வருமான வரி விலக்கு பெற 80சி பிரிவு தவிர 7 வழிகள் உண்டு!!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமானம் என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு ரூபாயிலிருந்து கோடி வரை சம்பாதிக்கும் அனைவருமே கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கின்றனர்.

என்னதான் சேமித்தாலும் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டாலும் ஆண்டு இறுதியில் நம்மை மிரட்டுவது வருமான வரிதான். வருமான வரி என்றாலே அனைவரும் அலறி ஒடுகின்றனர். அரசிற்கு நாம் செலுத்த வேண்டிய வரி பணத்தை சேமிக்க பல வழிகள் உண்டு. இதில் பிரபலமானவை 80சி வகை, ஆனால் இது தவிற பல வழிகள் உண்டு.

வருமான வரி

வருமான வரி

வருமான வரியை கண்டு நீங்கள் அஞ்ச தேவையில்லை. நீங்கள் சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் பணத்திற்கான ரசிதை முறையாக எடுத்து வைத்திருந்தாலே போதும் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியும்.

சலுகை

சலுகை

வருமான வரி வழங்கியுள்ள சலுகைகளை நன்கு அறிந்திருந்தால் மேலும் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியும். அந்த சலுகைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

ஹெல்த் இன்சுரன்ஸ்

ஹெல்த் இன்சுரன்ஸ்

உங்கள் குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ உங்களுக்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் 80 டி பிரிவின் கீழ் உங்கள் டாக்ஸ்கான பலனை நீங்கள் பெற முடியும். அதாவது உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள் 15,000 வரை வரி விலக்கு பெற முடியும். சீனியர் சிட்டிசன் என்றால் ரூபாய் 20,000 வரை பெற முடியும்.

கல்வி லோனிற்கான டாக்ஸ் பலன்

கல்வி லோனிற்கான டாக்ஸ் பலன்

நீங்கள் உங்கள் கல்விக்காக லோன் எடுத்திருந்தால் நீங்கள் செலுத்தும் முழு வட்டிக்கான டாக்ஸ்க்கை விலக்கை பெற முடியும். உங்களுடை முழு வட்டி தொகையையும் பிரிவு 80சி-க்கு கீழ் பெற முடியும். தனிப்பட்ட நபர் மட்டும் இதை பெற முடியும்.

நன்கொடைக்கான டாக்ஸ் பலன்

நன்கொடைக்கான டாக்ஸ் பலன்

நீங்கள் செலுத்திய நன்கொடைக்ககான பணத்தை வரி சலுகை பெற பிரிவு 80Gக்கு கீழ் அனுமதிக்க படுகின்றீர்கள். ஆனால் நீங்கள் எந்த நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தீர்களோ அதற்கான ரசீதை முறையாக பெற்றிருக்க வேண்டும். அதனுடன் அந்த நிறுவனத்தின் pan எண் அதில் குறிப்பிட்டிருக்க அதற்கான டாக்ஸ் தள்ளூபடியை நீங்கள் பெற முடியும்.

HRA பெறாவிட்டாலும் டாக்ஸ் பலன் உண்டு

HRA பெறாவிட்டாலும் டாக்ஸ் பலன் உண்டு

நீங்கள் HRA பெறா விட்டாலும் டாக்ஸ் தள்ளுப்படியை பெற முடியும். இதற்கான சட்டம் பிரிவு 80 GG யில் உள்ளது. மிக சிலரே இந்த பலனை பற்றி அறிவார்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் டாக்ஸிர்கான தள்ளுபடியை கோரும் நபருக்கு என சொந்தமாக வீடு இருத்தல் அவசியம்.

அரசியல்கட்சிக்கு கொடுத்த நிதிக்கான டாக்ஸ் பலன்

அரசியல்கட்சிக்கு கொடுத்த நிதிக்கான டாக்ஸ் பலன்

நீங்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கொ நன்கொடை அளித்திருந்தால் sec 80GGCக்கு கீழ் டாக்ஸ் தள்ளுபடி அடைய முடியும். ஆகையால் அடுத்த முறை கவனமாக இருந்து பலன் பேற்று கொள்ளுங்கள்.

80U பிரிவின் கீழ் வரும் டாக்ஸ் பலன்

80U பிரிவின் கீழ் வரும் டாக்ஸ் பலன்

ஒரு இந்திய வாசி பார்வையின்மை, குறைந்த பார்வை, மூளைக் கோளாறு, காது கேளாமை போன்ற பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால் டாக்ஸ் குறைப்பை பெற முடியும். இந்த பலனை பெறும் நபர் மேலே குறிப்பிட்டுள்ள குறைப்பாடுகளில் 40 சதவிகிதமாவது பெற்றிருக்க வேண்டும்.

80CCG கீழ் அடங்கும் டாக்ஸ் தள்ளுபடி

80CCG கீழ் அடங்கும் டாக்ஸ் தள்ளுபடி

இந்த பிரிவு சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீங்கள் முதல் முறை இதை அனுபவிக்கின்றீர்கள் என்றால் 50,000 ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். அதுவும் உங்கள் வருமானம் ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டதின் படி பத்து லட்சமாக இருத்தல் அவசியம்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Tax Benefits That You Get In India Apart From Sec 80C

If you thought that the usual life insurance premium, PPF and other instruments under Sec 80C were the only tax benefits that you received in India think again. There are several tax benefits that you receive apart from the usual Sec 80C Benefits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X