சென்னை: இப்பல்லாம் ஒருத்தருக்கு ஆயுள் அதிகம் இருக்கோ இல்லையோ, ஆனா கண்டிப்பா ஒரு பாலிசி இருக்கும். இன்சூரன்ஸ் பாலிசி குறித்துத் தற்போது பெருகியுள்ள விழிப்புணர்வின் மூலம் நாம் அனைவரும் குறைந்த பட்சம் ஒரு பாலிசியோ அல்லது குடும்பத்தை நமக்குப் பிறகு பாதுகாக்க ஒரு திட்டத்தையோ வைத்திருப்போம்.
மேலும் இது வருமான வரியைச் சேமிக்கும் ஒரு வழியாகவும் இருப்பதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
ஆயுள் காப்பீட்டுக்காகச் செலுத்தப்படும் அனைத்து பிரிமியத் தொகைகளுக்கும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு ருபாய் ஒன்றரை லட்சம் வரை உண்டு என்கிற பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் பாலிசி முதிர்வுத் தொகையும் பிரிவு10(10d)-ன் கீழ் வரி விலக்கிற்கு உரியது என அனைவரும் நினைத்துக் கொள்கின்றனர்.

அண்மையில் 2014 ஆம் ஆண்டின் நிதி மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இன்சூரன்ஸ் துறையில் இந்திய நிறுவனங்களின் கையை ஓங்கச் செய்துள்ளது. இதன் சாராம்சம் இதோ பின்வருமாறு:
1) இந்தப் புதிய நிதி மசோதா மூலம் பாலிசி முதிர்வுத் தொகைகளின் மேல் டிடிஎஸ் (TDS) எனப்படும் நிதி மூல வரியை கழித்துக் கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2) பாலிசி மீதான பிரிமியத் தொகை பிரிவு 80c இன் கீழ் ரூபாய் ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கிற்கு உரியது.
3) பாலிசி முதிர்வுத் தொகையில் செலுத்துகின்ற பிரிமியத் தொகை 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் முதிர்வுத்தொகையில் 10 சதவிகித அளவிற்குப் பிரிமியத் தொகையில் வரிப் பிடித்தம் செய்யப்படும்.

4) பிரிவு 10(10d)-இன் படி இறப்பின் பொது வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
5) பிரிமியத் தொகை முதிர்வுத் தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு.
6) இதற்கு முன்னர் வரி விலக்கிற்குரிய பாலிசி பிரிமியத் தொகை வரம்பு முதிர்வுத் தொகையில் 20 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காப்பீட்டின் பங்களிப்பை அதிகரிக்க, நிதி அமைச்சர் இந்த வரம்பை 10 சதவிகிதமாக மாற்றியுள்ளார்.

7) உங்கள் பெற்றோர், உடன் பிறப்புகள் அல்லது பிற சொந்தங்களின் பாலிசிகள் மீது நீங்கள் செலுத்தும் பிரிமியத் தொகைக்கு வரிவிலக்கு ஏதும் இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.
8) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிசிகள் மீது நீங்கள் செலுத்தும் அத்தனை பிரிமியத் தொகையும் வரி விலக்கிற்கு உட்பட்டது.
9) ஐஆர்டிஏ வினால் (காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்) அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் முன்கூட்டியே மொத்தமாகப் பெறப்படும் பென்ஷன் தொகைக்கு (commuted pension) வரி இல்லை.
10) செலுத்தப்படும் எல்லா விதமான பிரிமியத் தொகைகளும் சேவைவரி, கல்வி கூட்டு வரி உள்ளிட்ட அந்த அந்த ஆண்டிற்குப் பொருந்தக்கூடிய வரிகளுக்குட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்ன? இப்ப எல்லாம் தெளிவாச்சா?
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications