எப்போதும் மந்திரத்திரத்திற்கு ஒரு சக்தி உண்டு. அதே மந்திரத்தை அறிஞர்களும், வெற்றிப் பெற்றவர்களும் போதித்தால் அதன் சக்தியே வேறு.
உலகளவில் வளர்ச்சி அடைந்துள்ள சந்தைகள் பிரச்சனையில் இருக்கும் போது ஈக்விட்டி சந்தையில் பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ஒழுக்கமான அணுகுமுறையைப் பின்பற்றி தரமான நிறுவனங்களில் தங்களது முதலீடுகளைச் செய்து வந்தால் கண்டிப்பாக கோடீஸ்வரர் கனவை அடைய இயலும்.
பின்வரும் ஒழுக்கமான அணுகுமுறை பின்பற்றி சரியான முதலீட்டு முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஈக்விட்டி சந்தையை விட்டு பிறர் வெளியே நீங்கள் சிறப்பான லாபத்தை அடையை இயலும்.

இந்த முதலீட்டுக் கோள்கைகளை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள சந்தை குருக்களான வாரன் பஃபேட் மற்றும் பெஞ்சமின் கிரகாம் இருவரும் தான் சிறந்தவர்கள் ஆவர்.
ஒருவர் 1965 ஆ ஆண்டு 10,000 டாலர்களை ஈக்விட்டியில் முதலீடு செய்து இருந்தால் அது இப்போது 50 மில்லியன் டாலர்களாக மாறி இருக்கும் என்று கூறுகிறார் கல்லோவே. மேலும் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இவர் வாரன் பஃபேட் மற்றும் பெஞ்சமின் கிரகாம் இருவருடையைக் கொள்கையையும் பின்பற்றுபவர்கள் சிறந்த முதலீட்டாளர்களாக மாறுவர் என்று கூறினார்.
எனவே நாம் அவர்கள் இருவரும் பின்பற்றும் விதிகள் என்னவென்று பார்ப்போம்.
தரமான பங்குகளை வாங்குதல்
வாரன் பஃபேட் தரமான பங்குகளை வாங்குவதையே விரும்புவார்.
வாரன் பஃபேட்டின் முதலீடுகளைக் கூர்ந்து கவனித்தால் சிறந்த நிறுவனங்கள் ஏதுவென்று தேடுவது சிறந்த நிர்வாகத் தன்மை என்றும் அந்த நிறுவனத்தில் பங்குகளை எவ்வளவு காலத்திற்கு வைத்து இருக்கிறோம் என்பதை பொறுத்தது என்று விலங்கும் என்று கோல்வே கூறுகிறார்.
சிறந்த மதிப்பில் முதலீடு செய்தல்
முதலீட்டின் தந்தை என்று கூறப்படுபவர் பெஞ்சமின் கிரகாம். இவர் நிறுவனம் அல்லது வணிகத்தில் கவனம் செலுத்தும் போது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு குறைந்தும், உயர் ஈவுத்தொகை விளைச்சல் மற்றும் குறைந்த ஆதாய மடங்குகள் போன்றவற்றை எச்சரிக்கையாகக் கவனித்து முதலீடு செய்யும் போது எதிர்கால மிகப் பெரிய லாபத்தைப் பெற வழிவகுக்கும்.
பெஞ்சமின் கிரகாம் பங்குகளை வாங்குவது குறித்து கூறும் போது உள்ளார்ந்த மதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பதைக் கவணிக்கும் போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் அங்கு தான் கோட்டைவிடுகிறார்கள்.
பெஞ்சமின் கிரகாம் எப்படி சிறந்த முதலீட்டாளராக இருப்பது (how to be a value investor) என்ற புத்தகத்தை எழுதியது மட்டும் இல்லாமல் அதில் மிக எளியக் கருத்துக்களாக கூறியுள்ளார்.
பிறர் பேராசையுடன் இருக்கும் போது பயப்பட வேண்டும்
சந்தைப் பெரிய அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படும் போது பலர் பேராசையாக நிறைய முதலீடு செய்வர். நாம் அப்போது தான் பயப்பட வேண்டும். ஆனால் நிறுவனத்தின் அடித்தளத்தில் எந்த மாற்றமும் நிகழாத வரையில் சிறந்த பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்டத் தேவை இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பிளாக் ஸ்வான் நிகழ்வுகள் மட்டும் தான் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த லாபத்தை அளிக்கும். இது சந்தை முறையான பாதையில் செல்லும் போது மட்டுமே சரியாக நடக்கும்.
முதலீட்டாளர்கள் மந்தமான மன நிலையை தவிர்க வேண்டும். அப்படி என்றால் சரியான வாய்ப்பு கிடைக்கும் போது முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.வாரன் பஃபேட் கூறியதை போலச் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் நிறைய முறை நமது கதவை தட்டும் அதற்காகப் பேராசையா? பயமா என்று கணித்து முதலீடு செய்ய வேண்டும். அது தான் உங்களை பணக்காரர் ஆக்குவதற்கான ரகசியம் என்றும் கோலோவே கூறினார்.
பணத்தை இழக்க வேண்டாம்
சந்தைக் கீழே விழும் போது இந்த விதியைச் செயல்படுத்துவது கடினம் தான். முதலீடு என்றால் அது நீண்ட கலத்திற்கு முதலீடு செய்வதே இதைப் பிற பின்பற்றும் போது வாரன் பஃபேட்டின் இரண்டு விதிகளைச் சரியாக பின்பற்ற வேண்டும்
விதி 1: பணத்தை ஒருபோதும் இழக்காதீர்கள்.
விதி 2: முதல் விதியை ஒருபோதும் மறக்காதீர்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications