சென்னை: உலகிலேயே வங்கிக் கணக்கு வழக்குகளை ரகசியமாக வைத்துக்கொள்ள மிகவும் உகந்த மற்றும் பாதுகாப்பான வங்கிகள் என்றால் அது சுவிஸ் நாட்டு வங்கிகள் தான்.
நாம் அடிக்கடி அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள், சமூக விரோதிகள் மற்றும் சில அரசு அதிகாரிகள் சுவிஸ் வங்கியில் கணக்குகள் வைத்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.
இதற்கு முக்கியக் காரணம் இவ்வங்கிகளில் இருக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள். அவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் குறித்த எந்த ஒரு விபரத்தையும் அளிக்கமாட்டார்கள்.
இது போன்ற சுவிஸ் வங்கிகளைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கவேண்டிய 6 முக்கிய விஷயங்கள் உங்களுக்காக இதோ.
யார் யார் இதில் கணக்குத் துவங்கலாம்?
18 வயதை அடைந்த யார் வேண்டுமானாலும் சுவிஸ் வங்கியில் கணக்கைத் துவக்கலாம். எனினும் ஒருவர் கொண்டு வரும் பணத்தின் வருவாய் மூலத்தின் மீதுள்ள ஐயத்தினாலோ அல்லது அரசியல் பிரமுகராக இருந்தாலோ அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை இவ்வங்கிகளுக்கு உண்டு.
வங்கி இந்த விஷயத்தில் மிக அதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.
அவப்பெயர்
வங்கியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயமான செயல்களைச் சுவிஸ் வங்கிகள் கடுமையாகத் தவிர்க்கிறது. பொதுவாக அனைவரும் தங்களுடைய வருவாய் மூலத்தைத் தெரிவிக்க விரும்புவதில்லை என்பதால் வங்கிப்பெயரும் செயல்படும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட உள்ளது.
தேவையான ஆவணங்கள்
ஆவணங்களைப் பொறுத்தவரை மற்ற வங்கிகளில் கணக்குத் துவங்குவதற்கும் சுவிஸ் வங்கிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. மற்ற வங்கிகளைப் போலவே ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவேண்டும்.
எனினும், இது தொடர்பான ஆவணங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கடுமையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அசல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். மேலும் உங்கள் பாஸ்போர்டையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
ஆன்லைனில் கணக்குகளைத் துவக்க முடியாது
சுவிஸ் வங்கிகள் மிகுந்த கெடுபிடிகளைக் கொண்டுள்ளதால், நீங்கள் வங்கியை நேரில் அணுகாமல் கணக்கைத் துவக்க இயலாது.
பாதுகாப்பு மற்றும் தனிநபர் உரிமைகள்
பாதுகாப்பு மற்றும் தனிநபர் உரிமைகள் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் சுவிஸ் வங்கிகள் பெயர் போனவை. வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் அவற்றுக்கு மிகப்பெரிய வரலாறே உண்டு.
எனினும் இதனால் அந்த வங்கிகள் சமூக விரோதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று கூற முடியாது. சமூக விரோத செயல்கள் மற்றும் வரி ஏய்ப்பு விவகாரங்களில் இந்த விதிகள் விலக்கப்படும்.
அநாமதேய கணக்கு
கேட்பார் இல்லாத கணக்குகள் என்பது போன்ற எதுவும் சுவிஸ் வங்கிகளில் இல்லை. சுவிஸ் பேங்க் வாடிக்கையாளர் விவரங்களில் தெளிவான நடைமுறைகளை மிகவும் கடுமையாகப் பின்பற்றுகின்றன.
எண்ணிடப்பட்ட கணக்குகள்
ஒருவர் எண்ணை அடிப்படையாகக் கொண்ட கணக்கைத் துவக்க முடியும். இது பெயரின் அடிப்படையில் இயங்கும் கணக்கிலிருந்து வேறுபட்டதல்ல. இதன் கீழ் நடக்கும் பரிவர்த்தனைகள் பெயரின் அடிப்படையில் அல்லாமல் எண்ணின் அடிப்படையில் இருக்கும். இதனால் உங்களின் பரிவர்த்தனைகளைப் பற்றி வங்கி அறிந்திருக்காது என்று பொருளல்ல.
கணக்கை முடித்தல்
ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கை எந்தக் கட்டுப்பாடும் கட்டணமும் இன்றி எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications