ஈபிஎப் குறித்த புகார்கள் மற்றும் குறைகளை இங்கே தெரிவிக்கலாம்..!

தனிநபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மீது உள்ள புகார்களை யாரிடம் தெரிவிப்பது மற்றும் குறைகளை யாரிடம் சொல்வது என்ற சந்தேகம் இருக்கும்.

ஈபிஎப் குறித்த புகார்கள் மற்றும் குறைகளை இங்கே தெரிவிக்கலாம்..!

பலர் இதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடராமல் அதில் உள்ள நன்மைகளை அனுபவிக்காமல் விட்டு விடுவர்.

2015 ஆம் வருடத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பற்றி 2,03,288 குறைகள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு வந்துள்ளது.

எனவே வருங்கால வைப்பு நிதி பற்றிய உங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் புகார்களை இணையம் வழியாக அளிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஈபிஏஃப்ஐஜிஎம்எஸ் (EPFiGMS) என்பது ஒரு வருங்கால வைப்பு நிதி பற்றிய குறைகள் தீர்க்கக்கூடிய மேலாண்மை அமைப்பு ஆகும்.

இந்தச் சேவை மூலம் குறைகள் அல்லது யூனிவர்சல் கணக்கு எண் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்க.

ஈபிஎஃப்-இல் என்ன மாதிரியான புகர்கள்/குறைகளை அளிக்க இயலும்

1) பிஎஃப் இறுதி தீர்வினை வழங்குதல் / விலக்குதல்
2) பிஎஃப் கணக்கை மாற்றுதல் (F-13)
3) திட்டச் சான்றிதழ் (10 C)
4) ஓய்வூதிய தீர்வு (10 D)
5) பிஎஃப் சீட்டு / பிஎஃப் இருப்பு வழங்குதல்
6) காப்பீடு சலுகையை கொடுப்பனவு (5IF)
7) திரும்பி வந்த அல்லது தொலைந்த காசோலை

வருங்கால வைப்பு நிதி புகார்களை எப்படிப் பதிவு செய்வது?

பதிவு செய்யும் போது நீங்கள் அளிக்க வேண்டிய விவரங்கள்:

1) ஈபிஏஃப்ஐஜிஎம்எஸ் (EPFiGMS) இணையதளத்திற்கு செல்க.
2) குறையைப் பதிவு செய்க(Register Grievance) என்பதை கிளிக் செய்க.
3) பிஎஃப் உறுப்பினர், ஈபிஎஸ் ஓய்வு கால ஊதியம் பெறுபவர், நிறுவனம் அல்லது பிற என்ற பட்டியல் ட்ராப்பில் இருந்து உங்களுக்குப் பொருத்தமானதை தேர்வு செய்க.
4) பின்னர் கொடுக்கப்பட்ட இடத்தில் பிஎஃப் எண்ணை உள்ளிடுக.
5) குறைகளைத் தீர்ப்பதற்கான துறையைத் தேர்வு செய்தல்
6) பிஎஃப் கணக்கில் உள்ள பெயர் மற்றும் முகவரி
7) உங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண்கள்
8) என்ன மாதிரியான புகர்கள்/குறைகளை அளிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்க
9) மேலும் நீங்கள் அளிக்க விரும்பும் விவரங்களை விளக்கமாக அளிக்கவும்.
10) உங்கள் புகார் கோப்பைப் பதிவேற்றவும்.
11) சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிடுக.
12) பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கவும் .

ஈபிஎப் குறித்த புகார்கள் மற்றும் குறைகளை இங்கே தெரிவிக்கலாம்..!

முடிவுரை

இந்தப் பதிவின் போது நீங்கள் உள்ளிடும் கடவுச்சொல்லை பத்திரமாக வைத்துக் கொள்க.

இது அனைத்தும் நீங்கள் செய்த பிறகு உங்களுக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட பரிவர்த்தனை எண்ணைப் பயன்படுத்தி பிற செயல்பாடுகள் மற்றும் உங்கள் புகாரின் நிலையைக் கண்டறிய இயலும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+