2000 ரூபாய், 100 மற்றும் அதற்கான குறைவான ரூபாய் நோட்டுகளைத் தவிர பிற ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி சென்ற செவ்வாய்க்கிழமை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அறிவித்தது குறிப்பிடத்த
ஞயாயிற்றுக்கிழமை முதல் புதிய பாதுகாப்பான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதை வழங்குவதற்காக வங்கிகளை முன்கூடியே ஏற்பாடு செய்யுமாறு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் பணம் வழங்கும் போது பெண்கள் மற்றும் முதியோருக்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சில எஸ்பிஐ வங்கிகளின் கிளைகளில் மட்டும் இரண்டு நாட்களாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய், 100 மற்றும் அதற்கான குறைவான ரூபாய் நோட்டுகளைத் தவிர பிற ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி சென்ற செவ்வாய்க்கிழமை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடிகள் குறைக்கப்படும்
100 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதில் வங்கிகள் பல சிரமங்கள் சந்தித்து வரும் நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ரொக்க கையிருப்பு மற்றும் சந்தையில் பணப்புழக்கம் மேம்படுத்தப்படும்
ஆசிடப்பட்ட ஆண்டும், ஆளுநரும்
மத்திய வங்கியின் அறிவிப்பின் படி இந்த புதிய ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியிடப்படுகிறது என்றும் பணம் அச்சிடப்பட்ட ஆண்டாக 2016 ஆம் ஆண்டும், சுத்தமான இந்தியா திட்டத்தின் குறியீடும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய மாற்றங்கள்
புதிய 500 ரூபாய் நோட்டு வண்ணம், அளவு, வடிவமைப்பு, பாதுகாப்பு குறியீடுகளின் இருப்பிடம் போன்றவை வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய 500 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம், கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. இது பழைய 500,1000 ரூபாய் நோட்டிலும் இடம்பெற்றிருந்தது.
மகாத்மா காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
பணத்தின் மதிப்பான 500-இன் நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த எண் பச்சை - நீலம் நிறமாக மாறக்கூடியதாக இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது.
வலது புரத்தில் அசோகர் தூண் சின்னமும், ஆர்பிஐ சின்னமும் மாற்றப்பட்டுள்ளது.
புதிய 1000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கை கோள் உள்ளதைப் போன்று உள்ளதைப் போன்று புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டு இருக்கும்.
கண்பார்வையற்றோருக்கான குறியீடுகள்
செதுக்கு அல்லது மகாத்மா காந்தி உருவப்படம், அசோகா தூண் சின்னம் எழுப்பியது அச்சிடும், கோடுகள் மற்றும் அடையாள குறி தொடர்ந்து இருக்கும்.
கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் 5 கோடுகளும் வலதுபுறத்தில் வட்டமாக ரூபாய் 500 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications