சென்னை: மாத சம்பளம் வாங்கும் பலருக்கும் கடினமானது நிதித்திட்டமிடல் (financial planning), வாங்கும் சம்பளத்தில் வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், என பல செலவுகளை சமாளித்து வரும் சாமாணியர்களுக்கு எதிர்காலத்திற்கான "சேமிப்பு மற்றும் முதலீடு" அவசியமாகிறது. மேலும் நிதித்திட்டமிடலுக்கு முதல் முதல் படி சேமிப்பு தான். நாம் பெறும் வருமானத்தை கொண்டு சிறப்பான முறையில் நிதி செவுகளை திட்டமிட்டல் மட்டும் போதாது. நம்முடைய செலவழிக்கும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
திட்டமிடாமல் பணம் சேமிப்பது இன்றைய விலைவாசியிலும், வாழ்க்கை முறையிலும் சற்று கடினமே. ஆனால் இதற்கு ஒரு வழி உண்டு. இதற்காக நீங்கள் நிதி ஆலோசகரை அணுகுவதோ அல்லது காப்பரேட் நிறுவனத்தை போல் பெரிய பிளானிங் எல்லாம் தேவை இல்லை.
தினந்தோரும் உங்கள் செலவழிக்கும் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்தாலே போதும். பணத்தையும் சேமிக்கலாம், மாத கடைசியில் பணத்திற்காக பிறரிடம் கடன் (கையெந்தும்) வாங்கும் நிலையும் இருக்காது.
சேமிப்பு
நம்முடைய சேமிப்பை அதிகரிக்க முதலில் நம்முடைய செலவழிக்கும் பழக்கத்தில் சிறு மாற்றங்களை செய்ய வேண்டும், இதன் மூலம் பெரிய வித்தியாசங்களை காணலாம். நல்ல எதிர்காலத்திற்காக உழைக்கின்றோம், ஆனால் நம்மில் பலர் நிறைய செலவழித்து எதிர்காலத்திற்கு சிறிதளவே சேமிக்கின்றனர்.
பட்ஜெட்
வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வரவ செலவு திட்டத்துடன் சேமிக்கும் பழக்கத்தை துவங்க வேண்டும். அந்த நேரத்தில் தேவை இல்லாத பொருட்களில் பணத்தை வீணாக்கலாகாது.
ஆட்டோ ஸ்வீப்
செலவிடும் முன் தேவையான பணத்தை எடுத்து வைக்கவும். பெரும்பாலான வங்கிகள் ஆட்டோ ஸ்வீப் (auto sweep) வசதியை கொடுக்கின்றனர், அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வசதி தானாக நம் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நிரந்தர வைப்புத் திட்டத்தை பதிவு செய்யும்.
திட்டமிட்ட சேமிப்பு
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர் வைப்பாக செலுத்தலாம்.
இருமுறை சந்தித்து செயல்படவும்
எவற்றில் செலவு செய்கிறோம் என்பதை உணர்ந்தால் அதை குறைத்துக் கொள்ள இயலும். ஒரு பொருள் வாங்கும் முன் இருமுறை சிந்திக்கவும்.
கடன்
புதிதாக எந்த கடனும் வாங்க வேண்டாம். இது கடன் மதிப்பெண் (credit score) புள்ளியை குறைக்கும். கடன் மதிப்பெண் குறைவாக இருப்பின், அது வீட்டு கடன் போன்ற பெரிய திட்டங்களில் கைக் கொடுக்காது.
கிரேடிட் கார்டு
செலவுகளை குறைக்க சிறந்த வழி கடன் அட்டை (credit card) உபயோகிப்பதை தவிர்ப்பதாகும். பல நேரங்களில் அது சேமிப்பை கெடுக்கும் விடயமாய் தான் இருக்கிறது. ரொக்கப் பணமாக உபயோகிப்பதன் மூலம் செலவு குறையும் மற்றும் நமது செலவீனங்களை கண்காணிக்க இயலும்.
தேவையற்ற பொருட்கள்
எந்த பொருளையாவது வாங்க விளையும் பொழுது உங்கள் மனதை வேறு பக்கம் கவனம் செலுத்த வையுங்கள்.
தினசரி செலவுகள்
எளிமையான பட்ஜெட் திட்டத்தை உருவாக்குங்கள், அதை தினமும் மேம்படுத்துங்கள் , அது தினசரி செலவுகளை கணக்கிட உதவும். சேமிப்பு மற்றும் செலவுகளை கணிக்க உதவும் பயன்பாடுகளை பயன்படுத்துங்கள்.
புத்திசாலித்தனம் சேவை
செலவிடாமல் இருப்பது சேமிப்பு கிடையாது. புத்திசாலித்தனமாக செலவழியுங்கள், தள்ளுபடி மற்றும் பிற சலுகைகளை உபயோகித்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை மட்டுமே நம்பி இருக்காதீர்கள். தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வாங்குங்கள் , சலுகைக்கு ஏற்ற வாறு வாங்காதீர்கள்.
ஆடம்பர செலவுகள்
ஆடம்பர செலவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள், அது தற்காலிக ஆறுதலை மட்டுமே தரும். அருகில் உள்ள இடங்களுக்கு வகனங்களை தவிரத்து நடந்து செல்லலாம், அது உடல் நலத்திற்கும் ஏற்றதும் கூட. ஏசி பஸ்ஸில் செல்வதை தவிர்த்து சாதாரண பஸ்ஸில் பயணிக்கலாம். இது போன்று பல வழிகள் உள்ளது.
பட்டியல்
கடைக்கு செல்லும்முன் தேவையான பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். பட்டியளின்றி சென்றால் தேவையில்லாத பொருட்களை வாங்க நேரிடும், தேவையான பொருட்களை வாங்குவதற்கு மறக்க நேரிடும்.
சேமிப்பு மிகவும் அவசியம்
ஆடம்பர செலவுகளும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது தவறில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் அது நிலைப்பதற்கு சேமிப்பை ஏற்படுத்துங்கள்.
நிதி நெருக்கடி
நிதி நெருக்கடிக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவும். வழக்கமான அடிப்படையில் சிறு தொகையை சேமியுங்கள், அது நிதி ரீதியாக ஆறுதலடையச் செய்யும். சேமிப்பின் முக்கியத்துவத்தையும், பொருட்கள் வாங்கும் மோகத்தின் தீமைகளைப் பற்றியும் உணர்த்தும்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications