வங்கி கணக்குகளில் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கு வங்கிகளில் அதிகபட்சமாக 6 சதவீதமும், குறைந்தபட்சமாக 4 சதவீதம் வரையும் மட்டுமே வட்டியை அளிக்கின்றனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து இரண்டு வாரத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இப்படி உங்கள் வங்கி கணக்குகளில் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கு வங்கிகளில் அதிகபட்சமாக 6 சதவீதமும், குறைந்தபட்சமாக 4 சதவீதம் வரையும் மட்டுமே வட்டியை அளிக்கின்றனர். மேலும் சேமிப்பு கணக்குகளில் அளிக்கப்படும் வட்டியில் ரூபாய் 10,000 வரை வரும் லாபத்திற்கு வட்டி ஏதும் செலுத்த தேவையில்லை.
மார்ச் மாதம் வரை இந்த பணத்தட்டுப்பாடு குறையாது என்று கூறி வரும் நிலையில் 4 சதவீத வட்டி பெறும் லாபத்தை அளிக்காது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கி கணக்கில் தேங்கி நிற்கும் பணத்தை சிறந்த முறையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
வங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள்
வங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் 6 முதல் 6.5 சதவீதம் வரை முதலீட்டாளர்கள் லாபம் பெறலாம். இங்கும் வரி பிரச்சனை உண்டு. 10,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறும் போது கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும்.
ஆனால் ஆண்டு வருமான 2.5 லட்சத்திற்கும் குறைவானோருக்கு வரிவிலக்கு உண்டு.
மாதாந்திர வருமான திட்டங்கள்
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 8 முதல் 10 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். மாதாந்திர வருமான திட்டங்களை பொருத்த வரை 10 முதல் 25 சதவீதம் வரை ஈக்விட்டி முதலீடு திட்டங்களிலும், 75-முதல் 90 சதவீதம் வரை பாதுகாப்பான பத்திரதிட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை அளிக்கின்றன.
ஆர்பிட்ரேஜ் நிதிதிட்டங்கள்
முதலீட்டாளர்கள் யாருக்கெல்லாம் ஒரு வருடம் வரை முதலீடு செய்த பணம் தேவை இல்லையோ அவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இங்கு நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தை, ஈக்விட்டி நிதி திட்டங்களில் முதலீடு செய்து 1-8 சதவீதம் வரை லாபம் அளிக்கும்.
குறுகிய கால டெப்ட் ஃபண்டுகள்
8 முதல் 10 மாதம் வரை யாருக்கெல்லாம் பணம் தேவை இல்லையோ அவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 8 முதல் 9 சதவீதம் லாபத்தைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications