நிதி அமைச்சகம் அடுத்த மாதம் முதல் 7வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
இதனால் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் லட்சம் கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்கிறது. இந்த அறிவிப்பு 2016 ஜூன் 25 ஆம் தேதி வெளிவந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016, ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு ஒரு கோடிக்கு மேலான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய காரர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
புதிய கட்டமைப்பு
புதிய கட்டமைப்பின் மூலம் 2015, டிசம்பர் 31 ஆம் தேதி வரை இருந்த சம்பளத்தில் இருந்து 2.57 காரணியுடன் பெருக்கினால் தற்போதைய சம்பளம் வந்து விடும்.
நிலுவைத் தொகை
2016-2017 நிதி ஆண்டிற்குள் நிலுவைத் தொகை அளிக்கப்படும்.
நுழைவு நிலை ஊதியம்
இப்போது ரூ.7,000 ஆக இருந்த நுழைவு நிலை ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.2.5 லட்சமாக நிர்னயக்கப்பட்டுள்ளது.
அலவன்ஸ்கள்
7வது சம்பள குழு இன்னும் அலவன்ஸ்கள் பற்றி ஏதும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும், இன்னும் நண்கு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பஞ்சப்படியைத் தவிர எல்லா அலவன்ஸ்களும் பழைய சம்பள அமைப்பு படி வழங்கப்படும்.
இரண்டு சம்பள உயர்வு நாட்கள்
இதுவரை ஜூலை 1 ஆம் தேதி மட்டும் இருந்த சம்பள உயர்வு நாள் இனி இரண்டு முறையாக ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்படும்.
அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டம்
மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டத்திற்கான மாதாந்திர பங்களிப்பு உயர்த்துதல் போன்றவற்றை நிறைய ஊழியர் பிரிவுகள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் இதில் பழைய பங்களிப்பே தொடரும்.
தனிப்பயனாக்கிய குழு காப்பீட்டுத் திட்டம்
நிதி அமைச்சகம் மத்திய அரசு ஊழியர்களுக்கான தனிப்பயனாக்கிய குழு காப்பீட்டு திட்டத்திற்கான பணியில் ஈடுபடும்.
வட்டி மற்றும் வட்டி இல்லா முன்பணம்
சில விதிவிலக்குகளுடன் வட்டி மற்றும் வட்டி இல்லா முன்பணம் வழங்க 7வது ஊதிய குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய குழுக்கள்
புதிதாக இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் ஊழியர்களின் தனிநபர் திறன் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் முரண்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS)செயல்படுத்த ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் அமைப்பு பரிந்துரைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications