பணியாளர்களை ஊக்குவித்து வேலை வாங்க வேண்டுமா..! உங்களுக்கான எளிய வழிகள்..!

ஒரு நிறுவனத்தின் வெற்றியானது அது எவ்வாறு தன்னுடைய ஊழியர்களை எப்படி நடத்துகின்றது என்பதில் தான் அடங்கி இருக்கின்றது. ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், இதுவே மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.

நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்கள்தான் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்பதை உணர்ந்து அவர்களை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நாங்கள் இங்கே பல்வேறு வல்லுநர்களின் தொழிலாளர்களின் ஊக்குவிப்பது தொடர்பான அறிவுரைகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து மேலே படியுங்கள்.

உரிமையை ஊக்குவிக்க வேண்டும்.

உரிமையை ஊக்குவிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் அனைத்து மட்டங்களிலும் உள்ள உள்ள ஊழியர்களிடம் நிறுவனத்தின் பொறுப்பை பகிர்ந்து அளிக்க வேண்டும். இது அனைத்துத் தரப்பு ஊழியர்களும் நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்வதற்கு வாய்ப்பளிப்பதோடு, அவர்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை தங்களின் தோள்களில் தூக்கிச் சுமப்பதற்கு தூண்டுகோலாக்க இருக்கும்.

"இது ஊழியர்கள் நிர்வாக அமைப்பின் பெரிய குறிக்கோள்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ள உதவும். மற்றும் அவர்கள் செய்து வரும் வேலையை சீரகச் செய்வதற்கு துணை புரியும். மேலும் இது ஊழியர்கள் தங்களை வேலையுடன் தனிப்பட்ட முறையில் இணைத்துக் கொள்ள உதவும்", என சோனாலி டி சார்கீர், மனித வளங்கள் தலைவர், நெட்ஆப், இந்தியா, கூறுகிறார்.

 

பயனுள்ள வேலைகளை வழங்கவும்

பயனுள்ள வேலைகளை வழங்கவும்

ஒரு நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் தங்களுடைய ஊழியர்களுக்குத் தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சவாலான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றதா என்பதை தங்களுக்கு தாங்கலே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். "மிகவும் அதிகாரம் மற்றும் செறிவூட்டப்பட்ட பாத்திரங்கள் உருவாவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இது விளிம்புக்கு அப்பால் செல்லும் ஒரு கலாச்சாரத்து உருவாக்கி, நிர்வாக உறுப்பினர்கள் தங்களுடைய எல்லைகளை தாங்கலே வரையறுத்துக் கொள்ளும் ஒரு நிலையை உருவாக்குகின்றது.", என அசுதோஷ் டிலாங்க், மாரிகோ தலைமை மனித வள அதிகாரி கூறுகிறார்.

 

புதுமையான அலுவலக வடிவமைப்பு

புதுமையான அலுவலக வடிவமைப்பு

பணியிட வடிவமைப்பு ஊழியர்களை ஊக்குவிக்கப் பயன்படும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள் ஒரு பெரிய அனுகூலத்தை அனுபவிக்கின்றனர். "இன்றைய ஊழியர்கள் திறந்த வெளியைச் சுற்றி கட்டப்பட்ட ஒரு பணியிடம், சிறந்த கூட்டு தொழில்நுட்ப கருவிகள் நிறைந்த சந்திக்கும் இடம், மற்றும் மூத்த மேலாண்மை எளிதாக அணுகக் கூடிய வசதிகளை அதிகம் விரும்புகின்றார்கள்.

இது ஊழியர்களின் தர வரிசையில் இடைவெளியைக் குறைத்து அவர்களுக்கு அதிகாரமளித்து அவர்கள் நன்றாக வேலை செய்ய தூண்டுகின்றது", என சார்கீர் கூறுகிறார்.

 

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை

ஊழியர் திறந்த மற்றும் வெளிப்படையான நிர்வாகச் சூழலில் நன்றாக வேலைப் புரிகின்றார். "நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வர்த்தக செயல்திறனில் ஊழியர்களைத் தலைமை நிர்வாக அதிகாரி கலந்தாலோசித்தால், அது ஊழியர்களுக்கு தாங்களும் தங்களுடைய நிர்வாகத்தால் மதிக்கப்படுகின்றோம் என்கிற உணர்வைத் தரும். அந்த உணர்வு அந்த நிறுவனத்தைப் பல படிகள் முன்னே எடுத்துக் செல்லும்.

கடை நிலை ஊழியர்களுடனான மேல் மேலாண்மை அதிகாரிகளின் சந்திப்பு ஊழியர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்த உதவுவதோடு, அவர்களின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்த உதவும். இது நிறுவனத்தை முன்நோக்கி நகர்த்தும் முயற்சியில் மிகவும் முக்கியமானது", என பினா பாட்டீல், துணைத் தலைவர், மனித வள மேம்பாட்டுத் துறை, இண்டிஜீன்,சுகாதார தீர்வு நிறுவனம், கூறுகிறார்.

 

வெகுமதி மற்றும் அங்கீகாரம்

வெகுமதி மற்றும் அங்கீகாரம்

சிறந்த யோசனைகள் தரும் அல்லது திட்டங்களில் தங்களின் திறனுக்கு மேலே தாண்டி சென்று பணி புரியும் பணியாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள் வழங்க வேண்டும், என டெலாங் கூறுகிறார்.

இது நிறுவனத்தில் உள்ள பிற ஊழியர்களைச் சிறப்பாக பணிபுரிய மேலும் ஊக்கப்படுத்தும். "முடிவு சார்ந்த மற்றும் நடத்தை அடிப்படையிலான விருதுகள் பணியாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். இந்த விருதுகள் எல்லாம் நல்ல உற்பத்தியாக மாறி விடும்", என பாட்டீல் கூறுகிறார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+