வேலையில் உசேன் போல்ட் மாதிரி படு வேகமா முன்னேறனுமா ?

எப்படியோ வேலை ஒன்று கிடைத்தால் அதில் முன்னேற படாதபாடு படவேண்டியுள்ளது. ஆனால் இதில் சீக்கிரம் முன்னேற வழிகள் உண்டு.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் படிப்பை முடித்துவிட்டு எண்ணற்ற கனவுகளுடன் வேலை தேடும் படலத்தைத் தொடங்குகின்றனர்.

வேலையில் உசேன் போல்ட் மாதிரி படு வேகமா முன்னேறனுமா ?

எப்படியோ வேலை ஒன்று கிடைத்தால் அதில் முன்னேற படாதபாடு படவேண்டியுள்ளது. ஆனால் இதில் சீக்கிரம் முன்னேற வழிகள் உண்டு. அவை என்னென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

வேலையில் போட்டி

வேலையில் போட்டி

வேலையில் மற்றவர்களைக் காட்டிலும் சீக்கிரம் முன்னேற ஆசையா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய இந்தத் தினசரி யோசனைகள் உங்களைத் திறமையாக போட்டியிடவும் உங்கள் சக பணியாளர்களை முந்தவும் உங்களுக்கு உதவும்.

ஒரு அனுபவசாலியை ஆலோசனைக்கு வைத்துக் கொள்ளுங்கள்

ஒரு அனுபவசாலியை ஆலோசனைக்கு வைத்துக் கொள்ளுங்கள்

உங்களை நன்கு வழி நடத்துபவர் ஒருவரைச் சார்ந்திருப்பது நல்லது. அவர் உங்களுக்கு நீங்கள் பணி செய்யும் துரையின் நுணுக்கங்களை உங்களுக்கு விளக்குவார். எனவே ஒரு சரியான மனிதரை உங்கள் வாழ்வின் முதற்கட்டங்களில் வழிகாட்டியாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

அமைதியான பார்வையாளராக இருங்கள்

அமைதியான பார்வையாளராக இருங்கள்

நீங்கள் குறைவாகப் பேசும்போது மற்றவர்கள் முன் அர்த்தமற்ற உளறல்களைத் தவிர்க்க முடியும். சுற்றியிருப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கும்போது நீங்கள் திறமைசாலிகளை நடுவே உங்களை அமர்த்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். எனவே உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நீங்கள் என்ன கூறுவீர்கள் என காத்திருப்பார்கள்.

உங்கள் வேலைப் பேசட்டும், நீங்கள் அல்ல

உங்கள் வேலைப் பேசட்டும், நீங்கள் அல்ல

பேச்சை விடச் செயலால் மற்றவர்களைக் கவருங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து அமைதியாய் இருந்து அதற்கான பலன்கள் கிட்டும்போது உங்கள் திறமையினை மற்றவர்கள் தாங்கலாகவே புகழ்வார்கள்.

அருமருந்தாய் மாறுங்கள்

அருமருந்தாய் மாறுங்கள்

மற்றவர்கள் உங்களை சார்ந்திருக்கச் செய்யுங்கள் மற்றவர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு நாடும் ஒரு கடைசி ஆதாரமாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். அனைவரையும் நீங்கள் ஒருவர் மட்டுமே நம்பாத தகுந்தவர் என எண்ண வையுங்கள்.

குறிக்கோளில் குறியாய் இருங்கள்

குறிக்கோளில் குறியாய் இருங்கள்

உங்கள் குறிக்கோளில் தெளிவாய் இருங்கள். அதனைக் கவனமுடன் தொடர்ந்து அதற்கான சிறு சிறு குறிக்கோள்களை நோக்கிப் பணி செய்துகொண்டே இருங்கள். நிலையாய் ஒரு இடத்தில் தங்கி விடாமல் நகர்ந்துகொண்டே இருங்கள். நிலையாய் இருப்பது வேறு ஒன்றும் செய்ய்யமல் இருப்பது வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிக்கல்களைத் திறமையுடன் தீர்த்திடுங்கள்

சிக்கல்களைத் திறமையுடன் தீர்த்திடுங்கள்

மக்களைச் சமாளிக்கும் சரியான வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சிக்கல்களை திறமையாகக் கையாண்டு அது சச்சரவுகளில் முடியாமல் தவிர்த்திடுங்கள். வேலையில் உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் அல்லது விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அது சுமூகமாக முடிவதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் மேலாக மற்றவர்களுடன் நல்ல முறையில் பழகுவதால் அவர்களுடனான உறவு நீடித்திருக்க முயற்சி செய்யுங்கள்.

வாய்ப்புகளை மற்றவர்களுக்கு முன் கண்டுபிடியுங்கள்

வாய்ப்புகளை மற்றவர்களுக்கு முன் கண்டுபிடியுங்கள்

மற்றவர்கள் செய்ய முடியாததை அல்லது யாரும் செய்யாததை செய்யுங்கள். இந்த உலகத்திற்கு இதற்கு முன் யாரும் பார்த்திராத ஒன்றைக் காண்பியுங்கள். இது குறைந்த நேரத்தில் உங்களை ஒரு கதாநாயகனாக மாற்றிவிடும்.

உங்கள் தொடர்புகளை பெருக்கி மதிப்பளியுங்கள்

உங்கள் தொடர்புகளை பெருக்கி மதிப்பளியுங்கள்

வரும் எதிர்காலத்தில் உங்களுக்கு தேவைப் படுபவர்கள் யார் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. அனைவரும் விரும்பிப் பழகும் நபராக இருங்கள். உங்களுடன் பணிசெய்பவர்களுடன் அன்பாகவும் நல்ல முறையிலும் பழகி நன்மதிப்பைப் பெறுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+