செய்யப்பட்டு, சுமார் 9 சதவீத வட்டி விகிதத்தை வழங்கக்கூடியதாகும்.

வங்கி வைப்பு நிதியில் அதிக லாபம்

வங்கி வைப்பு நிதியில் அதிக லாபம்

அதேபோல் வட்டி விகிதத்தை வழங்குவதும், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை காம்பவுன்ட் செய்யப்படுவதுமான வங்கி ஃபிக்ஸட் டெபாஸிட்டானது, கட்டாயம் அதிகமான ஈட்டத்தைக் கொடுக்கும். எனவே நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஈட்டங்களில் தானேயொழிய வட்டி விகிதங்களில் அல்ல.

வங்கி ஃபிக்ஸட் டெபாஸிட்களுக்கு அப்பாற்பட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்:
 

வங்கி ஃபிக்ஸட் டெபாஸிட்களுக்கு அப்பாற்பட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்:

மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்கள், நிறுவனம் சார்ந்த ஃபிக்ஸட் டெபாஸிட்கள் மற்றும் வரியற்ற கடன் பத்திரங்கள் போன்றவை வங்கி ஃபிக்ஸட் டெபாஸிட்களைக் காட்டிலும் அதிகமான ஈட்டத்தைக் கொடுக்கவல்லவை. இன்னும் சொல்லப்போனால், சில வேளைகளில் இவை மிகவும் பாதுகாப்பானவையும் கூட.

வரி பயன்கள்

வரி பயன்கள்

நீங்கள் அதிகபட்ச வரி அடைப்புக்குள் இருப்பவராக இருந்தால், வரியற்ற கடன் பத்திரங்களின் மீது நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில், வரி விதிப்புக்கு பிந்தைய ஈட்டம் உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும்.

15ஜி/15ஹெச் படிவத்தை சமர்ப்பிக்க மறவாதீர்கள்:

15ஜி/15ஹெச் படிவத்தை சமர்ப்பிக்க மறவாதீர்கள்:

வட்டியிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் வருவாய், வருமான வரி செலுத்த வேண்டியதற்கென நிர்ணயிக்கப்பட்ட வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் இல்லையென்று நீங்கள் நம்பும் பட்சத்தில், 15ஜி அல்லது 15ஹெச் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இதன் மூலம், உங்கள் ஃபிக்ஸட் டெபாஸிட் மீது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்கலாம்.

காம்பவுன்டிங்கை மறவாதீர்கள்

காம்பவுன்டிங்கை மறவாதீர்கள்

ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை காம்பவுன்ட் செய்யப்படும் திட்டங்களே, அரையாண்டு அல்லது வருடத்துக்கு ஒருமுறை என்ற வீதத்தில் காம்பவுன்ட் செய்யப்படும் திட்டங்களைக் காட்டிலும் சிறந்தவை. ஏனெனில் இவை உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்த ரிட்டர்ன்களை அதிகரிக்கக்கூடியவை.

ஃபிக்ஸட் டெபாஸிட்டை முறிப்புது முற்றிலும் தவறு

ஃபிக்ஸட் டெபாஸிட்டை முறிப்புது முற்றிலும் தவறு

பெரும்பாலாலும், ஒரு ஃபிக்ஸட் டெபாஸிட்டை அதன் மெச்சூரிட்டி காலத்துக்கு முன்பே முடித்துக் கொள்ள நீங்கள் முற்ப்பட்டால், அதற்கு நீங்கள் அபராதம் கட்ட வேண்டி வருவதோடு, உங்களுக்கு கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்களும் குறையலாம். எனவே, முடிந்த வரையில் உங்கள் டெபாஸிட்டை அதன் மெச்சூரிட்டி காலத்துக்கு முன்பே முறித்துக் கொள்வதை தவிர்க்கப் பாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to increase returns from fixed deposits?

Fixed deposits unlike equities and gold always offer predetermined returns. However, there are ways and means to increase your returns from fixed deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X