மியூச்சுவல் ஃபண்டுகளில் சரியான புரிதலுடன் முதலீடு செய்துவந்தால் கண்டிப்பாக 12 முதல் 30 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் பலர். அப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் சரியான புரிதலுடன் முதலீடு செய்துவந்தால் கண்டிப்பாக 12 முதல் 30 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
நாம் இங்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து பணத்தை இழக்காமல் லட்சங்களைச் சம்பாதிக்க உதவும் ஐந்து வழிமுறைகளை இங்குப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எவ்வளவு பணம் வேண்டும்..?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது பெறும் தொகை தேவை என்று பலர் நினைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் முறையான முதலீட்டுத் திட்டங்களை பயன்படுத்திக் குறைந்தது 500 ரூபாய் முதல் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்வதினால் சிறப்பான லாபத்தைப் பெற இயலும்.
முறையான முதலீட்டுத் திட்டம்
SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.
அதற்காக இதன் மூலம் முதலீடு செய்யும் போது பணத்தை இழக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூற இயலாது. நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கை பொருத்து முறையான முதலீட்டுத் திட்டங்களில் லாபம் பெறலாம்.
நிபுணராக இருக்க வேண்டுமா?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் நீங்கள் நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. நிதி ஆலோசகர் அல்லது மேலாளர் அதை கவனித்துக்கொள்வர். எனவே நல்ல ஆலோசகரைத் தேர்வு செய்வது நல்லது.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் ஈக்விட்டியில் முதலீடு செய்வதா..?
மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் பலர் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்வது என்று நினைக்கின்றனர். இது ஈக்விட்டி மற்றும் கடன் என்று இரண்டு விதமாக முதலீடு செய்வதாகும். நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கை பொருத்து முதலீடுகள் மாறும்.
ஐந்து நட்சத்திர மதிப்பீடு நிதி திட்டங்கள்
ஐந்து நட்சத்திர மதிப்பீடு நிதி திட்டங்கள் முதலீடு செய்வது கண்டிப்பாக நல்ல லாபத்தை அளிக்கும் என்று ஏதும் இல்லை. இந்த மதிப்பீடுகள் அதன் செயல்பாடுகளைப் பொருத்து மாறிக்கொண்டே இருக்கும்.


Click it and Unblock the Notifications