பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சூதாட்டமா?

நம்மில் பலர் பங்குச் சந்தை முதலீடுகள் பற்றி கேள்விப்பட்டு ஆசை இருந்தாலும், அதைப்புரிந்து கொள்வது கடினம் என்று ஒரு தரப்பினரும், மறுப்புறம் இது ஒரு சூதாட்டம், குதிரை ரேஸ் பந்தயம் என்று வெளியே இருந்தே பேசுவார்கள்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சூதாட்டமா?

பங்குச் சந்தை என்பது அவ்வளவு கடினமான ஒன்று அல்ல, சூதாட்டமும் அல்ல. நாம் தினசரி நம் வாழ்க்கையில் செய்து வருவது தான் இது. எப்படி..?

ஒரு பழ கடைக்குச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஆப்பிள் ஒரு கிலோ போடுங்க, ஆரஞ்சு இரண்டு கிலோ போடுங்கள் என்று சொல்கிறோம் அல்லவா, அது போல தான், ஐசிஐசிஐ பங்கு 50 கொடுங்கள், எச்டிஎஃப்சி பங்கு 100 கொடுங்கள், ரிலையன்ஸ் - 200 கொடுங்கள் என்று வாங்குவது தான் பங்குகளை வாங்குதல்.

ஆப்பிள், காய் கறிகளை நீங்கள் இன்று வங்கி வந்து வைத்து விட்டு நாளை விலை குறைந்து விட்டால் அச்சோ நஷ்டம் என்று சொல்வீர்கள் இல்லையா, அது பொல தான் பங்கு சந்தையும். இன்று ஒரு பங்கை ரூ.100 கொடுத்து வாங்குவீர்கள். நாளை குறைந்துவிட்டால் நஷ்டம் ஆகி விட்டதே என்று கூறுவீர்கள்.

ஆனால் அதே ஆப்பிள் இன்று நீங்கள் ரூ.50-க்கு வாங்குகிறீர்கள், அடுத்த நாள் ரூ.125 என்றால் சந்தோஷபடுவீர்கள் இல்லையா. நான் நேற்றே வாங்கிவிட்டேன், தப்பித்தேன் என்று அது போல தான். ஆனால் நீங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, காய் கறிகளை அப்படி வாங்கி வைத்துக்கொண்டு எப்போது விலை ஏறும் என்று காத்திருந்து விற்பது கடினம். சில சமயம் விலை ஏறும் முன் கெட்டுப்போகலாம் விற்கவும் முடியாது.

அதுவே, பங்காக இருந்தால் விலை ஏறினால் உடனே விற்கலாம், விலை குறைத்தாலும் உடனே விற்கலாம். ஆனால் காய் கரிகளை, பழங்களை அப்படி விற்க இயலாது.

அதே போல நீங்கள் பங்குகளை வாங்கும் நிறுவனங்களின் பங்கு எப்போது ஏறும், குறையும் என்பது அந்த நிறுவனத்தின் வணிகம், முன்னேற்றம், லாபம், மதிப்பு, நற்பெயரைப் பொறுத்து மாறும்.

பங்குசந்தை முதலீடு குறித்து மேலும் தகவல்களைப் பெற, தமிழ் குட்ரிட்டர்ஸ் பக்கத்திற்கு மீண்டும் வருகை தரவும்...

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+