மும்பை: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) கடந்த முன்று நாட்களில் ரூ.4000 கோடிகளை இந்திய பணச்சந்தையில் முதலீடு செய்ததன் காரணமாக ஆச்சரியப்படும் வகையில் சென்செக்ஸ் புள்ளிகள் இந்த மூன்று நாட்களில் 1500 புள்ளிகளை வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் புள்ளிகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.
நடந்து முடிந்த தேர்தலின் கருத்து கணிப்புகள் வெளியான பின்னர், கடந்த செவ்வாய்கிழமையன்று, அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பணச் சந்தையில் இருந்து சுமார் ரூ.2000 கோடி திரும்பப்பெற்றுள்ளது.
4000 கோடி ரூபாய்
இதன் காரணமாக இந்தியச் சந்தைகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்று நாட்களில் அதிகமாக ரூ.4000 கோடிகள் இந்திய பணச்சந்தையில் புழக்கத்திற்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
வங்கித் துறை பங்குகள்
இந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகளில் பெரும்பாலவை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குகளாகும், அதிலும் குறிப்பாக வங்கித் துறையைச் சேர்ந்தவைகளாகும்.
பங்கு விற்பனை
செவ்வாய் கிழமையன்று மட்டும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு பங்குகளை வாங்கியுள்ள போது, பணப் பிரிவில் ரூ.649 கோடிகள் அளவிற்கு உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.
தொடர்கதை
கடந்த சில மாதங்களாகவே வெளிநாட்டு நிறுவன முதலீடடாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதும், உள்ளூர் நிறுவனத்தினர் மொத்தமாக விற்பவர்களாகவும் இருக்கும் நிலையே உள்ளது.
அன்னிய முதலீடு
2014-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மட்டும், நிலையான அரசு உருவாகும் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.9600 கோடிகளை முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் 8-வது மாதமாக ஏப்ரல் உள்ளது.
பாதுகாப்பான 5 ஆண்டுகள்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை இருப்பதால் மேலும் அதிகமாக அளவு பணப் புழக்ககம் இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்க இருப்பதால், வரும் ஆண்டுகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications