உங்கள் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இந்த வசதி எல்லாம் இருக்கிறதா? தெரிவைல்லை என்றால் அடுத்த முறை ஏடிஎம் செல்லும் போது பயன்படுத்தி பாருங்கள்.
ஏடிம் மூலம் பணம் எடுப்பது, கணக்கைச் சரிபார்ப்பது போன்ற வசதிகள் மட்டும்தான் இருக்கிறது என்று இருக்கிறீர்களா?
உங்கள் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் பின் வரும் வசதிகள் எல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நிரந்தர வைப்பு நிதி திட்டம்
ஏடிஎம் இயந்திரத்தில் நிரந்தர வைப்பு நிதி கணக்கை திறக்கவும் என்ற தெரிவை தேர்வு செய்து முதலீடு செய்யக் கூடிய காலத்தைத் தேர்வு செய்வது எவ்வளவு தொகை என்பதை உள்ளிடுவதன் மூலம் எளிதாக நிரந்தர வைப்பு நிதி கணக்கை திறக்க இயலும்.
அதே போன்று நிரந்தர வைப்பு நிதி கணக்கில் நீங்கள் வைத்துள்ள பணத்தை இடையில் எடுக்கவும் இயலும்.
மொபைல் ரீசார்ஜ்
மொபைல் ரீசார்ஜ் என்னும் தெரிவை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் மொபைல் என் அல்லது உங்களது நண்பர், உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ரீசாரஜ் செய்யலாம்.
வருமான வரி
குறிப்பிட்ட சில வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக மட்டும் வருமான வரி செலுத்த இயலும். இதற்கு அந்த வங்கியில் உள்ள உங்கள் கணக்கில் இந்தச் சேவைக்காக பதிவு செய்தல் வேண்டும்.
இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம்
எல்ஐசி, எச்டிஎப்சி, எஸ்பிஐ லைஃப் போன்ற நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி உள்ள வங்கி ஏடிஎம்களில் மட்டும் ‘பில் பே'என்பதைத் தேர்வு செய்து அதில் தங்களது இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்வு செய்து, உங்களது பாலிசி என், பெயர், பிறந்த தேதி, மொபைல் என், பாலிசி கட்டணம் போன்றவற்றை உள்ளிட்டு உறுதி செய்வதன் மூலம் எளிதாக பீரிமியம் தொகையைச் செலுத்தலாம்.
கணக்கில் பணத்தை இடுதல்
100, 500, 1000 ரூபாயாக ஒருவர் 49,900 ரூபாய் வரை ஏடிஎம் கியாஸ்க் இயந்திரங்கள் மூலம் ஒரே நேரத்தில் கணக்கில் பணத்தை டெபாஸிட் செய்ய இயலும்.
தனிநபர் கடன்
சில தனியார் வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக முன் அனுமதிக்கப்பட்ட தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
இதன் மூலம் அளிக்கப்படும் கடன் பல மேம்பட்ட பகுப்பாய்வுகளுடன் ஆராய்ந்து அளிக்கப்படுகிறது.
பண பரிமாற்றம்
இணையதள வங்கி அல்லது வங்கி சேவையில் பயனாளியின் கணக்கை பதிவுசெய்து வைப்பதின் மூலமாகத் தினமும் 40,000 ரூபாய் வரை ஏடிஎம் வாயிலாக பண பரிமாற்றம் செய்ய முடியும்.
பில் கட்டணம்
டெலிபோன், மின்சாரம், கேஸ் மற்றும் பிற பில்களை முன்பே இணையதள வங்கி சேவைகளில் பதிவு செய்து வைப்பதன் மூலம் ஏடிஎம் வழியாக எளிதாகச் செலுத்த இயலும்.
ரயில் டிக்கெட்
எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி போன்ற சில பொதுத் துறை வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் நெடுந்தூரம் செல்லக் கூடிய ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை மட்டும் புக் செய்ய இயலும்.


Click it and Unblock the Notifications