சென்னை: இந்தியாவைப் பொறுத்த வரையில் வங்கிகளில் உள்ள டெபாசிட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வழி வகைகளிலும் வரியை நேரடியாக கழித்துக் கொள்ளும் முறை வழக்கில் உள்ளது. இதில் லாட்டரி மற்றும் குதிரை பந்தயங்களில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரியை நேரடியாக கழிக்க முடியும் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்.
லாட்டரி பரிசுச் சீட்டுக்கான நேரடி வரி பிடித்தம்
உங்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருந்தால் 30 சதவீதம் பணத்தை வரியாக செலுத்த தயாராகிக் கொள்ளுங்கள். ரூ.10,000-க்கும் மேலாக பரிசு விழுந்திருந்தால் நீங்கள் 30 சதவீத தொகையை உடனடியாக வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இது மட்டுமல்லாமல் கல்விக்கான வரியாக 3 சதவீதமும் இதில் அடங்கும்.
உதாரணம்
ரூ.1 இலட்சத்திற்கான லாட்டரி பரிசு விழுந்துள்ளது என்று எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் நேரடி வரி பிடித்தம் மற்றும் கல்விக்கான வரி போக ரூ.70,000 கிடைக்கும். எனவே, 1 இலட்சம் ரூபாயை லாட்டரியில் பரிசாகப் பெற்றவர், ரூ.70,000-க்கும் சற்றே குறைவான பணத்தையே கையில் வாங்குவார்.
வரித் தாக்கல்
லாட்டரியில் பரிசாக கிடைத்த பணத்தை 'வேறு ஆதாரங்களிலிருந்து கிடைத்த வருமானம்' என்ற தலைப்பில் காட்ட வேண்டும். ஆதன் பின்னர் தான் நேரடி வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகையை குறிப்பிட வேண்டும். இவ்வாறு தான் உங்களுடைய மொத்த வருமானம் கணக்கிடப்பட்டு, உங்களுக்கு வரி செலுத்தும் பிரிவின் கீழ் வருமான வரி கணக்கிடப்படும்.
குதிரைப் பந்தயமும் வரியும்
லாட்டரியில் பரிசாக பெற்ற தொகைக்கு விதிதத்து போலவே, குதிரை பந்தய பரிசுக்கும் 30 சதவீதம் வரியை செலுத்த வேண்டும். அதாவது, நீங்கள் ரூ.10,000-ஐ பரிசாக பெற்றிருந்தால், ரூ.3,000 வரியாக பிடிக்கப்பட்டு, மீதமுள்ள 70 சதவீதம் தொகையை பெறுவீர்கள். இந்த தொகையிலும் கல்விக்கான வரி இருக்கும். இதற்கான கணக்கீடும் ஏறக்குறைய லாட்டரி பரிசுக்கு செய்ததைப் போலவே இருக்கும்.
இறுதியாக...
நேரடி வரி பிடித்தம் என்பதைப் பொறுத்த வரையில் நாம் செய்யக் கூடியது மிகவும் குறைவான பணி தான் - அது லாட்டரி அல்லது குதிரை பந்தயம் என எதுவாக இருந்தாலும். வங்கிகளில் 15G அல்லது 15H படிவங்களைக் கொடுத்து நேரடி வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு பெறுவதைப் போன்ற எந்தவித வழிமுறையும் இந்த விஷயங்களில் உங்களுக்கு கிடைக்காது.
மறந்துவிடாதே.. மறந்து இருந்து விடாதே...
பரிசு பெற்றவர் தன்னுடைய பரிசுத் தொகையில் செலுத்த வேண்டிய வரியை பிடித்தம் செய்து கொண்டால் தான், மீதப்பணத்தை கையில் பெறுவார். நீங்கள் வருமான வரியை செலுத்தும் போது இந்த தொகையைக் குறிப்பிட மறந்து விட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும், எந்த வித வருமானத்தையும் வரி செலுத்துவதிலிருந்து மறைக்கக் கூடாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications