அலுவலக வேலைகளின் போது‘முடியாது’ என்று சொல்வது சரியா? தவறா?

தொழில் முறை உறவுகளை பகைத்துக் கொள்ளாமல் "முடியாது" என எப்படிச் சொல்வது என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுவலக வேலைகளின் போதுஉதவியை மறுப்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் ஸிடீவ் ஜாப்ஸ் கூறியதைப் போல "முடியாது என்று சொன்னால் தான் உங்களின் மிக முக்கிய வேளைகளில் நீங்கள் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்".

"டீமுக்கு ஒத்துவரமாட்டான்" என்ற அவப் பெயரில்லாமல் அல்லது தொழில் முறை உறவுகளை பகைத்துக் கொள்ளாமல் "முடியாது" என எப்படிச் சொல்வது என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

"பாஸ்"கிட்ட எப்படி முடியாதென்று சொல்லலாம்?

ஒருமுறை அதைச் செய்யும் முன் அதன் விளைவுகளைப்பற்றி நான்கு அலசுங்கள். நேரம் போதாமையோ அல்லது தேவையான திறமை உங்களிடத்தில் இல்லாமலோ இருந்தால் மட்டுமே நீங்கள் அதைச் செய்ய வேண்டும்.

உங்கள் அதிகாரி அதாவது பாஸ் -க்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை அல்லது சரியான வசதிகளை ஏற்படுத்த உதவுங்கள். நேரடியாக இல்லாமல் முடிந்த வரை மறைமுகமாகப் பிற வழிகளில் உதவவோ அல்லது உங்கள் டீம் உறுப்பினர் ஒருவரை உதவிக்கு அனுப்பியோ உதவ முற்படுங்கள்.

 

நேரடியாகச் சென்று சற்று பவ்யமாக கூறுங்கள்

நேரடியாகச் சென்று சற்று பவ்யமாக கூறுங்கள்

மின்னஞ்சலில் இதைத் தெரியப்படுத்தாமல் நேரடியாகச் சென்று சற்று பவ்யமாக சூழ்நிலையைத் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் மின்னஞ்சலை படிக்கும் போது தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும் விலாவரியாக விலக்குவதை தவிருங்கள். அது மேலும் மேலும் விவாதங்களை வளர்த்து எதிர்மறையாகப் போய் முடிய வாய்ப்புள்ளது.

உடன் பணிபுரிபவரிடம் எப்படி மறுப்பு தெரிவிப்பது

உடன் பணிபுரிபவரிடம் எப்படி மறுப்பு தெரிவிப்பது

நேரடியாகப் பேசுங்கள். அவர்களை செவிமடுத்துக் கேளுங்கள். நன்றாகப் புரிந்து கொண்ட பிறகு வெளிப்படையாக உங்களின் இயலாமைக்கான காரணங்களைக் கூறுங்கள்.

ஒவ்வொரு தேவையையும் தனித்தனியாகப் பரிசீலித்து வேறு பிற உதவிகள் மூலம் உங்களின் மன ரீதியான அசைவுகரியத்தை குறைத்துக் கொள்ள முயலுங்கள்.

 

தாழ்த்திக் கொள்ள முயலுங்கள்

தாழ்த்திக் கொள்ள முயலுங்கள்

உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள முயலவேண்டும். ஏனென்றால் உங்கள் சக பணியாளர் நீங்கள் பாராட்டை பெற முயலுவதாக அல்லது சரணடைந்து விட்டதாகத் தவறாக நினைக்கலாம் அல்லது உங்களைப் பணிய வைக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் செய்யலாம்.

நடைமுறைக்கு ஒத்துவராதவை

நடைமுறைக்கு ஒத்துவராதவை

"பார்க்கிறேன்" "முடிந்த வரை முயற்சி செய்யுறேன்" போன்ற நடைமுறைக்கு ஒத்துவராத நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படுத்த முயலாதீர்கள். நீங்கள் முடியாது என மறுக்கும்போது அவருக்கு வேறு வழிகள் மூலம் தன் வேலையைச் செய்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும்.

உதவிக் கோருங்கள்

உதவிக் கோருங்கள்

உங்கள் மேலதிகாரி அல்லது மேலாளரை அணுகி உங்கள் வேலைகளை மறுவரிசைப் படுத்தச் சொல்லி உதவிக் கோருங்கள். இதன் மூலம் வேறொரு வேலையை விட்டுத்தரவோ அல்லது ஒதுக்கிவிடவோ வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ஜூனியருக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பது?

உங்கள் ஜூனியருக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பது?

உங்களிடம் வைக்கப்படும் கூடுதல் விடுப்பு போன்ற கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் போது சற்றே மென்மையாகவும் பவ்யமாகவும் கூறவும்.

நீங்கள் பேசும் தொனி உங்கள் உறவுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

 

அதிகம் பேசுங்கள்

அதிகம் பேசுங்கள்

இதன் மூலம் உங்கள் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளவும் அவருக்கு ஆர்வக் குறைவு ஏற்படாமல் இருக்கவும் நீங்கள் அவருடைய கோரிக்கையைத் தான் நிராகரிக்கிறீர்கள் அவரை அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ளவும் பெரிதளவில் உதவும்.

மறுத்த பிறகு அவரிடம் திறந்த கேள்விகளைக் கேளுங்கள். அவருடைய பதிலைக் கொண்டு அவர் உங்களையும் நீங்கள் சொல்லவந்த காரணத்தையும் புரிந்து கொண்டாரா என்பது தெரிந்துவிடும். இதில் குழப்பம் இருந்தால் அதனை முன்கூடியே களைந்துவிட மறந்துவிடாதீர்கள்

 

வாடிக்கையாளர்களுக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பது

வாடிக்கையாளர்களுக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பது

ஒரு வாடிக்கையாளரிடம் பேசும்போது அவருக்குப் பேச தேவையான கால அவகாசத்தை அளியுங்கள். அதன் பிறகு முக்கிய விவரங்களை அவருக்கு விளக்கி அவர் புரிந்துகொண்ட திருப்தி அடைய உதவுங்கள்.

அவருக்கு மறுப்பு தெரிவிக்கும் முன் அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தி அவருக்கு உங்களால் ஆன அனைத்து வகையிலும் உதவ விரும்புகிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

ஒரு நேர்மறையான பேச்சு எப்போதுமே வாடிக்கையாளரை திருப்திப்படுத்தாது என்றாலும் எதிர்மறைப் பேச்சு டீலை கெடுக்கவே செய்யும். ஒவ்வொரு மறுப்பிற்கும் விவரமான மற்றும் கச்சிதமான விளக்கத்தைக் கொடுக்க முயலுங்கள்.

 

யாருக்குச் சரி என்று சொல்லலாம்

யாருக்குச் சரி என்று சொல்லலாம்

இது கேட்கும் நபரைப் பொறுத்து அமையும். உங்கள் மேலதிகாரி அல்லது முக்கிய வாடிக்கையாளராக இருந்தால் நீங்கள் அவருக்கு இசைவு தெரிவிக்கும் முன் ஏற்படும் சாதக பாதகங்களை அலசி ஆராயுங்கள்.

சரி என்று ஒத்துக்க கொள்ளும் போது பெரும்பாலும் நீங்கள் எதையாவது செய்யவேண்டிவரும் என்றாலும் அது அவரிடம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த அதிகப்படியான வேலை எவ்வாறு உங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்பதையும் யோசியுங்கள்.

 

முடிந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும்

முடிந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும்

உங்களால் நேரம் ஒதுக்க முடிந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவரைக் கைவிட்டுவிடாமல் உங்கள் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும்.

உங்கள் நிறுவனத்திற்கு, உங்கள் டீம் அல்லது அணிக்கு மற்றும் உங்களுக்கும் நல்ல பலன்களை தரக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி பின்னர் ஒத்துக் கொள்வதன் மூலம் மற்றவர்களிடமிருந்து நீங்கள் மாறுபாடு இருக்க முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why it is okay to say 'No' in office

Why it is okay to say 'No' in office
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X