சென்னை: சேவை வரி விலக்குப் பட்டியல் என்பது சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகளைக் குறிக்கும். அதாவது இந்தப் பட்டியலில் வராத சேவைகள் வரிவிதிப்பிற்குட்பட்டவை. ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டின் போது இந்த பட்டியலில் சில சேவைகள் நீக்கப்பட்டும், சில சேவைகள் சேர்க்கபடவும் செய்கின்றது. இதன் மூலம், சேவை வரி விதிக்கப்படும்.
இந்த செயல்திட்டம் முதன் முதலில் நிதிச் சட்டம் 2012 ஆம் ஆண்டில் செயல் முறைகளை சீர் செய்யவும் சரக்கு மற்றும் சேவை வரிகளை நோக்கிப் பயணிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
17 சேவைகள்
தற்போது பட்டியலிடப்பட்டுள்ள 17 விதமான சேவைகள் பிரிவு 66D-இன் கீழ் இந்த சேவை வரி விலக்குப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் அரசு அல்லது உள்ளூர் நிர்வாக சேவைகள், ரிசர்வ் வங்கி தரும் சேவைகள், குறிப்பிட்ட சில கல்விச் சேவைகள், மின் கடவு அல்லது பகிர்மான சேவைகள், பயணிகள் செய்யும் பயணத்திற்கான சேவைகள் ஆகியவை அடக்கம்.
விளம்பரம்
2014-15 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் பிற அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் ஆகிய சேவைகள் இந்த விலக்குப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதே நேரம் ஆன்லைனில் மொபைல், ஏ டி எம், வணிக கையேடுகள் ஆகியவற்றில் செய்யப்படும் விளம்பர சேவைகளுக்கு வரி மீண்டும் விதிக்கப்பட்டு இந்த பட்டியலிலிருந்து மேற்கண்ட சேவைகள் நீக்கப்பட்டன.
சேவை வரி
நிதியமைச்சர் அளித்த தகவல்கள் படி மறைமுக வரிகளில், சேவை வரி மிக அதிகமான வளர்ச்சியை கொண்டுள்ளதாக தெரிவித்தார். எனவே சேவை வரி வசூலை இந்த வருடம் அரசு 7,525 கோடி ரூபாயாக விரிவக்கியுள்ளது.
மறைமுக வரி
மறைமுக வரி வசூல் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 4.6 சதவிகிதம் உயர்ந்தது. இந்த வளர்ச்சி சேவை வரியின் 19 சதவிகித வளர்ச்சி அதாவது 38862 கோடி ரூபாயின் மூலம் கிடைத்ததாகும்.
பிரதமர்
எனினும், மொபைல் மற்றும் ஆன்லைன் விளம்பர சேவைகளை பட்டியலிலிருந்து நீக்கியது இந்த துறைகளை பாதிப்படையச் செய்துள்ளது. பிரதமரின் மொபைல் மற்றும் இன்டர்நெட் துறை வளர்ச்சிக்கான வாக்குறுதிக்கேற்ப நிதி அமைச்சர் சேவை வரியை மீண்டும் கொண்டுவர முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications