இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

சென்னை: இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் அல்லது முதலீட்டு வங்கியியல் என்ற சொல் பல்வேறு சேவைகளைக் குறிப்பதாகவும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களும் வழங்கும் ஒரு பொதுவான சேவையைக் குறிப்பதாகவும் உள்ளது.

இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் என்பது உண்மையில் நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள வழிவகைச் செய்கின்றன.

தலையாயக் கடமை..

தலையாயக் கடமை..

இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங்கில் ஈடுபட்டுள்ள வங்கியின் தலையாயக் கடமை மற்றவர்களுக்காக நிதி திரட்டுவது தான்.

இந்த வங்கிகள் நிறுவனங்களுக்குப் பொதுப் பங்கு வெளியிடுதலைக் (IPO) குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி இதற்காக இயங்கும் பங்கு மேலாண்மை நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுகின்றன. இதோ இந்த வங்கிகளின் பணிகள் குறித்த ஒரு விளக்கம் உங்களுக்காக.

 

நிறுவனங்களுக்குப் பங்கு முதலீட்டைத் திரட்டுவது

நிறுவனங்களுக்குப் பங்கு முதலீட்டைத் திரட்டுவது

இந்தச் சேவையை வழங்கும் வங்கி, பங்கு வெளியிடும் தரகு நிறுவனங்களை நியமித்து இது தொடர்பான அனைத்து நடைமுறைகளிலும் அவர்களை ஈடுபடுத்தும். தரகு நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பங்கு வெளியீட்டு முயற்சியை வெற்றிகரமாக முடிப்பது இவர்களது முக்கியச் சேவை.

ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, பங்குச் சந்தையில் முதலீட்டைத் திரட்டுவது என்பது பல கட்ட விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும். அதுவும் நீண்ட நெடு காலம் தேவைப்படும். இத்தகைய பிரச்சனைகளைக் களையவே வங்கிகள் இத்தகைய சேவை அளிக்கிறது.

 

பங்கு வெளியீட்டை அறுதியிடுதல் (அண்டர்ரைடிங்)

பங்கு வெளியீட்டை அறுதியிடுதல் (அண்டர்ரைடிங்)

இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் சேவை அளிக்கும் வங்கிகள் பங்கு வெளியீட்டின் போது, அது பங்குப் பத்திரமோ அல்லது கடன் பத்திரமோ என்பதை ஆய்வு செய்து எழுத்துறுதி அளிப்பதன் மூலம் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுப் பணியில் முக்கிய இடத்தை அடைகிறது.

தனிப்பட்ட பங்கு வெளியீடு (ப்ரைவேட் ப்ளேஸ்மென்ட்)

தனிப்பட்ட பங்கு வெளியீடு (ப்ரைவேட் ப்ளேஸ்மென்ட்)

சில அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பங்குகளை வெளியிடுதல் அல்லது முதலீடு செய்தல் இன்வெஸ்ட் பாங்கிங்கில் ஈட்டுப்பட்டுள்ள வங்கியின் முக்கியக் கடமையாகும். இதன் மூலம் நிறுவனங்கள் மூலதனத்தைத் திரட்டவும் அதனைப் பிற பயன்களுக்காக விரிவாக்கம் செய்யவும் எளிதாகிறது.

நிறுவன இணைப்பு மற்றும் வாங்குதல் (மெர்ஜர்ஸ் அண்டு அக்விசிஷன்ஸ்)

நிறுவன இணைப்பு மற்றும் வாங்குதல் (மெர்ஜர்ஸ் அண்டு அக்விசிஷன்ஸ்)

இன்வெஸ்ட்மென்ட் வங்கியின் இச்சேவை மற்றுமொரு முக்கியப் பகுதி. பிற நிறுவனங்களை வாங்க முயலும் நிறுவனங்களுக்கு இந்த வங்கிகள் உறுதுணையாக உள்ளன. இந்த வங்கிகள் வாங்கப்படும் நிறுவனங்களைக் குறித்த ஒரு ஆழ்ந்த ஆய்வு நடத்தி அதன் துல்லியமான மதிப்பை அறிய உதவுகின்றன.

சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல்

சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல்

இந்த வங்கிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடிப்படையில் பங்கு வெளியீட்டின்போதும், நிறுவனங்களின் இனணப்பு மற்றும் நிறுவன வாங்குதல்களின் போதும் தேவையான நெறிமுறைகளைப் பின்பற்ற வழிகாட்டுதலாக இருக்கின்றன.

பொதுவாக இந்த வங்கிகள் அது தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்த ஆழ்ந்த அனுபவமும் சிறந்த கையாளும் திறனையும் கொண்டதாகவும் இருக்கின்றன.

 

கடைசியாக...

கடைசியாக...

இன்வெஸ்ட் பாங்கிங் சேவை குறித்த தனிப்பட்ட இலக்கணம் எதுவும் இன்று இல்லை. இந்தச் சேவையை வழங்கும் வங்கிகள் பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய சேவையை வழங்குகின்றன.

இதன் பொதுவான குறிக்கோள் தங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மூலதனத்தைத் திரட்டித் தருவது. இது பொதுப் பங்கு வெளியீடு, தனிப்பட்ட வெளியீடு அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலமான வெளியிடுவது ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

இந்தியாவில்...

இந்தியாவில்...

இந்தியாவில் இந்த வங்கிகளின் பங்கு அரசுக்குத் துணையாக இருந்து அரசு நிறுவனங்களுக்குப் பங்கு வெளியீடு அல்லது அரசு நிறுவனப் பங்குகளை விற்பது ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

எனவே இந்த வங்கிகள் சிக்கலான வர்த்தகப் பரிவர்த்தனைகளில் ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன என்பது தெளிவாகிறதல்லவா?

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+