இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக எவ்வாறு கடன் பெறுவது என்று தெரியுமா..?

இன்ஷுரன்ஸ் சார்ந்த ஒரு புது விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம். அது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் இது வரை கேள்விப்பட்டிராத காப்பீட்டிற்கு எதிரான கடன் தான்.

சென்னை: நீங்கள் எப்போதாவது லாஸ் வேகாஸில் உள்ள சூதாடும் துளை இயந்திரம் முன் அமர்ந்து இருக்கும் போது அந்த இயந்திரம் உங்களின் எதிர்கால வாழ்க்கையை ஆடம்பரமானதாக மாற்ற ஒரு பெரும் தொகையை உமிழத் தயாராக இருக்குமாறு கனவு கண்டு மெய் மறந்து அமர்ந்திருக்கின்றீர்களா?

அதற்குச் சற்றும் குறைவில்லாத இன்ஷுரன்ஸ் சார்ந்த ஒரு புது விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம். அது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் இது வரை கேள்விப்பட்டிராத காப்பீட்டிற்கு எதிரான கடன் தான்.

நான்கில் - ஒரு கருவியாக மாறிவிட்டது

நான்கில் - ஒரு கருவியாக மாறிவிட்டது

தற்பொழுது மூன்றில் ஒன்று, மற்றும் நான்கில் ஒன்று போன்ற நிதி திட்டங்கள் வர்த்தக சந்தையில் விற்கப்பட்டு சந்தையின் போக்கை முற்றிலும் மாற்றி வருகின்றன. பாரம்பரியமாக ஒரு எளியப் பாதுகாப்பு வழங்கும் ஆயுள் காப்பீடானது, இன்று நான்கில் - ஒரு கருவியாக மாறி, பாதுகாப்பு, முதலீடு, வரிச் சலுகைகள் மற்றும் கடன் வசதி போன்ற அனைத்தும் இணைந்ததாக மாறி விட்டது.

ஆயுள் காப்பீட்டிற்கு எதிரான கடன், தனிநபர் கடன்கள் போன்று அவ்வளவு பிரபலமாகவில்லை. மற்றும் பல மக்கள் அதை விட்டு விலகியிருக்கின்றார்கள்.

 

என்ன காரணம்?

என்ன காரணம்?

அவர்களுக்கு இதைப் பற்றி தெரியாது! மேலும் இதைப் பற்றி யாரும் கவலைகொள்வதும் இல்லை.

எனவே, எப்படி உங்கள் காப்பீட்டுக்க எதிராகக் கடன் பெறுவது என்று இங்குப் பார்ப்போம்.

 

காப்பீட்டிற்கு எதிரான கடன்

காப்பீட்டிற்கு எதிரான கடன்

ஆயுள் காப்பீட்டிற்கு எதிரான கடன் இன்று எளிதாகக் கிடைக்கின்றது. மற்றும் அனைத்து முக்கிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் காப்பீட்டுக்கு எதிராகக் கடன் வழங்குகின்றன. இங்கே காப்பீட்டு பாலிசியானது, கடனுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுவதால், இந்த வகை கடன்களில், தனி நபர் கடன் போன்று அல்லாமல், வட்டி விகிதம் மற்றும் பிற கட்டணங்கள் மிகவும் குறைவு.

உங்களின் கடன் தகுதி எப்படி முடிவு செய்யப்படுகின்றது?

உங்களின் கடன் தகுதி எப்படி முடிவு செய்யப்படுகின்றது?

அனைத்து வகையான காப்பீடு திட்டங்களுக்கும் எதிராகக் கடன் கிடைப்பதில்லை. ஆயுள் காப்பீட்டு திட்டங்களான என்டொவ்மெண்ட் திட்டங்கள், மணி பேக் திட்டங்கள், மற்றும் யூலிப் திட்டங்களுக்கு எதிராகக் கடன் கிடைக்கும்.

டெர்ம் திட்டங்கள்

டெர்ம் திட்டங்கள்


டெர்ம் திட்டங்களுக்கு எதிராகக் கடன் கிடைப்பதில்லை. ஏனெனில் டெர்ம் திட்டங்களுக்கு பண மதிப்பு இருப்பதில்லை. அதோடு மட்டுமல்ல டெர்ம் திட்டங்களில் வேறு திட்டங்களைப் போன்று வருமானம் கிடைப்பதில்லை. மற்றும் இந்த வகை திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காலாவதி ஆகின்றன.

டெர்ம் திட்டங்கள் அல்லாத குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தப்பட்ட பிற திட்டங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும்.

 

எவ்வளவு கடன் கிடைக்கும்?

எவ்வளவு கடன் கிடைக்கும்?

ஆயுள் காப்பீடுகும்க்கு எதிரான கடன்களைப் பொருத்தவரை நீங்கள் செலுத்திய பிரீமியத்தின் மொத்த தொகையில் சுமார் 70 முதல் 75 சதவீதம் வரை உங்களுக்குக் கடன் கிடைக்கும். அதுவே உத்தரவாத பாரம்பரிய திட்டங்களைப் பொருத்தவரை சுமார் 85 முதல் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.

தனிநபர் கடன்கள் போழல்லாமல், இங்குக் கடன் வாங்குபவரின் வருமானம் கடன் தகுதியைத் தீர்மானிப்பதில்லை. எனினும், கடன் வாங்குபவரின் கடன்திறன், அவரின் கிரெடிட் ஸ்கோர் சோதனைக்குப் பிறகு கணக்கிடப்படும்.

 

என்னென்ன ஆவணங்கள் தேவை?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

உங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு எதிராகக் கடன் பெற, நீங்கள் ஒரு முன் குறிப்பிட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் உங்களின் அசல் ஆயுள் காப்பீட்டு பாலிசியை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு ஒரு பத்திரத்தில் காப்பீட்டு பாலிசியின் நன்மைகள் அனைத்தும் கடன் நிலுவையில் இருக்கும் காலத்தின் போது, வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதிக் கையெழுத்திட்டு அந்தப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடனுக்கு உத்திரவாதம்

கடனுக்கு உத்திரவாதம்

நீங்கள் கடன் தொகையைத் திரும்பி செழுத்தும் வரை, உங்களின் காப்பீடு பாலிசி, உங்களின் கடனுக்கு எதிரான பாதுகாப்பாக விளங்கும். வங்கிகள், ஆயுள் காப்பீடு திட்டத்தின் எதிர்கால தவணைகளை செலுத்தியதற்கான ரசீது மற்றும் இரத்தான காசோலையை கேட்டுப் பெறும்.

நாம் எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்துவது?

நாம் எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்துவது?

ஆயுள் காப்பீட்டுக்கு எதிரான கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே வேறுபடுகின்றன. உதாரணமாக ஆயுள் காப்பீட்டு கழகம் குறைந்த பட்சகால அவகாசமாக ஆறு மாத கடன்களை வழங்குகின்றது.

நீங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு கடனை திருப்பிச் செலுத்த நினைத்தால் கூட, முழு ஆறு மாதங்களுக்கு உரிய வட்டியைச் செலுத்த வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீதமுள்ள பாலிசி காலத்திற்கு கடன் வழங்குகிறது மற்றும் எந்த வித அபராத கட்டணம் இன்றி நீங்கள் முன்கூடியே கடனை திரும்பச் செழுத்தை இயலும்.

 

ஆயுள் காப்பீட்டு பாலிசி எதிராகக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வுளவு?

ஆயுள் காப்பீட்டு பாலிசி எதிராகக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வுளவு?

ஆயுள் காப்பீடுக்கு எதிரான கடன்களின் வட்டி விகிதம், நீங்கள் செலுத்திய பிரீமியம் மற்றும் சந்தா எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். நீங்கள் அதிக எண்ணிக்கையிலான சந்தாவிற்கு பிரீமியம் செலுத்தியிருந்தால், உங்களுக்குக் குறைந்த பட்ச வட்டி விகிதம் விதிக்கப்படும். மேலும் உங்களுடைய கட்டணமும் குறைவாகவே இருக்கும்.

வங்கிகளில் கடன்

வங்கிகளில் கடன்

வங்கிகள் பொதுவாக தங்கள் அடிப்படை வட்டி விகிதத்துடன் கடன்களின் வட்டி விகிதத்தை இணைத்து விடும். வங்கிகள் இந்த வகை கடன்களை ஒரு காப்பீட்டு திட்டங்களுக்கு எதிரான மிகைப்பற்றாகவே, இந்தக் கடன்களை கருதும். எனவே வங்கிகளின் இந்தவகை கடன்கள் காப்பீடு நிறுவனங்களின் கடன்களை விட விலையுயர்ந்ததாகவே இருக்கும். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தற்போது அறையாண்டு கணக்கீட்டு நிபந்தனையுடன் ஆண்டிற்கு சுமார் 9 சதவீத வட்டி வசூலிக்கிறது. வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் காப்பீட்டு வகையைப் பொருத்து சுமார் 10 சதவீதத்தில் இருந்து 14% வரை மாறுபடுகின்றன.

காப்பீட்டுக்கு எதிரான கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

காப்பீட்டுக்கு எதிரான கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

காப்பீடுக்குக்கு எதிரான கடனை விண்ணப்பிக்கும் முன், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணிகள் உள்ளன.

கடன், காப்பீட்டுக் காலத்திற்குள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டு நீங்கள் எத்தேனும் க்ளெய்ம் செய்தால், அந்தக் க்ளெய்ம் தொகையில் கடனுக்கான பாக்கித் தொகை கழிக்கப் படும்.

சில காப்பீடு நிறுவனங்கள் நீங்கள் கடன் பெற்ற பின்னர், காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியத்தை செலுத்தாமல் இருந்தால், உங்களின் காப்பீடு திட்டத்தை ரத்து செய்து விடும்.

தனி நபர் கடன் பெறுவக்குவதை விட ஆயுள் காப்பீடுக்கு எதிராகக் கடன் பெறுவது மிகவும் எளிதானது. மேலும் இதன் மூலம் உங்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருப்பதுடன் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+