சென்னை: இந்தியாவில், ஒரு முதலீட்டுச் சொத்து அல்லது வருவாய் தரக்கூடிய எந்த ஒரு சொத்தும் முதலீட்டு ஆதாயம் தரும் சொத்தாகக் கருதப்படும். எனவே நீங்கள் அதன் மீது ஒரு வரியைச் செலுத்த வேண்டும்.
உதாரணமாக நீங்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை 2008 ஆம் ஆண்டில் வாங்கி அதனை 2014-ல் 30 லட்சம் ரூபாய்க்கு விற்றால், நீங்கள் பெற்ற 20 லட்சம் ரூபாய் லாபத்தின் மீது முதலீட்டு ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும்.
முதலீட்டு ஆதாயம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதையும் அதன் மீதான வரி விகிதம் எவ்வளவு என்பதையும் நாம் பின்னர்ப் பார்ப்போம்.

சொத்து மீதான முதலீட்டு ஆதாய வரி என்றால் என்ன, அந்த ஆதாயத்தின் வகைகள் என்னென்ன?
நீங்கள் ஒரு சொத்தை வாங்கிய மூன்று வருடங்களுக்குள் லாபத்திற்கு விற்றால், அதற்குக் குறைந்த கால முதலீட்டு ஆதாய வரிக்கு உட்பட்டது. அதே சமயம், மூன்று வருடங்கள் கழித்து அதை விற்றால், முறையாகப் பட்டியலிடப்பட்ட பிறகு அதன் மீது முதலீட்டு ஆதாய வரியாக 20 சதவிகிதத்தைச் செலுத்த வேண்டும்.
இந்த வரியை தவிர்ப்பது எப்படி?
முன்பே கூறியது போல் நீங்கள் நீண்ட அல்லது குறுகிய கால முதலீட்டு ஆதாய வரியைச் செலுத்த வேண்டும். எனினும், இதனைத் தவிர்க்க பின் வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
a) சொத்தை விற்றதன் மூலம் கிடைத்த தொகையை மற்றுமொரு சொத்தில் முதலீடு செய்யலாம். அதில் கிடைத்த மொத்த பணத்தையும் ஒரு வீட்டை வாங்குவதில் முதலீடு செய்யலாம். அது குடியிருப்பாக இருக்கவேண்டும் வணிக வளாகமாக இருக்கக் கூடாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அதையும் நீங்கள் இரண்டு வருடகாலத்திற்குள் செய்யவேண்டும்.

b) புதிய கட்டுமானம்: விற்பனையின் மூலம் கிடைத்த தொகையை மற்றுமொரு புதிய குடியிருப்பைக் கட்ட பயன்படுத்தினால் இதற்கு மூன்று வருடம் வரை கால அவகாசம் கிடைக்கும்.
c) விற்பனை வருவாயை மூலதனப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த மூலதனப் பத்திரங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஊரக மின்சார நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்படுகின்றது. இதற்கு உச்ச வரம்பாக ஐம்பது லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் இதற்கு மேலான தொகையை இதில் முதலீடு செய்யவும் கட்டுப்பாடு உள்ளது. இதன் மீதான வட்டி அதிகம் இல்லை என்பதுடன் 6 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.
இவை மதிப்பீட்டில் நல்ல நிலையில் இருப்பதுடன் என்ற மதிப்பீட்டை க்ரிசில் மற்றும் இந்தியா ரேடிங்க்ஸ் அண்ட் ரிசர்ச் அமைப்பிடமிருந்து என்ற மதிப்பீட்டையும் பெற்றுள்ளன. இவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவை அரசுப் பத்திரங்கள் என்பதால் குறைந்த அளவிலேயே பாதிப்பு இருக்கும்.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications