பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குவெஸ் கார்ப் நிறுவனம் ஐபிஓ திட்டம் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 400 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.
நாம் முதலில் குவெஸ் கார்ப் நிறுவனம் எந்த துறைகளில் தங்களின் வணிகத்தைச் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஐ.டி பணியாளர், தொழில்துறை சொத்து மேலாண்மை, வசதி மேலாண்மை, திறன் மேம்பாடு, பொது பணியாளர் போன்ற வணிக சேவைகள் அளித்து வரும் நிறுவனம் ஆகும்.
இது தொடர்பாக 1.02 பில்லியன் பங்குகள் ரூ.10 எனத் துவங்கி ஒவ்வொரு பங்கும் ரூ.310-317 வரை விற்க தயராக உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பலர், இந்தப் பங்குகளை வாங்களாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
பங்குகளை வாங்குவதற்கான காரணங்கள்
ஐ.டி பணியாளர், தொழில்துறை சொத்து மேலாண்மை, வசதி மேலாண்மை, திறன் மேம்பாடு, பொது பணியாளர் போன்ற சேவைகள் அளித்து வந்தாலும் இந்தியாவில் 0.1% மட்டுமே இந்தத் தொழில் இதுவரை நடந்து உள்ளது. உலகலவிலும் இதுவே. எனவே மேலும் முதலீடுகள் பெறும் போது இந்த தொழில் துறைகள் நன்கு மேலும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்கம்
2007 ஆம் ஆண்டு பெங்களூரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் பெறும் வளர்ச்சியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 47 அலுவலகங்கள், 26 நகரங்களில் வணிகம், 1,300 வாடிக்கையாளர்கள் என்று வளர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் பங்குகளை வங்க ஏஞ்சல் ப்ரோக்கிங், ஜிஈபிஎல் கேப்பிட்டல் போன்ற பெறும் ப்ரோக்கர்களும் பரிந்துரைக்கின்றனர்.
வளர்ச்சி
ஒரு பெரிய தலைமை இல்லாத நிறுவனமாக இருந்தாலும், இந்த வணிக சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில் இதுவே மூன்றாம் பெரிய நிறுவனமாகம்.
கடந்த 4 ஆண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 52% மற்றும் 98% ஆகவும் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் இது வரை 9 நிறுவனங்களை இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனம் அதீத லாபம் தரும் வணிகங்களை நோக்கியே தனது வணிகத்தைச் செய்து வருகிறது.
ஆஸ்த்தான முதலீட்டாளர்கள்
கடந்த வாரம் ஆஸ்த்தான முதலீட்டாளர்களாக குவைத் இன்வஸ்ட்மெண்ட் அத்தாரிட்டியிடம் இருந்து ரு பங்குக்கு ரூ. 317 என 56.78 லட்சம் பங்குகளை ரூ. 180 கோடியை முதலீடாகப் பெற்றுள்ளது குவெஸ் கார்ப்.
மேலும் குவைத் இன்வஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி மட்டும் இல்லாமல் ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் எம்.எப், ஹெச்டிஎப்சி எம்.எப், நோமுரா, ஹார்வர்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, டிஎஸ்பி, பிளாக்ராக், வாஸ்ட்ச், பிக்டெட் மற்றும் கிராண்டியுர் பீக் ஆகியோரையும் தனது ஆஸ்தான முதலீட்டாளர்களாக பெற்றுள்ளனர்.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் சேவை நிர்வகிப்பு
இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் முதலீடு செய்துள்ள அமேசான் மற்றும் அர்பன் லேடர் உட்படப் பல நிறுவனங்களுக்குச் சேவையை நிர்வகிக்க 12,500 இணை ஊழியர்களை அளித்துள்ளது இந்நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications