பணியாளர்களின் செயல் திறனை கண்டுபிடித்து அந்த செயல்திறன் நிறுவனத்திற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்தே அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் போது அவர்களின் செயல்திட்டங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
அப்போது பணியாளர்களின் செயல் திறனை கண்டுபிடித்து அந்த செயல்திறன் நிறுவனத்திற்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்தே அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
இப்படி இருந்தும் பல பணியாளர்கள் "பெஞ்ச்"-இல் அமரவைக்கப்பட்டு வேலையில் இருந்து துரத்தி அடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இதில் சாதாரண ஊழியராக இருந்தாலும், பெரும் நிறுவனங்களின் தலைமை பெருப்பில் உள்ள சைரஸ் மிஸ்திரி போன்ற அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிக்கினால் போதும் உடனடியாக வெளியேற்றப்படுவோர்.
இப்படி ஒரு சூழலை நீங்கள் எப்படித் தவிர்ப்பது?
திறமையை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்?
பணியாளர்கள் தற்போதுள்ள புரொஜக்டில் இல்லாவிட்டாலும் தங்களின் திறமையை நிரூபிக்க நேரத்தை செலவிட வேண்டும். பணியாளர்கள் இதை எப்படி கையாள வேண்டும் என வல்லுனர் ஈ.டி.பிருந்தாதாஸ் விளக்குகிறார்.
பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
அறிமுகம் ஆகின்ற புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் போக்குகளின் மீது பயிற்சிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் அமர்கள் மற்றும் படிப்புகள், செயல்படுத்துதல், வீடியோக்கள் மற்றும் பகிர்வு மூலம் நிறுவனத்தின் பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என இன்போசிஸ் நிறுவனத்தின் ரிட்டர்ட் லோபோ கூறியுள்ளார்.
இண்டர்நெட் ஆப்ஸ்
வொர்க் பெட்டர் டிரைனிங் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்வப்னில்காமத் இதுகுறித்து கூறும்போது தொழில்நுட்ப நிறுவனங்களால் புரொஜக்டுக்கு உரிய இண்டர்நெட் ஆப்ஸ் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த பயன்பாடுகள் நிறுவனத்தின் உற்பத்தி திறனுக்கு மட்டுமின்றி பணியாற்றுபவர்கள் கற்று கொள்ளவும் பயன்படுகிறது என கூறியுள்ளார்.
ஊழியர்கள் தீவிரமாக குறுகிய கால திட்டங்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி நிறுவன இலக்குகளை நோக்கி செல்ல முடியும் என்று லோபோ மேலும் கூறியுள்ளார்.
நேரம் ஒதுக்க வேண்டும்
நிறைய விஷயங்களில் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் இது பணியாளர்களின் திறமைகளை மேலும் வளர்த்து கொள்ள உதவும் என்றும் காமத் கூறியுள்ளார்.
நிறுவனத்திற்கு தொடர்புடைய பயிற்சி பெற்ற சான்றிதழ்கள்
பல நிறுவனங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும்போது தங்கள் நிறுவனத்திற்கு தொடர்புடைய பயிற்சி பெற்ற சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கின்றனர். மேலும் அதற்கான மேல்பயிற்சிகளையும் வழங்குகின்றனர். இந்த பயிற்சியால் பணியாளர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராம் வைத்தியநாதன் என்பவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications