சென்னை: சில சமயங்களில் நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது பரஸ்பர நிதிகள் நிறுவனத்தின் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் உண்டு. உங்களுக்கு அந்த குறிப்பிட்ட திட்டத்தின் செயல்திறன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலோ, சந்தை அபாயத்தை எதிர்கொள்ளும் விருப்பம் மாறி பங்கு முதலீட்டிலிருந்து, கடன் முதலீட்டுத் திட்டத்திற்கு மாற விருப்பம் இருக்கும், இப்படியான பல காரணங்கள் உண்டு.
நீங்கள் திட்டத்தை மாற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அபாயங்களையும் லாபத்தையும் சம நிலையில் வைத்திருப்பது தான்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது எப்படி?
நீங்கள் எத்தகைய வகையான முதலீடுகள் மற்றும் திட்டங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றாலும் இதற்கென உள்ள செயல்முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் முதலில் ஒரு பரிவர்த்தனைப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது நீங்கள் சேர்ந்துள்ள நிதி நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கும்.
பொதுவாக, இந்த படிவம் உங்கள் கணக்கு அறிக்கை அல்லது ஸ்டேட்மென்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். இதனை பூர்த்தி செய்து அந்த நிதி நிறுவன அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். உங்களிடம் பின் நம்பர் இருந்தால், அந்த நிதி நிறுவன இணைய தளத்திற்குச் சென்று நீங்களாகவே அதை மாற்றிக் கொள்ளலாம்.
இதில் எதாவது செலுத்துகை (லோட்) உள்ளதா?
நீங்கள் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்ற விரும்பினால் அது திரும்பப்பெற்றதாகக் (ரிடெம்ஷன்) கருதப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும். அதே நேரம் வேறொரு திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கையில் அதற்கான துவக்கக் கட்டணம் (லோட்) செலுத்த வேண்டும். எனவே ஒரே நேரத்தில் கணக்கை முடிக்கவும் துவங்கவுமாக இரு கட்டணங்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.


Click it and Unblock the Notifications