சென்னை: இன்றளவில் இண்டர்நெட் கிராமத்து பெட்டிகடை வரை சென்றிருக்கும் நிலையில், இன்னமும் பழைய முறைப்படியே நேரில் சென்று எல்.ஐ.சி. பிரீமியத்தை செலுத்திக் கொண்டிருக்கிறீர்களா?
இனி அதனை எல்.ஐ.சி.-யின் பேமென்ட் கேட்வே மூலமாக பாதுகாப்பாக ஆன்லைனில் கட்டி விடலாம். நொடிப்பொழுதில் வீட்டில் இருந்த படியே பிரீமியத்தை கட்டி விட வசதி அளிப்பதற்காகவே இந்த முயற்சி.
இந்த சலுகையின் முக்கிய பகுதியே பேமென்ட் கேட்வே (PG) முயற்சி தான். இதன் மூலம் ப்ரீமியம் புதுப்பித்தலுக்கான தொகை செலுத்துதலை எல்.ஐ.சி. போர்டல் மூலமாக செலுத்தும் வசதியை அளிக்கிறது. தங்கள் பாலிசிகளை பந்திதுள்ள, பதியப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.
இந்த வசதியை பயன்படுத்துவதற்கான எளிய, படிப்படியான வழிகாட்டல் கீழேவருமாறு:
1. பாலிசியை பதிந்த பிறகு, http://www.licindia.in/online_payment.html என்ற வலைத்தளத்தில் உள்ள "Pay Premium Online" என்ற இணைப்பை நீங்கள் சொடுக்கலாம்.
2. ப்ரீமியம் கட்ட வேண்டிய பாலிசிகளை தேர்ந்தெடுக்கவும்.

3. பணம் கட்டுவதற்கு பல்வேறு வங்கிகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான பக்கத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். பின் நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கியின் புகுபதிகை பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
குறிப்பு: பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் இணைய வங்கியியல் (நெட் பேங்கிங்) வசதி வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
4. வங்கியின் வலைத்தளத்தில் உங்களின் இணைய வங்கியியல் புகுபதிகை/கடவுச்சொல் மூலமாக புகுபதிகை செய்ய வேண்டும். நீங்கள் எல்.ஐ.சி.-க்கு கட்ட வேண்டிய மொத்த தொகை அங்கே காண்பிக்கப்படும்.
5. உங்களின் வங்கி இருப்பை சரிப்பார்த்த பின்பு, இந்த பரிவர்த்தனையை வங்கியிடம் உறுதி செய்யுங்கள். அதே நேரத்தில், வெற்றி / தோல்வி பரிவர்த்தனை செய்தி உங்களுக்கு காண்பிக்கப்படும்.

6. வெற்றிகரமான பரிவர்த்தனைக்கு பின்பு மின்னணு வடிவில் கையெழுத்திடப்பட்ட மின்னணு ரசீது உருவாகி உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
7. உங்கள் வங்கி கணக்கில் இருந்து பற்று வைக்கப்பட்டு, இன்னும் ரசீது வரவில்லை என்றால், அது மின்வலையமைப்பு திறனிழப்பு அல்லது செஷன் டைம் அவுட் ஆகியவற்றால் நடந்திருக்கும். அவ்வாறான சூழலில் ரசீதுகள் தனியாக தயாரிக்கப்பட்டு, உங்கள் சுயவிவரத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 2-3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
8. அதே நிலுவைக்கு செய்யப்படும் இரண்டாம் செலுத்துதலுக்கு முயற்சிக்கும் முன் தயவு செய்து வங்கி கணக்கை சரிப்பார்க்கவும். உங்கள் வங்கி கணக்கில் இருந்து பற்று வைக்கப்பட்டிருந்தால், இரண்டாம் தடவை பணத்தை கட்ட முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ப்ரீமியம் புதுபித்தல் உடனே நடந்து விடும். இந்த வசதியை பயன்படுத்த எந்த ஒரு கட்டணமும் கிடையாது. இதற்காக ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது. மீண்டும் மீண்டும் பதிய வேண்டும் என்ற அவசியமில்லை. பணம் கட்டுவதற்கும் ரசீதை பெறுவதற்கும் இடையே எந்த ஒரு கால பின்னடைவும் இருக்காது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications