சென்னை: நீங்கள் ஓய்வு பெற்றவரா? முதலீட்டாளரா? அல்லது, மாதா மாதம் தொடர்ந்து நல்லதொரு வருமானத்தை எதிர்பார்க்கிறீர்களா? அருமையான வட்டி விகிதங்களுடன் 4 சூப்பர் மாத வருமானத் திட்டங்கள் இதோ...
காலாண்டு, அரையாண்டு, மற்றும் முழு ஆண்டுத் திட்டங்களில் கிடைக்கும் வட்டிகளைவிட மாத வருமானத் திட்டங்களில் வரும் வட்டிகள் குறைவுதான் என்பதும் நினைவில்கொள்ள வேண்டியவை.
ஹெச்.டி.எஃப்.சி.
இந்தியாவின் தனியார் வங்கித்துறையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கிக்கும் சிறப்பான மதிப்புடையது, இவ்வங்கியில் 15 மற்றும் 22 மாத கால மாத வருமானத் திட்டத்திற்கு எச்.டி.எஃப்.சி. நிறுவனம் 9.25 சதவீதம் வட்டி அளிக்கிறது. ஆனால், 33 மாத கால மாத வருமானத் திட்டத்திற்கு வட்டி 9.15 சதவீதம் தான்! இத்திட்டத்தின் மூலம் முதலீட்டுத் தொகையில் 75 சதவீதம் வரை லோன் கிடைக்கும்.
யூகோ வங்கி (UCO BANK)
யூகோ வங்கி மாத வருமானத் திட்டத்தில் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி கிடைக்கும். சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் முதியவர்களுக்கான பிரிவில் தங்களது முதலீட்டு தொகைக்கு 9.5 சதவீதம் வட்டி கிடைக்கும். முதலீடு செய்த அடுத்த மாதத்திலிருந்தே எந்தத் தள்ளுபடியும் இன்றி சாதாரண வட்டி விகிதத்தில் பணம் கிடைக்கும்.
கனரா ரொபேகோ
இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் 5 ஆண்டு காலத்திற்கு 9.58 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. சமீபத்திய எதிர்காலத்தில் கிடைக்கும் டிவிடெண்டுகளுக்கு இத்திட்டம் சிறந்தது. ஆனால் ஒன்று, வைப்பு நிதித் திட்டங்களில் கிடைக்கும் கியாரண்டி ரிட்டன்கள் இதில் கிடைப்பதில்லை. இத்திட்டம் எதிர்காலத்தில் நன்றாகச் செயல்படும் என்றும் தோன்றவில்லை.
எஸ்.பி.ஐ. மேக்னம்
கடந்த ஓராண்டில் இத்திட்டத்தில் 10.68 சதவீதம் வட்டி வழங்கியுள்ளது இத்திட்டம். எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வரும் கடன் சார்ந்த இந்தத் திட்டத்திலும் வைப்பு நிதித் திட்டங்களில் கிடைக்கும் கியாரண்டி ரிட்டன்கள் கிடைப்பதில்லை. இத்திட்டமும் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என்று தோன்றவில்லை.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications