வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா உங்களுக்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளில் 2022-க்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான பேருக்கு வீடு கட்டி முடிக்க வேண்டும் என்று இத்திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது.
நாம் இப்போது இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறலாம் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாகவும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாக உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டுவதற்கான பல சலுகைகளைப் பெறலாம்.
சொந்தமாக இடம்
உங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிவிடலாம்.
இரண்டு அளவீடுகள்
நீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர மீட்டராக இருந்தால் உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
அதுவே 60 சதுர மீட்டராக இருந்தால் உங்கள் வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வீட்டுக் கடன்
இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் 15 வருடத்திற்கு 6 லட்சம் கடனாக பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் இத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசு 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.4,050 மட்டும் வட்டியாகச் செலுத்தி வந்தால் போதும். இதுவே வெளியில் கடனாக பெற்றால் 10.05 சதவீதம் வட்டியாகச் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் தவணையில் இருந்து ரூ.2,000 வரை சேமிக்கலாம்.
ஊக்கத் தொகை
பழங்குடியினர், பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் பெருமளவு ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவினர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.3 லட்சம் வரை ஊக்கத் தொகை பெறுவர்.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்
நன்கு கட்டப்பட்ட வீடு இல்லை என்று மட்டும் சான்றிதழ் பின்னர் வருமான சான்றிதழ் இவை இரண்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications