குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற ஈசியான வழி இது!!

சென்னை: உலகம் வேகமாக இயங்கி வரும் நிலையில் அதனோடு நாமும் வேகமாக ஓடி கொண்டிருக்கின்றோம். நமக்காக என்று உழைப்பதோடு நம் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும் லாபம் பின் தங்கி விடும் என்ற பயம் நாம் அனைவரின் மனதிலும் ஒடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓடியப்படி நாம் லாபம் சம்பாதிக்கவும் கூடவே ஓய்வெடுக்கவும் பல தொழில் நம் கண் முன்னே இருக்கின்றது, ஆனால் இதை யாரும் கண்டுகொள்ளவதே இல்லை.

மூலதன தட்டுப்பாடு

மூலதன தட்டுப்பாடு

தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனேயே நம் அனைவருக்கும் வரும் முதல் பிரச்சனை பணத்திற்கு எங்கே போவது என்று தான். இதற்காக பயந்து எந்த முன்னேற்றத்தையும் அடையாமல் வாழ்க்கையை வீணடித்து கொண்டிருப்போம்.

சரியான சிந்தனை

சரியான சிந்தனை

கூர்ந்த மற்றும் நுண்ணிய பார்வை செலுத்தினால் போதும் கண் முன்னே பல தொழில் உள்ளது. அதற்காக உங்கள் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்தாலே போதுமானது.

ஸ்மார்ட் ஐடியாஸ்

ஸ்மார்ட் ஐடியாஸ்

இத்தகைய தொழில்களுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய தேவையில்லை, சிந்தித்து செயல்ப்பட்டால் கூடுதல் லாபம் காண முடியும். எடுத்துக்காட்டாக வீட்டில் இருந்த படியே செய்யும் பல தொழிலில் அதிக முதலீடு தேவைபடுவதில்லை. இணையத்தளத்தின் உதவி கொண்டு உட்கார்ந்து இருந்த படியே பல தொழிலை செய்ய முடியும். அப்படி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை பற்றி இங்கு காண்போம்.

உரிமையியல் (Franchising)

உரிமையியல் (Franchising)

குறைந்த அளவு முதலீட்டில் அதிக அளவு லாபம் பார்கும் தொழில் உரிமையியல். அதாவது ஒருவர் நடத்தும் தொழிலின் ஒரு பிரிவை நீங்கள் உரிமையாக கொண்டு நடத்துவது. இதற்காக நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய தேவையில்லை (தேர்ந்தெடுக்கும் தொழிலை பொருத்து). தேவையான அனைத்தையும் உரிமையாளர்களே கொடுத்து விடுவார்கள். இதற்கான பெருபான்மையான லாபம் உங்களுக்குதான். இதனால் கஷ்டமும் இல்லை. இதன் மூலம் லாபம் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும் (இது செக்ஷன் உங்ககிட்டதான் இருக்கு).

புகைப்படக்கலை (Photography)

புகைப்படக்கலை (Photography)

அனைவருக்குள்ளும் ஒரு புகைப்படம் எடுக்கும் ஆற்றல் எப்பொழுதும் உள்ளது அழகான எதையாவது பார்க்கும் போது உடனே அதை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆற்றலை கொஞ்சம் மெருகேற்றினால் போது, அதிக அளவில் லாபம் பார்த்துவிடலாம். உங்கள் புகைப்படத்தையோ அல்லது நீங்கள் விரும்பி எடுத்த புகைப்படத்தையோ இணையத்தளத்தில் பேஸ்ட் செய்து அதன் மூலம் கிடைக்கும் கிளிக்கே வைத்தே பலமடங்கு சம்பாதிக்கலாம். இதற்கு உங்கள் சிந்திக்கும் ஆற்றலும் ஒரு கேமராவும் தான் முதலீடு. அப்புறம் என்ன ஸ்மைல் பிளிஸ் தான்...

விருந்து மற்றும் நிகழ்ச்சிக்கு திட்டமிடுபவர் (Party and Event Planner)

விருந்து மற்றும் நிகழ்ச்சிக்கு திட்டமிடுபவர் (Party and Event Planner)

இன்றைய தலைமுறையினர் சின்ன வேலைகளை செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார்கள் இதை சாதகமாக பயன்படுத்தினால் நமக்கு லாபம் தான். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு திட்டம் தீட்டி செயல்முறைபடுத்துவதில் அதிக வேலை இருந்தாலும் அதிக லாபம் உண்டு. தங்கள் வீட்டு விருந்து மற்றும் நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதையே பலரும் விரும்புகின்றனர். இதற்காக பணம் செலவு செய்தாலும் நேரம் கிடைக்காமல் அவதிபடும் நபர்கள் இது போன்ற தொழிலை செய்பவர்களிடம் ஒப்படைத்தால் அவர்களே நல்ல முறையில் நடத்தி கொடுப்பர். இந்த பிஸினஸ்ஸை செய்ய பெரிய அளாவில் முதலீடு தேவையில்லை. ஆனால் அதிக அளவு லாபம். இதற்கு பெரிய முதலீடு உங்கள் மூலைதான்.

உள் அலங்காரம் (Interior Decorator)

உள் அலங்காரம் (Interior Decorator)

ஒவ்வொரு மக்களுக்கும் தங்கள் இல்லத்தை அழகாக வைத்துக்கொள்ள ஆசை கண்டிப்பாக இருக்கும். அதுவும் வீட்டின் உள் அலங்காரம் என்பதை அனைவரும் விரும்புகின்றனர். இதற்கென தனியாக இருக்கும் வேலைதான் உள் அலங்காரம். இதன் மூலம் ஒருவர் தனது தனிப்பட்ட திறனை காண்பித்து அதன் மூலம் பணமும் சம்பாதிக்கலாம். இதற்காக அவர்கள் பெரிதாக முதலீடு செய்ய தேவையில்லை. சிந்திக்கும் ஆற்றலும் உழைப்பும் இருந்தாலே போதுமானது குறைந்த நேரத்தில் பலமடங்கு சம்பாதிக்கலாம்.

உணவு

உணவு

இந்த உலகில் உணவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது, சிலர் உணவிற்காகவே வாழ்வதுண்டு. இந்த ஒரு விஷயம்போது நமக்கு. உணவுடன் உங்கள் ஆர்வத்தையும் சேர்த்தால் சுவையுடன் லாபத்தையும் பெற முடியும். உணவு தொழிலை நீங்கள் நடத்தும் முறையில் அதற்கான மூலத் தொகை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சிற்றுண்டி கடைக்கு பெரிய அளவில் செலவு இல்லை. இதுவே உணவு என்றால் சற்று கூடுதல் முதலீடு. ஆனால் அனைத்திற்கும் லாபமே.

பேக்கரி

பேக்கரி

உலகில் பேக்கரி பொருட்களுக்கும், இனிப்பு சுவைக்கும் அடிமையாகதவர்கள் யாவரும் இருக்க முடியாது. அதன் சுவைக்காக ஏங்கும் மக்களுக்காக பேக்கரி தொழில் செய்தால் கண்டிப்பாக முன்னேற்றமே. அதற்கான அடிப்படை பொருட்களை வாங்குவது என்பதே மிக மிக எளிமையான காரியமே. தொடக்கத்தில் பெரிய அளவில் ஆரம்பிக்காமல் சிறிய அளவில் ஆரம்பித்தால் பெரிதாக செலவில்லாமல் அதிகமான லாபத்தை பெற முடியும்.

வலை வடிவமைப்பு (வெப் டிசைனிங்)

வலை வடிவமைப்பு (வெப் டிசைனிங்)

இண்டர்நெட், இந்த உலகின் பட்டி தொட்டி எங்கும் பறவியுள்ளது. வலை வடிவமைப்பு ஆதாவது வெப் டிசைனிங் தற்போது மிகவும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு அத்தியாவசியமானதாக உள்ளது. இணையத் தளத்தில் இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகின்றது. இதனை பயன்படுத்தி பல வலை தளங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றது என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். ஆகையால் வலை வடிவமைப்பின் மூலம் பலவித வேலைவாய்ப்பு முன்னேற்றத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+