டீமேட் கணக்கிற்கு வாரிசு கோருவது எப்படி??

சென்னை: பங்கு சந்தையில் வரத்தகம் செய்திட நமக்கு மின் ஆவணக் கணக்கு எனப்படும் டீமேட் கணக்கு (Demat Account) அவசியம். நாம் வர்த்தகம் செய்திடும் அனைத்து விதமான பதிவுகளும் இக்கணக்கில் பதிவாகி இருக்கும்.

இந்நிலையில் இக்கணக்கு வைத்திருப்பவர்கள் நோயின் காரணமாகவோ, உடல்நலக்குறைவின் காரணமாகவோ அல்லது வயோதிகம் காரணமாகவோ திடிரென்று இக்கணக்கிற்கு நாமினி அதாவாது கணக்கிற்கு வாரிசார யாரையும் நியமிக்காமல் மரணமடைந்தால், இக்கணக்கில் இருக்கும் பங்குகளின் நிலை என்ன??

இக்கட்டாண நிலை

மின் ஆவணக்கணக்கிற்கு வாரிசாக இன்னொருவரை நியமனம் செய்யாமலோ, அல்லது உயில் எழுதி வைக்காமலோ இறந்து விடும் பட்சத்தில், அவருடைய மின் ஆவணக்கணக்கில் அதிக மதிப்புடைய பங்குகள் இருக்குமாயின், இறந்தவரின் மரபுவழி வழித்தோன்றல் (சட்டரீதியான வாரிசு) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

டீமேட் கணக்கிற்கு வாரிசு கோருவது எப்படி??

1) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழின் நகல்.

2) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட வழிமுறையுரிமை (மரபுவழி வாரிசுரிமை) சான்றிதழ் நகல் அல்லது உயில் இல்லாமல் இறந்திருந்தால், தகுதிவாய்ந்த நீதிமன்றம் வழங்கும் ஆணை

3) விருப்புறுதிச் சான்றிதழ் நகல் (Probate) அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட நிருவாக உத்தரவு (Letter of Administration).

டீமேட் கணக்கிற்கு வாரிசு கோருவது எப்படி??

மேற்கூறிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், என்ன செய்ய?

இறந்தவரின் சட்டரீதியான வாரிசு கீழ்க்காணும் ஆவணங்களை சமர்ப்பித்து பங்குகளை கையகப்படுத்தும் உரிமையை பெறலாம்.

1)பங்கு மாற்று பத்திரத்தை பூர்த்தி செய்வதின் மூலம் பங்கு மாற்று உரிமை கோரலாம்.

2) அரசால் அங்கிகரிக்கப்பட்ட நோட்டரி ( Public Notary) கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழ் நகல் கொண்டு உரிமை கோரலாம்.

3) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட காப்புறுதிக் கடிதம் (Letter of Indemnity)

4) நீதித்துறை சாரா முத்திரத்தாளில் பெறப்பட்ட பிரமாணப் பத்திரம் (Affidavit)

5) பங்கு மாற்று உரிமைக்கு ஒப்புதல் அளிக்கும், இறந்தவரின் சட்டரீதி வாரிசுகளின் ஒப்புதல் பெற்ற தடையில்லா சான்றிதழ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+