தீபாவளி ஷாப்பிங் போகிறீர்களா? அப்ப கடைக்காரங்களோட இந்த ட்ரிக்ல ஏமாந்துடாதீங்க..!

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விழாக்காலங்களில் ஷாப்பிங் செய்ய நீங்கள் முடிவு செய்திருந்தால், அது ஆன்லைன் ஷாப்பிங்கோ அல்லது நேராகவோ உங்களைக் கவர பல்வேறு வலைகளை வியாபாரிகள் விரிப்பர். அவற்றைப் பற்றிய தகவல்கள் சிலவற்றை இதோ உங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.

 

டெகாய் விலை முறை

டெகாய் விலை முறை

இந்த உத்தி பல கடைகளால் பயன்படுத்தப் படுகிறது ஒரு பொருள் 1000 ரூபாய் என்றால் அதன் அருகில் ஒரு 500 ரூபாய் மற்றும் 1100 பெறுமானமுள்ள பெறுமானமுள்ள அதே போன்ற பொருளை அருகில் வைத்துவிடுவர். நீங்கள் 1000 ரூபாய் பொருள் சரியான தேர்வு என்று எண்ணி வாங்குவீர்கள்.

விலை அதிகமுள்ள ஒரு பொருளை மலிவாகக் காட்டும் ஒரு தந்திரமே இது. உணவகங்களிலும் கூட பட்டியலில் குறைந்த விலை உணவுப் பொருட்களுக்கு அருகிலேயே அதிக விலை பொருட்களின் விலையும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

பர்ஸத் தொறங்க (ஒபன் தி வாலட்)

பர்ஸத் தொறங்க (ஒபன் தி வாலட்)

கடையை விட்டு வெளியே வரும்போது கவுண்டரில் சிறிய விலையில் பர்ஸுகள், சிறு பொருட்கள், ஸ்னாக்ஸ் மற்றும் சாக்லேட் ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள்.

ஷாப்பிங் முடித்துவிட்டுக் களைப்புடன் வரும் உங்களுக்கு இதைப் பார்த்தவுடன் நப்பாசையை அடக்க முடியாது. உடனே நீங்கள் இதுபோன்ற சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டுவிடுவீர்கள்.

க்ருயென் ட்ரான்ஸ்ஃபர் அல்லது போலியான ஆர்வம்
 

க்ருயென் ட்ரான்ஸ்ஃபர் அல்லது போலியான ஆர்வம்

ஒரு பெரிய கடைக்குச் சென்று வழி தெரியாமல் நீங்கள் தடுமாற நேரிட்டால், அது ஒரு உங்களைக் குழப்பச் செய்யப்பட்ட முயற்சியாக இருக்கலாம்.

மால் வடிவமைப்பாளர் விக்டர் க்ருயென் பெயரில் அழைக்கப்படும் இந்த வடிவமைப்பு கடைக்கு வாங்க வரும் வாடிக்கையாளர்களைக் குழப்பி நிறைய நேரத்தை அங்கேயே நீங்கள் செலவிட்டு அவர்களை ஒருவித கட்டாயத்துடன் பொருட்களை வாங்கவைப்பதை அடிப்படையாகக் கொண்டது.

ஒரே இடத்தைப் பலமுறை சுற்றி வரும்போது விலையையும் பொருளையும் பல முறை பார்க்க நேரிடுவதால் உங்களுக்குப் பழகிய ஒன்றாகத் தோன்றி வாங்கத் தூண்டும்.

“பை”த்தியம் (பேக் ஸ்னார்)

“பை”த்தியம் (பேக் ஸ்னார்)

எப்ப நீங்க ஒரு பெரிய கடைக்குப் போனாலும் உடனே ஒரு பையைக் கொடுத்துவிடுவார்கள் தெரியுமா? ஏனென்றால், கையில் ஒரு சில பொருட்களையே கொள்ள முடியும்.

மேலும் பையை நீங்கள் வைத்துள்ள வரை உங்கள் ஆவலும் அதிகரிக்கவும் அதனை ஒதுக்க மனமில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. அதனால் அந்தப் பையை புறக்கணியுங்கள்.

சில்லறை சமாச்சாரம்

சில்லறை சமாச்சாரம்

இது பரோட்டா ஸ்டோரி போலத்தான். 50 பரோட்டா சாப்புட்டா இலவசம் இல்லன்னா சாப்பிட்ட வரைக்கும் காசுகுடுக்கனும்னு ஒரு காமடி பார்த்திருக்கிறோம் இல்லையா. ஒரு பொருளின் அதிக அளவை வாங்குவதை விட குறைந்த அளவை வாங்குவதையே விரும்புவீர்கள் இல்லையா?

உதாரணமாக 400 ரூபாய் ஷாம்பு பாக்கெட்டை விட 100 ரூபாய் பாக்கெட்டை வாங்கவே விரும்புவோம். எனவே கடைகள் பெரும்பாலும் தங்கள் பொருட்களை அடுக்கி வைக்கிறார்கள். இதனால் தான் நீங்கள் கவுண்டரில் காசு செலுத்தும்போது அங்கு வைக்கப் பட்டிருக்கும் விலை குறைவான பொருட்களையும் வாங்குகிறீர்கள்.

திறமையான விலை நிர்ணயம்

திறமையான விலை நிர்ணயம்

பெரும்பாலான வர்த்தகர்கள் இந்த ஐடியாவை பயன்படுத்துகின்றனர். தேவையின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு விலையை வழங்குவார்கள். உதாரணமாக ஒரு இணைய வர்த்தகத்தில் நீங்கள் தொடர் வாடிக்கையாளராக இருந்தாலும் உங்களுக்கு அதிக விலையும் குறைந்த நாளே வாடிக்கையாளராக உள்ளவருக்கு விலை குறைவாகவும் விற்பர்.

இதற்குக் காரணம், இவ்வாறு இணையம் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தேடல் மற்றும் செலவு செய்யும் விதம் ஆகியவற்றின் விவரங்களை இந்த வர்த்தகர்கள் ஆராய்ந்து அறிய வாய்ப்புள்ளது. இதை தடுக்க உங்கள் இணையத் தேடல் முடிந்தவுடன் தேடல் பதிவுகளையும் குக்கிகளையும் அழித்துவிட்டு அந்த இணைய தளத்திலிருந்து வெளியேறிவிடுங்கள்.

கண்பார்வையில் பொருட்கள்

கண்பார்வையில் பொருட்கள்

இது நீங்கள் அறிந்திராத ஒன்றாக இருக்கலாம். அங்காடிகளில் அடுக்கப்பட்டுள்ள பொருட்களில் கண்பார்வைக்கு நேராக அடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் கீழே அடுக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் காட்டிலும் எப்போதும் விலை அதிகமாகவும், அதிக இலாபம் தரும் பொருட்களாகவும் இருக்கும். அதேபோல், பொம்மைகள், விளையாட்டுகள் (கேம்ஸ்) மற்றும் பிற குழந்தைகளுக்கான பொருட்கள் குழந்தைகளின் உயரம் மற்றும் வயதிற்கேற்றவாறு அடுக்கப்பட்டிருக்கும்.

அங்காடியின் உள்ளே வாடிக்கையாளர் நகரும் திசையும் இடமிருந்து வலமாக அமையும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் பெரும்பாலானோர் வலது கை வழக்கம் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் பொருட்களை வலது கையால் எளிதில் எடுக்க முடியும்.

அத்தியாவசியப் பொருட்கள் கடைசியில்

அத்தியாவசியப் பொருட்கள் கடைசியில்

அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலும் கடைசியிலேயே வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் நீங்கள் அத்தியாவசியமல்லாத பிற பொருட்களினூடே சென்று அதை அடையும் வண்ணம் வைப்பதன் மூலம் பிற பொருட்களை வாங்க ஈர்க்கப்படவேண்டும் என்பதற்காக. எனவே பிற பொருட்களை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இல்லையென்றாலும் நீங்கள் வாங்கத் தூண்டப் படுவீர்கள்.

தள்ளுபடிக் கூத்துக்கள்

தள்ளுபடிக் கூத்துக்கள்

"ஒன்று வாங்கினால் 50% தள்ளுபடி" இல்லையென்றால் "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்பதெல்லாம் நிச்சயமாக நல்ல திட்டங்கள் இல்லை. முதலில் கூறியது 25% தள்ளுபடியை ஒவ்வொரு பொருளுக்கும் தரும். இரண்டாவதின் விலையில் இரண்டு பொருட்களின் விலையும் அடக்கம். ஆன்லைன் வர்த்தகங்களும் குறைந்த கால அளவு தள்ளுபடிகளைத் தருவதுடன் அடுத்த முறை வாங்கும்போது தரப்படும் தள்ளுபடியும் தருகின்றன.

சின்னக் கல் பெரிய மாங்காய்

சின்னக் கல் பெரிய மாங்காய்

ஒரு பொருளை அதிக அளவில் வாங்கினால் அதாவது ஒரு ஜுஸ் வாங்கும்போது ஒரு பாக்கெட்டிற்கு பதிலாக ஆறு அல்லது பத்து பாக்குகள் வாங்கினால் பணம் மிச்சமாகும் என நினைக்கிறீர்களா?

ஆய்வுகளின் படி ஒரு கால அளவிற்குள் நீங்கள் அதிகம் உபயோகிக்கத் தொடங்கிவிடுவீர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் உங்களை அதிகம் செலவு செய்யவைக்க முடியும். எனவே நீங்கள் பொழுதுபோக்கிற்காக இல்லாத பட்சத்தில் இந்த எகனாமி பாக்குகளை வாங்காமல் இருப்பது நல்லது.

இலவச விளம்பரப் பொருட்கள்

இலவச விளம்பரப் பொருட்கள்

ஃப்ரீ சாம்பிள் ஸ்டால்கள் எனப்படும் இவை பெரும்பாலும் மால்கள் மற்றும் சந்தடியான அங்காடிகளின் மையப்பகுதியில் அமைக்கப்படுவது ஒரு வியாபார உக்தி மட்டுமல்ல அந்த இடத்தை சுற்றிவந்து அங்கு வைக்கப்பட்டுள்ள பிற பொருட்களையும் பார்த்து வாங்கத் தூண்டுவதற்காகத்தான்.

வலைப் பைகள் விலை அதிகம்

வலைப் பைகள் விலை அதிகம்

காய்கறிகள் வலைப் பையில் அடைத்து விற்பதை பார்த்திருப்பீர்கள். அது வசதியாக இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அவை சாதாரணமான காய்கறிகளை விட விலை அதிகம் என்பதோடு அதில் நல்லவை கெட்டவை என அனைத்தும் கலந்து கிடக்க வாய்ப்புகள் அதிகம். எனவே சிறிது நிமிடங்கள் அதிகம் ஆனாலும் கையில் எடுத்துப் பார்த்து வாங்குவது சிறந்தது.

இ-காமர்ஸ் செயலிகள்

இ-காமர்ஸ் செயலிகள்

இதுவரை எத்தனை செயலிகளை இணைய பொருட்களை வாங்குவதற்காக டவுன்லோட் செய்திருப்பீர்கள்? நீங்கள் அடிக்கடி வாங்குபவர் இல்லையென்றாலும் உங்களை பல்வேறு வகைகளில் நச்சரித்து உங்களை வாங்கத்தூண்டுபவை இவை. பெரும்பாலும் விற்கின்றன என்பதற்காவே உங்களை தேவையற்ற பொருட்களை வாங்கச் செய்யும்.

தேவைய்றற அவசரத் திணிப்பு

தேவைய்றற அவசரத் திணிப்பு

அக்ரெகேட்டர் மூலம் ஒரு ஒட்டல் அறையை நீங்கள் பதிவு செய்ய முயற்சித்திருந்தால், உங்களுக்கு "11 பேர் இங்கு பதிவு செய்துள்ளனர்" அல்லது "2 அறைகள் மட்டுமே உள்ளன" போன்ற வாசகங்கள் வந்து போகும். அதே போல் ஃப்ளாஷ் சேல் எனப்படும் திடீர் விற்பனைகள் "இரண்டு நாட்களுக்கு மட்டும்" அல்லது "ஐந்து பொருட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன" என்பது போன்ற மாயையை உருவாக்கி உங்களை கவிழ்த்து விடும்.

அடப்பாவிங்களா.. இவ்வளவெல்லாம் நடக்குதானு நீங்க கேக்குறது காதுல விழுது. என்ன பண்ண இவ்வளவு பண்ணியும் போணியாகலையே...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are you going to shopping? Don't fall in this following shopkeepers Tricks

Are you going to shopping? Don't fall in this following shopkeepers Tricks.
Story first published: Sunday, September 25, 2016, 11:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X