வருமான வரி ரீஃபண்ட்: வங்கி கணக்கை புதுப்பிப்பது எப்படி??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நீங்கள் வருமான வரி செலுத்தியதற்கான ரீஃபண்ட் காசோலை குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களுக்கு கிடைக்கைவில்லையா? அப்படியானால் வருமானவரி துறையிடம் நீங்கள் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கி எண் மூடப்பட்டிருக்கும் அல்லது தவறான வங்கி கணக்கு எண்ணை அளித்திருப்பீர்கள்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நீங்கள் பயப்பட தேவையில்லை. ரீஃபண்ட் தொகை வரவாக வேண்டிய உங்கள் வங்கி கணக்கை அதன் MICR குறியீட்டுடன் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வருமான வரி ரீஃபண்ட்: வங்கி கணக்கை புதுப்பிப்பது எப்படி??

ரீஃபண்டை மீண்டும் வழங்குவதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை:

1. வருமானவரி வலைத்தளத்திற்குள் உங்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை கொண்டு லாக்-இன் செய்திடவும்.

2. மை அக்கவுண்ட் ரீஃபண்ட் ரீ-இஷ்யூ ரெக்வஸ்ட் பக்கத்திற்கு செல்லவும்.

3. CPC குறிப்பு எண், ரீஃபண்ட் வரிசை எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

கீழ்கூறியவைகளை உள்ளீடு செய்யவும்:

CPC தொடர்பு குறிப்பு எண்: ரீஃபண்ட் பரிவர்த்தனை தோல்வி அடையும் போது, வருமான வரி. துறையிடம் இருந்து "Intimation u/s 143(1)" அல்லது "Rectification Order u/s 154"-ஐ நீங்கள் பெற்றிருப்பீர்கள். CPC தொடர்பு குறிப்பு எண் என்பது இந்த கடிதத்தின் முதல் பக்கம் உள்ள எண்ணாகும். CPC/1011/P2/xxxxxxxxxx என்ற வடிவத்தில் இருக்கும் இந்த எண். இதில் "xxxxxxxxxx" என்பது 10 இலக்கு எண்ணாகும்.

4. தகவல்களை நிரப்பிய பிறகு வேலிடெட் (validate) பட்டனை அழுத்தவும்.

5. மீண்டும் ரீஃபண்ட்டை வழங்க கோரி, வரி விதிப்புக்குரியவருக்கு 2 தேர்வுகள் உள்ளது - ECS அல்லது பேப்பர் என்ற இரு முறைகள்.

வருமான வரி ரீஃபண்ட்: வங்கி கணக்கை புதுப்பிப்பது எப்படி??

6. ஈசிஎஸ் (ECS) முறை: ரீஃபண்ட் ரீ-இஷ்யூ முறையை தேர்வு செய்யவும்.

7. வங்கி கணக்கு விவரங்கள் மற்ற தேர்வு - நீங்கள் ஆம் என்பதன் மீது அழுத்தினால், அங்கே உங்களது வங்கி கணக்கு விவரங்களை புதுப்பித்து, சப்மிட் பட்டன் மீது அழுத்தவும். 10 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்தது.

 

முன்னதாக, வருமானவரி வலைத்தளத்தில் உள்ள "Response Sheet"-ஐ வரி கட்டுபவர்கள் தரவிறக்கம் செய்து அதனை பிரிண்ட்-அவுட் எடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் இதோ!

1. முதலில் வருவமான வரித்துறை வலைத்தளத்திற்கு செல்லுங்கள். செல்ல இதை கிளிக் செய்யவும்

2. லாக்-இன் விவரங்களை உள்ளீடு செய்யவும்.

3. ‘ரெஸ்பான்ஸ் ஷீட் ஃபார் ரீஃபண்ட் ஃபெய்லியர் ஸ்டேடஸ்' என்ற சப் மெனுவை அழுத்தவும்.

4. ரெஸ்பான்ஸ் ஷீட்டில் உள்ள தேவையான பத்திகளை நிரப்பவும்.

வருமான வரி ரீஃபண்ட்: வங்கி கணக்கை புதுப்பிப்பது எப்படி??

தகவல் கிடைத்து விட்டால், அதனுடன் சேர்த்து ரெஸ்பான்ஸ் ஷீட்டும் அனுப்பி வைக்கப்படும். அதனுடன் நீக்கப்பட்ட அசல் காசோலையை சான்றாக இணைக்க வேண்டும்.

ஒரு வேளை, காசோலை இல்லை என்றால், முத்திரை மற்றும் கையொப்பமுடனான பாஸ்புக்கின் முன் பக்கம் / வங்கி அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Refund: How to Update Your Bank Account Number If You have Closed An Account?

When you don't receive your refund cheque on time, that is the time when you realise that account number mentioned in the income tax department is closed or may be you have mentioned wrong account number.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X