எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வைத்துக்கொள்ள வேண்டிய 10 செயலிகள்

வங்கி சேவைக்காக வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிகளுக்குச் சென்ற காலம் மாறிவிட்டன. தற்போது இணைய வங்கி சேவைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வங்கிகளும் ஊக்குவிக்கின்றன. அதே சமயம் தற்போது வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் உலகில், இணையதளங்களை பின்னுக்குத் தள்ளி செயலிகள் சேவை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் வங்கி சேவைகளில் முதன்மையான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ) 10 செயலிகள் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்துவருகிறது.

ஸ்டேட் பாங்க் ஃப்ரீடம் ஆப்

ஸ்டேட் பாங்க் ஃப்ரீடம் ஆப்

ஸ்டேட் பாங்க் ஃப்ரீடம் ஆப் செயலியின் மூலம் இணைய வங்கி சேவையில் என்ன என்ன சேவைகளை பயன்படுத்துகிறீர்களோ அதேப்போல இதிலும் உங்கள் கணக்கின் இருப்பு நிலை விசாரணை, பணம் அனுப்புதல், ரீசார்ஜ் மற்றும் ஃபோன் பில் செலுத்துதல் போன்ற பணிகளை எங்கும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

 எஸ்பிஐ குவிக்

எஸ்பிஐ குவிக்

எஸ்பிஐ குவிக் ஒரு மிஸ்டு கால் வங்கி அழைப்பு சேவையாகும். இதன்மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வங்கிக்கு மிஸ்டு கால் அளித்து தகவல்களைப் பெறலாம். மேலும் முன்பே வரையரையப்பட்ட எஸ்எம்எஸ் குறியீடுகளை அனுப்பி தகவல்களைப் பெறலாம்.

ஸ்டேட் பாங்க் பட்டி

ஸ்டேட் பாங்க் பட்டி

ஸ்டேட் பாங்க் பட்டி செயலி 13 மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பணம் அனுப்புதல், பணம் கேட்பது (ask money) மற்றும் பாக்கிகளை வசூலிப்பதற்கான விழிப்பூட்டல்கள், கணக்கில் கூடுதல் பணத்தைச் சேர்க்க, ரீசார்ஜ் மற்றும் பில்களை உடனடியாக தானாக கட்டணங்களைச் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யவது போன்ற அம்சங்கள் அமைந்துள்ளன.

ஸ்டேட் பாங்க் எம்-கேஷ்

ஸ்டேட் பாங்க் எம்-கேஷ்

ஸ்டேட் பாங்க் எம்-கேஷ் செயலியின் மூலம் மூன்றாம் நபருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், உங்கள் கணக்கில் இணைய வங்கி சேவை இருந்தால் பணம் பெருவோரை பெனிஃபீஷ்யரில் (beneficiary) சேர்க்காமலே நேரடியாக மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

இந்த செயலியில் எளிதாகவும், சுலபமாகவும் ஆன்லைன் எஸ்பிஐ அல்லது ஸ்டேட் பாங்க் யெனிவேர் பயன்படுத்தி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.

 

எஸ்பிஐ கார்டு

எஸ்பிஐ கார்டு

உங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை ஆன்ட்ராய்டு சாதனத்தின் மூலம் உடனடியாக அணுகலாம். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கி பயன்படுத்துவதன் மூலம், கிரெடிட் கார்டு பில்கள் சரிபார்க்கலாம், கட்டணம் செலுத்தலாம்.

எஸ்பிஐ நோ கியூ

எஸ்பிஐ நோ கியூ

இந்த செயலியின் மூலம் வங்கிகள் சென்று கியூ டோக்கனை பெறுவதற்குப் பதிலாக அனைத்து எஸ்பிஐ கிளைகளுக்கும் இ-டோக்கன்களைப் பெறலாம்.

ஸ்டேட் பாங்க் யெனிவேர்

ஸ்டேட் பாங்க் யெனிவேர்

இந்த செயலி எஸ்பிஐ ரீடெய்ல் இணைய வங்கி வாடிக்கையாளர்கள் எளிதாக பில் கட்டணங்கள் செலுத்த, ரீசார்ஜ் செய்ய, பயனர்களின் நிதி மேலாண்மையில் உதவுவதற்கான செயலி ஆகும்.

ஸ்டேட் பாங்க் சமாதான்

ஸ்டேட் பாங்க் சமாதான்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இல்லாதவர்கள் குறிப்பிட்ட கிளைகள்/அதிகாரிகளை அணுகி தங்கள் கேள்விகள்/சிக்கல்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்ற வட்டி சான்றிதழ்களை உறுவக்கி மின்னஞ்சல் மூலம் பெறலாம்.

ஸ்டேட் பாங்க் யெனிவேர் கார்ப்ரேட்

ஸ்டேட் பாங்க் யெனிவேர் கார்ப்ரேட்

ஸ்டேட் பாங்க் யெனிவேர் கார்ப்ரேட் பயன்பாடு கார்ப்ரேட் இணைய வங்கி சேவைக்காண மொபைல் பயன்பாடு ஆகும்.

 ஸ்டேட் பாங்க் யெனிவேர் சாரல்

ஸ்டேட் பாங்க் யெனிவேர் சாரல்

சாரல் எஸ்பிஐ வங்கியின் கார்ப்ரேட் இணைய வங்கி வணிக அமைப்புகளுக்கான ஒரு பயன்பாடாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+