நாம் ஏற்கனவே பேடிஎம் வாலெட்டை பயன்படுத்துவதில் மூழ்கிவிட்டோம். எனவே வேறு செயலிகளை பயன்படுத்தச் சிரமம் இருக்கும்.
செல்லா ரூபாய் நோட்டுகளை அறிவித்ததற்குப் பிறகு பேடிஎம், மோபிகிவிக், போனோபே, பேயுமணி போன்ற பல இ-வாலெட்டு சேவைகள் பிரபலம் அடைந்துள்ளன.

இதற்குப் போட்டியாக யூபிஐ, பிஎச்ஐஎம் போன்ற செயலிகளை வெளியிட்டு அரசு வெளியிட்டுவருகின்றது. ஆனால் நாம் ஏற்கனவே பேடிஎம் வாலெட்டை பயன்படுத்துவதில் மூழ்கிவிட்டோம். எனவே வேறு செயலிகளை பயன்படுத்தச் சிரமம் இருக்கும்.
அதனை எதிர்கொள்ள பேடிஎம் நிறுவனம் யூபிஐ சேவையை தனது செயலியில் இணைத்து உள்ளது. முதற்கட்டமாக இணையம் மற்றும் ஐஓஎஸ் பயன்படுத்திச் செய்யலாம் என்றும் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.
பேடிஎம் ஏற்கனவே இணையதள வங்கி, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பணத்தை வாலெட்டுகளில் வைக்கும் சேவையை அளிக்கின்றது.
இப்போது புதிதாக வாலெட்டுகள் பயன்படுத்தி யூபிஐ மூலம் பேடிஎம் வாலெட்டில் பணத்தை எப்படி வைப்பது என்று இங்குப் பார்ப்போம்.
படிகள்:
1. பேடிஎம்.காம் என்ற இணையதளத்தில் முதலில் உள்நுழைய வேண்டும். பின்னர் பணத்தை சேர் என்ற பொத்தானை அழுத்தவும்.
2. பின்னர் நீங்கள் வாலெட்டில் எவ்வளவு தொகையை சேர்க்க வேண்டும் என்பதை உள்ளிடவும்.
3. பணத்தைச் சேப்பாதற்கான தெரிவாக இணையதள வங்கி, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் யூபிஐ என்ற தெரிவும் பார்க்க இயலும்.
4. அப்போது நாம் யூபிஐ தெரிவை தேர்வு செய்து பின்னர் உங்கள் மெய்நிகர் கொடுப்பனவு முகவரியை (VPA - Virtual Payment Address) உள்ளிட வேண்டும். மெய்நிகர் கொடுப்பனவு முகவரி என்றால் யூபிஐ செயலிகளில் நாம் உருவாக்கும் பயனர் ஐடி ஆகும்.

5. மெய்நிகர் கொடுப்பனவு முகவரியை உள்ளிட்ட பிறகு பணத்தைச் செலுத்து என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்களது யூபிஐ செயலிக்கு பணத்தை அளிப்பதற்கான அறிவிப்பு வரும்.
6. உங்கள் யூபிஐ செயலிக்கு வந்துள்ள சரியான கோரிக்கையை ஏற்பதன் மூலம் யூபிஐ வழியாக பணத்தை எளிதாக உங்கள் பேடிஎம் வாலெட்டில் சேர்க்க இயலும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications