உலகளவில் வெற்றிகரமான முதலீட்டாளராக வேண்டுமா?

உள்நாட்டுச் சந்தை மிகவும் உறுதியான வாய்ப்புகளை வழங்கும் போது, அதையும் தாண்டி யோசிக்கக் காரணம் எதுவும் தேவையா?

இந்திய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக் காரணங்கள் உள்ளன. பங்குச் சந்தையில் தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு எருதின் (Bull) ஆதிக்கம் இருக்கும் என வல்லுநர்களின் கணிப்பு சொல்கிறது.

உள்நாட்டுச் சந்தை மிகவும் உறுதியான வாய்ப்புகளை வழங்கும் போது, அதையும் தாண்டி யோசிக்கக் காரணம் எதுவும் தேவையா? அது தவறாகவும் கூட இருக்கலாம்.

உலகளவில் வெற்றிகரமான முதலீட்டாளராக வேண்டுமா?

முதலீடுகளை உலகளவில் வகைப்படுத்தி விடுவது இன்றைய நாட்களில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. உள்நாட்டுச் சந்தை சிறப்பாக இருந்தாலும் கூட இதைச் செய்வது நல்லதே!

இந்திய ரிசர்வ் வங்கியும் கூட, ஒரு இந்தியர் ஒரு ஆண்டில் ரூ.1.5 கோடி வரையிலும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை சிறப்பான முறையில் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.

வெளிநாடுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

வெளிநாடுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

வளர்ந்து வரும் இந்திய சந்தையின் மிகப்பெரிய புள்ளிகள் கூட, இதே நிலை தொடர்ந்து நீடித்திருக்கும் என்று சொல்ல மாட்டார்கள். இந்த வளர்ச்சி தொடர்ச்சியான ஆண்டுகளில் இருந்தாலும் கூட, இதில் வீழ்ச்சியும், அதிர்ச்சிகளும் இருக்கும் என்பதே உண்மை.

எந்த ஒரு சந்தையும் முதலீட்டாளர்களின் பட்டியலில் ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது இல்லை என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.

எனவே, இந்திய சந்தை ஒழுங்கின்றி குலையும் நேரத்தில், இந்திய கூடாரத்தை நாடி வந்த அனைவரின் முதலீடுகளும் பாதிக்கப்படும் என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல், பெரும் வளர்ச்சி ஏற்பட்ட காலங்களிலும் கூட, நம்முடைய பொருளாதாரத்தை விட வேறு சில நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளருவதையும் நாம் அறிவோம்.

 

பன்முகத்தன்மை / மாற்றி யோசிப்பதே வழி!

பன்முகத்தன்மை / மாற்றி யோசிப்பதே வழி!

வேறு நாட்டில், வேறு நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்யும் போது பன்முகத்தன்மையானது பன்முனையுள்ளதாக இருக்கும்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் வளர்ச்சியில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் மற்றும் பலன் அடைவீர்கள்.

இந்தச் சந்தைகள் மதிப்புமிக்கவையாகவும், நிலையானவையாகவும் மற்றும் வேகமாக வளரும் நிறுவனங்களாக இருந்து உங்களுடைய துறையின் நிலைத்த வளர்ச்சியாகவும் இருக்கின்றன.

தனித்தன்மையான முதலீடுகளுக்கான வாய்ப்புகளை இந்தியாவில் அணுக முடிவதில்லை என்பதும் மற்றொரு பலனாகும்.

 

வரி விவகாரங்கள்

வரி விவகாரங்கள்

வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகளின் மேலான மூலதன இலாபத்திற்கு இங்கே வரிகள் உள்ளன. வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக் கொடுக்கப்படும் என்பதை பட்ஜெட் தெளிவுபடுத்தியுள்ளது.

வெளிப்படுத்தாத வெளிநாட்டுச் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் வெளிப்படுத்தாத வெளிநாட்டுச் சொத்துகளுக்கும் அதிகபட்ச விகிதத்தில் வரி வசூலிக்கப்படும்.

வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்தின் மூலமாக அடைந்த இலாபமானது மற்றும் 12 மாதங்களுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தால் (பங்குகள் மற்றும் பிரிவுகள்) அல்லது 36 மாதங்கள் வைக்கப்பட்டிருந்தால் (வேறு ஏதாவது வகையில்), இந்தியாவில் அவை நீண்ட கால மூலதன இலாபமாகக் கருதப்பட்டு, 20% வரி வசூலிக்கப்படும்.

சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைத்த இலாபம் குறைந்த காலத்திற்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், அவை குறைந்த-கால மூலதன இலாபமாகக் கருதப்பட்டு, அதற்கேற்ற வகையிலான வரிகள் விதிக்கப்படும்.

 

தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டங்களால் (Liberalized Remittance Scheme - LRS) எப்படி உதவ முடியும்?

தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டங்களால் (Liberalized Remittance Scheme - LRS) எப்படி உதவ முடியும்?

இந்த LRS திட்டத்தின் மூலம், இந்தியாவில் வசித்து வரும் வயது வராதவர்கள் உட்பட்ட, அனைத்துத் தனிநபர்களும், ஒரு நிதியாண்டிற்கு 250,000 டாலர்களை எந்தவொரு நடப்பு அல்லது மூலதன கணக்கிற்கோ அல்லது இரண்டும் சேர்ந்த கணக்கிற்கோ செலுத்த அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

அதாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமலேயே வெளிநாடுகளில் பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யவும் மற்றும் சொத்துக்களை வாங்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு.

குறிப்பிட்ட வகையிலான செலவினங்களுக்காக அனுப்பப்படும் தொகைகளை LRS உள்ளடக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக 25,000 டாலர்கள் மட்டுமே ஒருவரால் இந்தியாவிற்கு வெளியில் செலுத்த முடியும் என்ற நிலையிலிருந்து, பெரிதும் விலக்களிப்பதாக இந்த LRS வரையறை அமைந்துள்ளது.

அதே போல, வெளிநாட்டுக் கல்விக்காக ஒரு ஆண்டிற்கு 100,000 டாலர்கள் செலுத்தலாம் என்ற அளவீடும் 250,000 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

உலகளாவிய பங்குகளில் முதலீடு செய்தல்

உலகளாவிய பங்குகளில் முதலீடு செய்தல்

பங்குகளை நேரடியாக வாங்க வேண்டுமென்றால், இந்த வசதிகளைச் செய்து தரக்கூடிய உள்ளூர் தரகரிடம் வியாபாரக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு இந்த வசதிகளை பல்வேறு இந்திய தரகு நிறுவனங்களும் தங்களுடைய வெளிநாட்டு வியாபார பங்குதாரர்களுடனான இணைப்பின் மூலம் வழங்குகின்றன.

இந்த வியாபார தளங்கள் உலகெங்கிலும் 36 விதமான பரிமாற்றங்களுக்கான வழிகளை வழங்குகின்றன. இந்திய தரகர்கள் இடைத்தரகர்களாக மட்டுமே செயல்படுகின்றனர். உண்மையான வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் நடவடிகளை அந்தப் பங்கு சந்தையில் உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டுத் தரகரே செய்கிறார்.

இதில் பதிவு செய்தவர்க்கு, நீங்கள் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வாடிக்கையாளர் தகவல்களை கொடுத்து, சிறிய அளவில் கட்டணமும் செலுத்த வேண்டும். பரிவர்த்தனை செய்ய விரும்பும் நாணயத்தையும் இதில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

உங்களுடைய விண்ணப்பம் வெளிநாட்டு பங்குச் சந்தையின் பங்கு தரகருடன் பதிவு செய்யப்பட்ட பின்னர், உங்களுக்கு வாடிக்கையாளருக்கான அடையாளமும், வங்கி கணக்கு விபரங்களும் கொடுக்கப்படும். இப்பொழுது அந்த வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த உதவும், A2 படிவத்தை நிரப்ப வேண்டும்.

வெளிநாட்டுத் தரகர் பணத்தைப் பெறும் போது, உங்களுடைய பரிவர்த்தனை தளம் செயலாக்கப்படும்.

 

உலகளாவிய நிதிகளில் முதலீடு செய்தல்

உலகளாவிய நிதிகளில் முதலீடு செய்தல்

வெளிநாட்டு முதலீடு என்ற அனுபவம் உங்களைச் சமாதானம் செய்யும் அம்சமாக இருக்கும் பட்சத்தில், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதே உங்களுக்கான சிறந்த வழிமுறையாக இருக்கும்.

LRS திட்டத்தின் கீழ், உங்களுக்கு வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, அனைத்து வகையான மாற்றக்கூடிய பரிவர்த்தனை செய்யப்பட்ட நிதிகளைச் சென்றடையும் வழிகளும் கிடைக்கும். இந்த நிதிகள் Nifty ETF அல்லது Sensex ETF போன்றே பரபரப்பில்லாமல் பங்குகளுக்கான அட்டவணைகளில் முதலீடு செய்பவையாக இருக்கும்.

முன்னணி நிறுவனங்களான iShares மற்றும் வான்கார்டு (Vanguard) ஆகியவை - அமெரிக்க சந்தைகளுக்கே உரித்தான பங்குகள், வளர்ந்து வரும் மற்றும் இதர உலகளாவிய பங்குகள், REITs-களில் முதலீடு செய்யும் பொருட்கள், சரக்குகள் மற்றும் பத்திரங்கள் என இவற்றில் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன.

பரபரப்பில்லாமல் நிர்வகிக்கப்பட்டு வருபவையாக இந்தப் பங்குகள் இருப்பதால், குறைவான செலவுகளே இவற்றிற்காக வசூலிக்கப்படுகின்றன. இந்தப் பங்குகளை விற்பனை செய்யும் போது வெளிநாட்டுப் பங்குகளை விற்பனை செய்யும் போது விதிக்கப்படும் அளவே வரிகள் விதிக்கப்படுகின்றன.

எனவே, அடுத்த முறை நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் நினைவுப் பரிசுகளை வாங்குவதோ நில்லாமல், நல்ல முதலீடுகளுக்கான வாய்ப்புகளையும் கவனியுங்கள். இது உங்களுக்குப் பலன் தரக்கூடியதாக இருக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+