பண பரிவத்தனை செயலிகள் ஸ்மார்ட்போன் இல்லாமல் பயன்படுத்த இயலாது. எனவே இப்படி இருக்கும் சூழலில் பொது மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யவே விரும்புவர்.
பெறும் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து வணிகர்கள் பலர் பேடிஎம் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகளைப் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
ஆனால் இதுபோன்ற பண பரிவத்தனை செயலிகள் ஸ்மார்ட்போன் இல்லாமல் பயன்படுத்த இயலாது. எனவே இப்படி இருக்கும் சூழலில் பொது மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யவே விரும்புவர்.
எனவே பிஓஸ்(Point of Sale) இயந்திரங்களை வியாபாரிகள் வாங்குவது எப்படி? என்று இங்குப் பார்ப்போம்.
பிஓஎஸ் இயந்திரங்கள் வாங்க முக்கியமாக என்ன வேண்டும்?
வாடிக்கையாளர்களிடம் இருந்து எளிதாக பணத்தை பெறுவதற்கும், வாங்கிய பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கவும் இந்த பிஓஎஸ் இயந்திரங்கள் எளிதானவை.
முறையான நிர்வகிக்கப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வரும் வணிகம் வேண்டும்.
பின்னர் உங்களுடைய வியாபாரத்திற்காக வங்கியில் நடப்பு கணக்கு இருத்தல் அவசியம். மேலும் இந்த நடப்பு கணக்கு மூலம் குறைந்தது ஆறு மாதமாவது பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
1.பூர்த்தி செய்யப்பட்ட வணிகரின் விண்ணப்பப் படிவம்
2.அடையாள அட்டை
3. முகவரி சான்றிதழ்
4.வணிகம் துவங்கப்பட்டதற்கான சான்றிதழ்
பிஓஎஸ் இயந்திரங்களும், கட்டணங்களும்
பிஓஎஸ் இயந்திரம் அளிக்க சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் இலவசமாகவும் வழங்குகின்றன.
அதே நேரம் சாதனங்களுக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும். ஜிபிஆர்எஸ் கணக்கு வைத்துள்ள கருவிகளுக்கு 400 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், வயர் மூலம் இணைக்கப்பட்ட கருவிகளுக்கு 200 முதல் 800 ரூபாய் வரியிலும் வங்கியைப் பொருத்து கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
வணிகர்களுக்கு பணம் எப்போது கிடைக்கும்?
பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் வணிகர்கள் பணம் பெறும் போது, இன்று பெறும் தொகை நாளை வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அதாவது இன்று முழுவதும் வணிகர்கள் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் பெறும் தொகையை நாலைக் காலை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications