உங்கள் வாழ்க்கையின் இளம் வயதில் வெற்றி பெற எளிய வழிகள்..!

தொழில் அல்லது வேலையில் நுழைந்ததும் அது ஒரு மிகவும் போட்டி மிக்க கடுமையான சூழல் என்பதை உணர்வீர்கள்.

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் இளம் வயதிலேயே வெற்றியை விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.

நீங்கள் உங்களுடைய தொழில் அல்லது வேலையில் நுழைந்ததும் அது ஒரு மிகவும் போட்டி மிக்க கடுமையான சூழல் என்பதை உணர்வீர்கள். அதனைக் கடந்து செல்வது எளிதுதான் என்றாலும், ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் விரைவாக முன்னேற எந்த ஒரு உத்திரவாதமோ அல்லது குறுக்கு வழியோ இல்லை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் மூலம் நீங்கள் உழைத்த கடின உழைப்பிற்குத் தக்க பலன்களை உங்கள் சக பணியாளர்களை விட விரைவாகவே பெற முடியும்.

சார்ந்திருக்கக் கூடிய நம்பகத்தன்மை

சார்ந்திருக்கக் கூடிய நம்பகத்தன்மை

உங்களைச் சுற்றியிருப்பவர்களை குறிப்பாக உங்கள் மேலதிகாரி அனைத்திற்கும் தீர்வாக உங்களை நம்புமாறு நடந்துகொள்ளுங்கள். அனைவரும் தங்களுடைய தேவைகளுக்கு உங்களை அதிகம் நம்புமாறு இருக்க விரும்புங்கள்.

உங்கள் வேலைப் பேசட்டும், உங்களை விட..

உங்கள் வேலைப் பேசட்டும், உங்களை விட..

உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் பணிவு அல்லது அடக்கம் உங்களின் வெற்றிகளைப் பார்த்து மற்றவர்களை மேலும் மேலும் உங்களைப் பற்றி பேச வைக்கும்.

அதிகம் கவனியுங்கள், குறைவாகப் பேசுங்கள்
குறைவாக நீங்கள் பேசுவதால், தவறான கருத்துக்களை நீங்கள் தவிர்க்க முடியும். அது உங்களை ஒரு நல்ல புத்திசாலியான மனிதராக மாற்றும். நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் பேச்சு இருக்கவேண்டும்.

 

உங்கள் குறிக்கோள்களின் மீதான கவனத்தை சிதறாமல் வையுங்கள்

உங்கள் குறிக்கோள்களின் மீதான கவனத்தை சிதறாமல் வையுங்கள்

உங்கள் வாழ்க்கையின் கனவின் மீது எப்போதும் ஒரு கண் ஒரு பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம் அவற்றைச் சிறு குறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள். இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம் தேக்கமின்றி நடக்கும். ஒவ்வொரு நாளையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

மற்றவர்களை சரியாகக் கையாளுவது எப்படி என்பதை அறிந்துவைத்துக் கொள்ளுங்கள். உறவுகளில் சிக்கல்களை தீர்த்து அவை சண்டையாக மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் உள்ளக் கருத்து வேறுபாடுகளை சச்சரவுகளைக் களைந்து நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதன் மூலம் உறவுகள் நீடிக்கும்.

தொடர்பை மதியுங்கள்

தொடர்பை மதியுங்கள்

நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தொடர்பையும் மதியுங்கள்
எங்கே சென்றாலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யார் எப்போது நம் வாழ்வில் தேவைப் படுவார்கள் என்பது நமக்குத் தெரியாது. அனைவரும் நினைவில் கொள்ளும் ஒரு நபராக இருக்க முயலுங்கள். அனைவரும் இணைந்து செயல்புரிய விரும்பும் ஒரு நபராக இருங்கள்.

வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்

வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்

வாய்ப்புகளை மற்றவர்களுக்கு முன் கண்டறியுங்கள்
மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலைச் செய்யவும் முயற்சி செய்யுங்கள். இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஒன்றைக் காட்ட அல்லது செய்ய முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான நாயகனாக வரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 tips to get success early in life

7 tips to get success early in life
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X